தாத்தா...! இந்த மூட்டை எப்பவுமே வெய்யிலா இருந்தாலு சரி மழையா இருந்தாலும் சரி வெளியிலயே கிடக்கு அத யாரும் திருடிட்டு
போயிடமாட்டாங்களா?
கொத்ததெரு தாத்தா கடையின் வாசலில் எப்போதுமே எந்த பாதுகாப்புமே இன்றி இருக்கும் இந்த மூட்டையை பார்த்தபோதெல்லாம் எனக்குள் எழுந்த கேள்விகள்?
டேய்...! அது கல் மூட்டைடா அத, போய் எவன் எடுக்கப்போறான்! என்ற அலட்சிய பதிலில் எனக்கு அதன் மதிப்பு தெரியவந்தது.ஒண்ணுத்துக்கும் பேராத விஷயம்போல நம்மள மாதிரின்னு ( ஆமாங்க! அடிக்கடி ஏண்டா உப்பு மூட்டை மாதிரி நிக்கிறேன்ல எங்க பாட்டி கேட்பாங்க!)
எந்த கடையிலும் வெளியிலேயே வீட்டிருக்கும் இந்த கல் உப்பினை மட்டும்தான் நாம் நம் விருப்பப்படி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பார்கள் கடைக்காரர்கள். ( தம்பி ரெண்டு படி நீயே அளந்து எடுத்துக்கோ..!)
இன்னும் சில இடங்களில் உப்பு மூட்டைகளுக்கென தனியாக ஒபன் டூ ஏரில் குடோவுன்களும் இருந்ததை நான் கண்டதுண்டு! அப்பக்கூட யாரும் அதை திருடிக்கிட்டு போக முயற்சி பண்ணது கிடையாதுங்க!?
பெரும்பாலான வீடுகளில் சாம்பார் ரசம் என பலதரப்பட்ட விஷய்ங்களுக்கும் இந்த கல் உப்புத்தான் பயன்படுத்தப்பட்டுவந்தது,அய்யய்யோ அயோடின் இல்லை இதுல என்று பயமுறுத்தியும் கூட இன்னும் கல் உப்பு பயன்படுத்தும் குடும்பங்கள் ஏராளம்!
ஊறுகாய் ஜாடி என்ற பெயரில் சீனக்களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பானை, கீழே மஞ்சள் நிறத்திலும் மேலே வெளிர்ந்த நிறத்திலுமான இந்த பீங்கான் பானையில் ஊறுகாய் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பலரது வீடுகளிலும் கல் உப்புக்கள் நிறைந்திருக்கும். சிலர் வீடுகளில் அதனுள்ளேயே புளியையும் அடைத்திருப்பார்கள்!
டீஸ்பூன் அளவு கதையெல்லாம் எந்த அம்மாக்களுக்குமே அவ்வளவாக புரிபடாத விஷயம்! கல் உப்பினை பொறுத்த வரையில் விரல் நுனியளவு சில விரல் அளவு கையளவு இந்த விகிதங்களில்தான் கலக்கப்படும் கல் உப்புக்கள்!
பொழுதே போகத ஞாயிறுகளின் மத்தியானங்களில் சீக்கிரமாய் வந்து தொலைக்கும் பசியினை சற்றும் பொருட்படுத்தாமல் சமையலோடு வாரமலரின் வாசகி ஆக மாறியிருக்கும் அம்மாவிற்கு, என் பசி தெரியாத சமயங்களில் வரும் பலத்த குரலினை கேட்டு அக்கம்பக்கத்தினர்கள் வருவதற்குள்,அரைச்சொம்பு அரிசி சாத கஞ்சியில் சில கல் உப்பினை போட்டு கரைத்து வாயில் ஊற்றி, குரைக்கும் சத்ததை குறைக்கும் அம்மாவின் சாதுர்யம்!
இன்று என்னை நினைக்க மட்டுமே வைக்கிறது!
கண்களை கண்ணீரில் நனைக்க மட்டுமே வைக்கிறது!
கல் உப்பு
# ஆயில்யன்
Labels: நினைவுகளில்..
Subscribe to:
Post Comments (Atom)
20 பேர் கமெண்டிட்டாங்க:
ஆயில்யன்
கல் உப்பெல்லாம் தற்பொழுது இல்லை
மலரும் நினைவுகளாக அக்காலத்தை நினைவூட்டிய பதிவு
நல்வாழ்த்துகள்
கொஞ்ச நாள் முன்னாடி டாட்டாவோ அவங்களை மாதிரி வேற எதோ பெரிய நிறுவனமோ ஐயோடின் எல்லாம் சேர்த்த கல் உப்பு பாக்கெட் கொண்டு வந்ததா ஞாபகம். அது இப்போ கிடைக்கிறது இல்லையா?
என்னோட பெஸ்ட் நினைவு - அரைச்சு வைச்ச தோசை மாவில் கையை விட்டு (அம்மாவுக்குத் தெரியாமல்தான்) நக்கும் பொழுது வாயில் அகப்படும் ஒரு சிறிய உப்புக்கல்!! :)))
கல் உப்பு நான் இன்னமும் உபயோகிக்கறேன்.. என் அம்மாவும் அப்படித்தான் சாம்பாருக்கெல்லாம் போடுவாங்க.. அது தனி ருசி தரும் தான்.. நானும் இங்க தில்லியில் கூட கல் உப்பும் வாங்கறேன்.. தோசை மாவுக்கு கல் உப்பு தான்...
பூண்டு கஞ்சிக்கும் கல் உப்புதான் எப்படி ஆயில்யா இப்படி இல்லாம் பதிவு .. என்னவோ போப்பா..
கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்க
//இலவசக்கொத்தனார் said...
என்னோட பெஸ்ட் நினைவு - அரைச்சு வைச்ச தோசை மாவில் கையை விட்டு (அம்மாவுக்குத் தெரியாமல்தான்) நக்கும் பொழுது வாயில் அகப்படும் ஒரு சிறிய உப்புக்கல்!! :)))
//
என் நினைவுகளிலும் மறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று :)
ஸேம் ஃபீலிங்ஸ் (ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)
//கயல்விழி முத்துலெட்சுமி said...
பூண்டு கஞ்சிக்கும் கல் உப்புதான் எப்படி ஆயில்யா இப்படி இல்லாம் பதிவு .. என்னவோ போப்பா..
//
அக்கா அது என்ன பூண்டு கஞ்சி சொல்லிக்கொடுத்தா புண்ணியமா போகும் :)
//யாத்திரீகன் said...
கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்க
//
மாங்கா ஒரு கையில் உப்பு மறுகையில் தொட்டு தொட்டு சாப்பிட்டு சுகம் கண்ட விடுமுறை ஞாயிறுகள் :)))
தயிர் + பழைய சோறு +வெங்காயம் +கல் உப்பு
வாழ்க்கையை, அவ்வப்போது ஊருக்கு செல்கையில் வாழ்ந்து பார்க்க குறிப்பாக வைத்திருக்கும் விசயம்ங்க இது! :))))
நம்ம பக்கம் மட்டுமில்லை. இங்கே சந்தையில் ஒரு விசித்திரமா இருந்த பீங்கான் பாத்திரம்/ஜாடி. எதுக்குன்னு கேட்டப்ப...அது உப்புக்கல் போட்டு வச்சுக்கும் பழங்காலப் பாத்திரமாம்.
விட்டுறமுடியுதா?
வாங்கியாந்துட்டொம்லெ:-))))
//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)//
ஊற வைக்காத அரிசி (கல்யாணத்தும் போது மழை வரப்போகுதுடா), ஊற வைத்த அரிசி (பருப்பு ரொம்ப அதிகமானா இட்லி சரியா வராதுடா), நற நற வென அரைத்த மாவு (எச்சிக் கையை உள்ள விடாதேடா), நைசாக அரைத்த மாவு (இவ்வளவு மாவு தின்னா வயத்துக்கு ஆகுமாடா), ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் (கையை நசுக்கிக்க போறடா) என நாங்களும் செய்திருக்கோமில்ல.
பேசினது கல் உப்பைப் பத்தி. அதான் இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் விட்டுட்டேன். :)))

///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எப்பாடியோ இம்புட்டு டீடெயில்ஸும் இன்னும் மறக்காம இருக்கீகளா?
கொஞ்சம் கொஞ்சமா நினைவு வர வைச்சுட்டீங்க சூப்பரு :)))
//இலவசக்கொத்தனார் said...
//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)//
ஊற வைக்காத அரிசி (கல்யாணத்தும் போது மழை வரப்போகுதுடா), ஊற வைத்த அரிசி (பருப்பு ரொம்ப அதிகமானா இட்லி சரியா வராதுடா), நற நற வென அரைத்த மாவு (எச்சிக் கையை உள்ள விடாதேடா), நைசாக அரைத்த மாவு (இவ்வளவு மாவு தின்னா வயத்துக்கு ஆகுமாடா), ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் (கையை நசுக்கிக்க போறடா) என நாங்களும் செய்திருக்கோமில்ல.
பேசினது கல் உப்பைப் பத்தி. அதான் இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் விட்டுட்டேன். :)))
//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
(பழக்கதோஷத்தை விடப்புடாதுல்ல அதான்!)
வாசலிருந்து குடிக்கும் தண்ணீர் கொண்டுவந்து நிறைத்துக்கொண்டிருக்கும் அவசர நேரத்தில் ரோட்டில் உப்பு கொண்டு வருபவரை பாட்டி கூப்பிடச்சொல்ல
நான் அழைப்பதற்குள் அவர் வேகமாய் சைக்கிளில் சென்றுவிட எனக்கு பாட்டியிடம் கிடைத்த "பாட்டு"
ஞாபகம் வருகிறது.
இன்னமும் கல் உப்பு (அயோடின் சேர்த்து) வந்து கொண்டு தான் இருக்கிறது சீனா சார்.
@கொத்ஸ் அண்ணாச்சி & ஆயில்யன்,
பின்னறீயேடா! (அன்னியன் பிரகாஷ்ராஜ் ஸ்டையிலுல சொன்னேன், மரியாத குறைச்சலா எண்ணாதீக. :))
//ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் //
@கொத்ஸ், நீங்களும் அப்பவே ஆரம்பிச்சாச்சா? :p
Same Blood...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Senthil,
Bangalore
//பொழுதே போகத ஞாயிறுகளின் மத்தியானங்களில் சீக்கிரமாய் வந்து தொலைக்கும் பசியினை சற்றும் பொருட்படுத்தாமல் சமையலோடு வாரமலரின் வாசகி ஆக மாறியிருக்கும் அம்மாவிற்கு, என் பசி தெரியாத சமயங்களில் வரும் பலத்த குரலினை கேட்டு அக்கம்பக்கத்தினர்கள் வருவதற்குள்,அரைச்சொம்பு அரிசி சாத கஞ்சியில் சில கல் உப்பினை போட்டு கரைத்து வாயில் ஊற்றி, குரைக்கும் சத்ததை குறைக்கும் அம்மாவின் சாதுர்யம்!//
அட அட.. ஆயில்யன்.. கலக்கிட்டிங்க.. சூப்பர்ப்.. :) அதுவும் அந்த கடைசி வரி.. அழகான கவிதை...
//cheena (சீனா) said...
ஆயில்யன்
கல் உப்பெல்லாம் தற்பொழுது இல்லை
மலரும் நினைவுகளாக அக்காலத்தை நினைவூட்டிய பதிவு
நல்வாழ்த்துகள//
சீனா சார்... இப்போவும் எங்க வீட்ல கல் உப்பு தான்... எங்க வீட்ல மட்டும் இல்லை.. கிராமத்தில் எல்லோருமே கல் உப்பு தான் பயன் படுத்துகிறார்கள். மிகக் குறைவானவங்களே தூள் உப்பு பயன்படுத்துகிறார்கள். கிராமத்தில் விவசாயம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆகவே பலரும் லாரியில் ட்ரைவர் மற்றும் க்ளீனர்க்களாக தான் வேலைக்கு போகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்ற செல்லும் போது கல் உப்பு மூட்டைகளை கொண்டுவருவார்கள். அதை அவர்கள் உறவினர்களுக்கு தருவார்கள். கடைகளிலும் தாராளமாகவே கிடைக்கிறது. தூள் உப்பை காட்டிலும் பெரிய அளவில் விலையும் குறைவு தான்.
//யாத்திரீகன் said...
கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்க//
கடந்த வாரம் ஊருக்கு போனப்ப கூட மாங்காய் பறித்து அதை உடைத்து கல் உப்பும் மிளகு பொடியும் கொஞ்சம் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டேன். செம டேஸ்ட். சிறு வயதில் புளியங்காய் இப்படி தான் சாப்பிடுவோம். ஆஹா.. என்ன சுவை.. என்ன சுவை...
.... முத்த கவிதை சீசன் முடிந்து இப்போ கொசுவர்த்தி சீசனா?.. :P..
ரொம்ப நல்லா எழுதிருக்க ஆயில்.
பின்னூட்டங்கள் மிக அருமை எல்லாரும் பழைய நினைவுகளை சொல்லியிருக்காங்க.
கரைஞ்சு போற கல்லுப்பபோல
கரைஞ்சு போறேன் நினைவுகள்ல.
Post a Comment