Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

பாலு - உக்கார சீட் இல்ல - தயாநிதி!




என்ன கொடுமை பாலு இது !






நன்றி - தினமணி

கலக்கிய கலைஞர்!


தமிழகத்தில் இன்று செவ்வாய்கிழமை,பிற்பகலில் நடைப்பெற்று முடிந்த ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் தலையீட்டு முயற்சிகளினை முடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் நடவடிக்கைகள் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

இரு வார கால கெடு கொடுத்து தமிழ் பகுதிகளில் நடைப்பெற்றுவரும் சண்டைகளினை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு,

கொஞ்சமும் செவி சாய்க்காமல் தம் உதவிகளை மத்திய அரசு தொடருமெனில் தமிழக எம்.பிக்கள் தங்களின் பதவிகளினை ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது!

(எனக்கு தெரிந்து எந்த எம்.பிக்களும் அத்தனை சீக்கிரத்தில் தம் பதவிகளினை விட்டுக்கொடுத்து வந்ததாக ஞாபகமில்லை - காவிரி பிரச்சனையில் வாழப்பாடி ராமமூர்த்தியின் எம்.பி ராஜினாமா தவிர்த்து!)

மதிமுக அதிமுக தேமுதிக கட்சிகள் புறக்கணித்தது குறித்த நிருபரின் கேள்விக்கு கலைஞர் அளித்த பதிலாக “எதிர்கட்சிகளுக்கு எவர்மீதும் கோபம் இல்லை வெறுப்பு இல்லை என் மீதான கோபத்தின் காரணமாகவே புறக்கணித்திருக்கிறார்கள் என்றார்.!

சில எதிர்கட்சிகள் இக்கூட்டத்தினை புறக்கணித்தது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசினர் டி.ஆரும் கூட பேசினார்! - இது கலைஞர் ஸ்டைல் :-)

(ஆமாம் எங்க ஊருக்காரரூ என்ன கட்சியெல்லாம் ஆரம்பிச்சிடாரா? - இத்தினி நாளா எனக்கு இது கூட தெரியலயே?)


பிபிசி தமிழோசை!

ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

ஈழத்தமிழர் போராட்டத்தில் நாம் வெள்ளி விழாவைக்கொண்டாடி மகிழ்கிறோம்!

- தொல்.திருமாவளவன்!



மிக்க வருத்தமாய் சொல்லியிருந்தால் மகிழ்ச்சி!

மகிழ்ச்சியாய் சொல்லியிருந்தால் மிக்க வருத்தம்!

முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

கடலூரில் நடைப்பெற்று முடிந்த திமுக மகளிரணி மாநாடு!

முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

இவர்கள் - இளையவர்கள்!



தமிழக அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாய்...

வாழ்த்தி வரவேற்போம் இளையத்தலைமுறைகளை...!










(அப்பாடா...! நானும் நடைமுறை அரசியல் பத்தி பதிவுல எழுதிட்டேனே...........!!!)

சாராய சாவு - கண்டுபுடிச்சிட்டோம்ல!

கிட்டதட்ட 180 பேருக்கும் மேல் பலிவாங்கிய சாராய சாவின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சாராயத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளதாம்!

இது பற்றிய செய்தியாக...

தமிழகம், கர்நாடகத்தில் சாராயம் குடித்து 134 பேர் இறந்த சம்பவத்துக்கு, அதில் கலக்கப்பட்ட "மெத்தனால்'தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராய விற்பனையாளர்கள் போலீஸரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பழைய சாராய வியாபாரிக ளைக் கணக்கெடுத்து கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

100 மில்லி லிட்டர் கொண்ட எத்தில் ஆல்கஹால் அல்லது எரிசாராயம் ஆகியவற்றைக் கொண்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தால் 1,000 மில்லி எத்தில் ஆல்கஹால் கிடைக்கும்.இதைக் குடிப்பதால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் சிலர் எத்தில் ஆல்கஹாலுக்குப் பதிலாக மெத்தனாலை வாங்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இது முதலில் கண் எரிச்சலைக் கொடுக்கும். பின்னர் கண் பார்வை மங்கி உயிரைப் பறிக்கும்'' என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. "


இதோடல்லாமல் ஆய்வகங்களில் எப்படி சரியான முறையினில் சாராயம் தயாரிப்பது என்று கரெக்ட் பார்முலாவினை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழிமுறைப்படுத்தி கொடுக்கவும் ஏற்பாடு செய்ய *** உத்தரவிட்டுள்ளது!

இது நம்ம பாங்க் - STATE BANK OF INDIA


எப்போதோ சாதாரண விஷயமாகிவிட்ட செக் லீப் வாங்குவதற்கு கூட கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது?

அக்கவுண்ட் ஒபன் பண்ணவோ, அய்யோ வேண்டவே வேண்டாம்டா சாமின்னு ஓடி விடத்தான் தோன்றும் அந்தளவுக்கு கெடுபிடியான விதிகளை வைத்து அதற்கேற்றார் போலவே ஒரு அதிகாரியையும் நியமித்திருப்பார்கள்!(எப்படித்தான் புடிக்கிறாய்ங்கன்னே தெரியல!)

அப்படி ஒரு கடுமையான ரூல்ஸ்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் கறாரான பேங்க் STATE BANK IF INDIA அப்படிப்பட்ட பேங்குல ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கின கடனை, அத விட ரொம்ப கஷ்டப்பட்டு அடைக்க நினைக்கிற, விவசாய பொதுமக்கள்கிட்ட அரசியல் வாதிகள் இரண்டு பிட்ட போட்டுட்டு போனா,

பிட் 1 இனி விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிக கடன் வசதிகள் செய்து தரப்படும்.
பிட் 2 இது வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்ய அரசு ஆரம்ப கட்ட முடிவு எடுத்துள்ளது.

அதை மக்களும் கப்புன்னு புடிச்சிக்கிட்டு,பர்ஸ்ட் முடிவு பண்ணுனது இனி கடன் திரும்ப அடைக்க வேண்டாம்னுத்தான்!?

இரண்டாவது முடிவு இனி ஈசியா கடன் வாங்கலாம்னு மக்கள் முடிவெடுக்கறதுக்கும் முன்னாடி கேப்ல பூந்துட்டாரு, ஸ்டேட் பேங்கு எம்.டி
கிட்டதட்ட 7000 ஆயிரம் கோடி கடன் வராமலே இருக்கு! இனி யாருனாச்சும் கடன் கேட்டு வந்தா கொடுக்காதீங்கன்னு!

மெசேஜ் பாங்குகளுக்கு போறதுக்கு முன்னாடியே முக்கியமான கட்சிக்காரங்களுக்கு போய் சேர்ந்துருச்சி அதுவும் இப்பத்தான் பெங்களூருவில தேர்தல் கூத்துகள் நடந்துக்கிட்டிருக்கு!

இந்த டைம்ல பாங்க் லோன் நிறுத்துன நியூஸ் கேட்டா அப்படியே மண்ணின் மைந்தனும் (அட கவுடாதாங்க!), இன்ன பிற பி.ஜேபி ஆளுங்களும்,காவிரி மாதிரி பொங்கி எழுந்து பொழப்பை கெடுத்துடுவாங்கன்னு டக்குனு ஃபீல் பண்ணுன வயலார் ரவி (இவர்தான் கர்நாடாக கண்காணிப்பாளர் ஓ....! இதுதான் கண்காணிப்பா??!!) உடனே மேடம் கிட்ட சொல்லி , அப்புறம் சிதம்பரத்துக்கிட்ட பேசி, அப்புறம் சிதம்பரம் ஸ்டேட் பாங்க் எம்.டியை கூப்பிட்டு, கடைசியா நிப்பாட்டுங்க கடனைன்னு சொன்ன பேப்பரை திருப்பிட்டாங்க! (அரசியல்வாதிகள்னா சிங்கம்ல!)

ஆனாலும் மக்களே இதே ஆப்பு திரும்ப ரீப்பிட்டு ஆகும் போது, பேங்க் பக்கம் போகாம நீங்க கொஞ்சம் நாளைக்கு அப்ப்பீட்டு ஆகிக்கோங்க!

முதல்வர் கருணாநிதியின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட அறிவிப்பு அரசியல் சந்தர்ப்பவாதமா - விஜயகாந்த் கேள்வி?

மக்கள் எழுச்சி என்பது மின்சார சுவிட்ச் போட்டால் எரியும் விளக்கு போலவும், பின்னர் வேண்டாம் என்றால் அதை நிறுத்தி விடலாம் என்றும் கருதுகிறார் போலும்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சில தீயசக் திகள் தொடர்ந்து தமிழகத்துக்கு இழைத்து வரும் கொடுமையின் உச்ச கட்டமாக தமிழக மக்கள் தாங்களே முன்வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகும். தமிழகம், கர்நாடகத்துக்கு இடையே நல்லுறவு, இந்திய ஒரு மைப்பாடு, இறையாண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள், நல்லவைகளாக இருக்கட்டும் என்கிறார்.

எத்தகைய நல்லுறவும் நீதியையும், நியாயத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். கற்பழித்த காமுகனுக்கும், கன்னிகைக்கும் எப்படி ஒற்றுமை ஏற்படுத்த முடியும்? ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குடி நீர்த் திட்டத்தை ஏற்க மறுத்து தமிழ் மக்களின் உயிர்களையும், உடமைகளையும் கன்னட வெறியர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை கூட கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக கடுமையான நிலையை எடுத்து, மத்திய அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்றார். இன்றும் தமிழ்த் திரைப்படங்களை காட்டத் தடையுள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகத்தில் வெறி தாண்டவமாடுகிறது.

தமிழ்நாட்டில் பல கட்சிகள் களம் இறங்கியும், தமிழ்த் திரையுலகம் உண்ணாவிரதம் நடத்தியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் தமிழ் மக்களின் நியாய உணர்வுக்கு வடிவம் கொடுத்துள்ளன.

இவ்வளவுக்குப் பிறகு இன்றைக்கு முதல்வர் கருணாநிதி போராட்டங்களைக் கைவிடுங்கள் என்றால் என்ன பொருள்?

கருணாநிதி முடிவு எடுக்கும் முன் மக்களின் உணர்வை மதித்திருக்க வேண்டாமா? அழைத்துப் பேசி இருக்க வேண்டாமா?

உள்ளூர் பிரச்னைகளுக்கெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் போடும் முதல்வர், இத்தகைய முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன் அனைத்துக் கட்சித் தலைவர்கள், உண்ணாவிரதம் இருந்த கலைத்துறையினர், வழக்கறி ஞர்கள் போன்றோரை கலந்து பேசி யிருக்க வேண்டாமா?

தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற அரசியல் சந்தர்ப்பவாதமா? அல்லது மத்திய அரசால் அவருக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியா?

தமிழ்நாட்டில் உள்ள தனது கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளுகிற தந்திரமா?
எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பேசியதால் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் தோற்குமானால் தன் மீது பழிவந்து விடும் என்று அச்சத்தாலா?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை 1998-ம் ஆண்டிலேயே தொடங்கியிருக்கலாம். அதை விட்டு விட்டு இன்றைக்கும் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட முயற்சிக்கிறார்.

காவிரிப் பிரச்னையில் 1972-ல் செய்த வரலாற்று தவறை மீண்டும் கருணாநிதி செய்கிறாரா என்பதே என் கேள்வி.

சில நோய்கள் மருந்தால் குணமாகலாம். ஆனால் சில நோய்களுக்கு அறுவைச்சிகிச்சை தேவை. இந்திய ஒற்றுமை என்ற உடம்பில் கன்னடர்களின் வெறியாட்டம் என்ற அநீதி, கட்டியாக உள்ளது. நீதியை நிலைநிறுத்த அறுவைச்சிகிச்சைக்காக தமிழ் நாட்டு மக்கள் எழுச்சி என்ற கத்தி எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதி கத்தியை கீழே போடச் சொல்வது நோயாளிக்கும் ஆபத்து; நோயும் என்றும் தீராது. .

நன்றி - தினமணி

ஒகேனக்கல் என்ன நடந்துச்சு? - என்ன நடக்குது..?

செப்டம்பர் 29 1998 - மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பு நீர்ப்பாசனதுறை அதிகாரிகளுக்கிடையே மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம்

செப்டம்பர் 21 1999 மத்திய அரசு சரியாக ஒரு வருடம் கழித்து 1.4 டிஎம்சி காவிரி நீரை எடுத்துக்கொள்ளலாம் என்று தடையில்லா சான்றிதழ் அளிக்கிறது .

பிப்ரவரி 5 2007 காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பில் 419 டிஎம்சி தமிழ்நாட்டிற்கும் 270 டிஎம்சி கர்நாடகத்திற்கும் உண்டு என்று தீர்ப்பளிக்கிறது.

பிப்ரவரி 6 2008ல் ஜப்பான் வங்கியின் உதவியுடன் குடிநீர் திட்ட வரையறை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 10 2008ல் கலைஞரால் திட்ட துவக்க விழா அடிக்கல் நாட்டப்படுகிறது.

மார்ச் 4 2008ல் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக சர்ச்சை எழுப்பப்படுகிறது.

மார்ச் 16 2008ல் முன்னாள் கர்நாடக முதல்வரின் திடீர் ஒகேனக்கல் விசிட் பரபரப்பை ஏற்படுத்துகின்றது.

மார்ச் 27 2008ல் தமிழக சட்டசபையில் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் முழு உதவி வேண்டி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மார்ச் 29 2008ல் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்க கூடாது என்ற மன அமைதியோடு பொறுத்திருக்கிறேன் ஆனால் எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கர்நாடகாவையும் அதன் அரசியல் தலைவர்களையும் திட்டம் தொடர்பான எதிர்ப்பை கைவிடச்சொல்லி வலியுறுத்தவேண்டும்- கலைஞர் கோரிக்கை.

மார்ச் 31 2008 முன்னாள் முதல்வர் குமாரசாமி தேவேகவுடா கலைஞரை மன்னிப்பு கேட்கச்சொல்லி வலியுறுத்தல்.

ஏப்ரல்1 2008 முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 1 2008 முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியும் இன்றைய தின உற்சாகத்தோடு கலைஞரின் மன்னிப்பை எதிர்ப்பார்த்து கூக்குரலிடுகிறார்!

ஏப்ரல் 2 2008 கொடும்பாவி எரிப்பு, தமிழ்சினிமா தியேட்டர்கள் எரிப்பு என ரணகளமாக்கப்படுகிறது தமிழ் அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் கன்னட சேனல்கள் நிறுத்தப்பட்டு ஒரு ஒட்டலும் தாக்கப்படுகிறது.

ஏப்ரல் 3 2008 கர்நாடக் ஆளுநர் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் முதல்வர் கிருஷ்ணா ஆலோசனை பெறப்படுக்கிறது

ஏப்ரல் 4 2008 தமிழகத்தில் தமிழ்திரையுலக கலைஞர்களின் கர்நாடக எதிர்ப்பு போராட்டமும் அதற்கு எதிராக கர்நாடாகாவிலும் இதே போன்ற திரையுலக பிரபலங்களின் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்று முடிகிறது

ஏப்ரல் 5 2008 இவை அல்லாது வரும் ஏப்ரல் 10 வேலை நிறுத்தப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்போவதாக கட்சிகள் அறிவிப்பு.
தமிழகத்தில் உண்ணாவிரதத்தின்போது,ரஜினி கர்நாடக அரசியல்வியாதிகளை விமரிசித்துபேசியதற்கு மன்னிப்பு கோரவேண்டும் இல்லையெனில் மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டோம் என்று நாரயண கவுடேவும் வாட்டாள் நாகராஜும் அறிவித்துள்ளனர்!

பீகார் எம்.எல்.ஏக்களின் லப்-டப்பாகப்போகும் லாப்டாப்புக்கள்!


பீகாரின் அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மடிக்கணினி வழங்க உத்தரவிட்ட்டு அதற்கான தொகையும் ஒதுக்கப்பட்டுவிட்டது!
ஒரு நல்ல மாற்றமாகத்தான் இது இருக்கும் என்று தெரிக்கிறது!
மடிக்கணினி தவிர்த்து இன்ன பிற சாதனங்களான பிரிண்டர்கள் மற்றும் இணைய இணைப்பிற்கான தொடர்புகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல பதவி முடிந்தவுடன் தத்தமது கணினிகளை திரும்ப கொடுத்துவிடவேண்டும் என்று கண்டிஷனும் உண்டு!(ஒரே காமெடியாத்தான் இருக்குங்கீறீங்களா!)

போன அரசாங்கத்திலேயே எம்.எல்.ஏக்களுக்கு எப்படி கணினி பயன்படுத்துவது என்று கிளாஸ் எடுக்கப்பாட்டாலும் கூட கடைசியில், லாலுவின் ”அதெல்லாம் உங்களுக்கு வேணாம்டா ராசாக்களே” என்று சொல்லிவிட்டதால் உறுப்பினர்களும் சரின்னு விட்டுட்டாங்களாம்!

ஆனா இப்ப நிதிஷ்குமார் வந்து இல்லையில்ல நீங்க கண்டிப்பா கணினி பயன்படுத்தவேண்டும்னு சொல்லிப்புட்டாராம்!
எப்படி மொபைல் போன்களை தட்டுதடுமாறி கத்துக்கொண்டு காதில வைச்சுக்கிட்டு போஸ் கொடுத்தீங்களோ அது மாதிரியே இப்ப இந்த லேப்டாப்புகளையும் கத்துக்கோங்க போஸ் கொடுங்கன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்!

இனி பீகார் மக்கள்ஸ் எல்லாம் எம்.எல்.ஏக்களை சாட மாட்டார்கள்!

ஒன்லி சாட்டிங்தான் :))