உலகமே பார்க்கும் அர்விந்த கண் மருத்துவமனை - மதுரை


40 வருடகால மருத்துவசேவையில் அதுவும் மிக மிக முக்கியமான உலகை காணும் உறவைக் காணும் உண்மையை காணும் ஒரே உறுப்பாக செயல்படும் இரு ஜோடிக்கண்களின் எந்த பிரச்சனைகளாகிலும் கவனமுடன் கையாண்டு பலருக்கு பார்வை பிச்சை அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனை

மதுரை கோவிலுக்கும் மல்லிக்கைப்பூவுக்கும் இட்டிலிக்கும் மட்டுமல்ல இந்த மருத்துவமனைக்கும் கூட நல்ல பேரும் புகழும் உண்டு இது எங்கள் மாவட்டங்களில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தது ஆனால் உலகம் முழுவதும் இந்த மருத்துவ சேவையின் அருமை பெருமைகள் பலரால பலரிடத்திலும் பரப்பபட்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளும் படியான ஒரு சேதிதான் இது!

2008 ஆம் ஆண்டிற்கான கேட்ஸ் விருது - உலக அளவில் மருத்துவ துறையில் இதுதான் அதிக மதிப்புமிக்க பரிசுப்பொருளாம் - $1 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.


1976ல் ஜி.வெங்கடசுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையின் சேவையில் 2.4மில்லியன் மக்களினை பார்வை அளித்து பயனான வாழ்வினையும் பெற்று தந்துள்ளதாம்!


எங்கள் ஊர்லிருந்தும் பலரும் சென்று பார்வை பெற்று திரும்பிய அனுபவங்களை நேரில் கண்டவன் என்ற முறையில் இந்த மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

தொடரட்டும் தொண்டுள்ளம் கொண்ட மக்களின் சேவைப்பணிகள்!


அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை பற்றி பதிவர் யாத்தீரிகனின் பதிவிலிருந்து

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மிகச்சிறந்த மருத்துவமனை. உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடம் பணி செய்கின்றனர். போன மாதம் என் மகனுக்கு கண் சிவப்பாகி விடுகின்றது என்று போக நேர்ந்தது. இது சாதாரணமாக அதிக வெயிலினால் வருவது தான் என்று கூறி ஆலோசனை மட்டும் சொல்லி அனுப்பி விட்டனர். இதே வேறு இடம் என்றால் பர்ஸைக் காலி செய்து விட்டிருப்பார்கள். :)