தீபாவளி

தீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு!

1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு! (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்!) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு! இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

வீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது ! இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது!

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

தோஹா - கத்தாரில் இருக்கிறேன்!

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்!



5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
எப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம்! அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது !

இந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது !

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

1ம்மில்ல!

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட! நம்புங்கப்பா பிசியோ பிசி!)

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

ஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது !

அதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது!

9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்வேன்!

10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?

கயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்

சந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...!( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே? - அவ்வ்வ்வ்வ்வ் )

ராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]

நிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்!

12 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

//6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

1ம்மில்ல//

same blood Boss

said...

தீபாவளி என்றாலே எல்லோருக்கும் சிறு வயது நியாபகங்கள்தான் முதலில் வருகின்றன. அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் நினைவை. கூடவே வைத்துள்ளீர்கள் தீபாவளிக்குப் பொருத்தமாய் கடைசில் "டமால்"னு ஒரு அணு குண்டு அழைப்பு:)! ஆனால் அழைத்த அன்பு தீபாவளி இனிப்பு. நன்றி ஆயில்யன். ஹி அப்புறம், கமிட் பண்ணாமல் நழுவிக் கொள்கிறேன்:)!

said...

கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் அருமை.

said...

;))

said...

ஹ்ம்ம் :)))

said...

:-)

said...

அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் //////////
sariyana padipsa boss neenga?????

said...

//என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! //

நான் சொல்லலை நீங்க ஜீனியஸ்னு....

சூப்பரா எழுதி இருக்கீங்க.

said...

//1ம்மில்ல//
அட! இது நல்லாருக்கே!!

said...

ஹாங்! மறந்துட்டேனே!!

1இருக்கு!
அதான் நன்றி! உடனே பதிந்ததுக்கு.

said...

அன்பின் ஆயில்ஸ்

நானானி கூப்பிட்ட உடனே ஓடி வந்து இடுகை இட்டுட்டீங்க - நாங்க எல்லாம் உங்கள மாதிரி உடனே இட முடில - பாப்போம்

ராமலக்ஷ்மி நழுவுவதில் சமர்த்தர் ( குறை சொல்ல வில்லை - அவரின் பிரச்னை அவருக்கு )

இவ்விடுகை ரசித்தேன் ஆயில்ஸ் - அருமையா இருக்கு

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்

said...

:))