வாழ்க வளமுடன்!

டிஸ்கி:-

ஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்!


வாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்

அன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.
வேதாத்திரி மகரிஷி



வேண்டுகோள்:-

வாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்!

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வாழ்க வளமுடன்'

said...

நீடுழி வாழ்க

said...

வாழ்க வளமுடன்.

said...

டிஸ்கி ரொம்ப நல்லா இருக்கு ஆயில்யன்.. :)

said...

வாழ்க வளமுடன் போலவே எனக்கு தெரிந்து ஒரு பெரியவர் "நன்று செய்தீர்"-ன்னு சொல்வார். யார் எது செஞ்சாலும். ஆனா, அடிவாங்கினதா ஞாபகம் இல்ல.

said...

வாழ்க வளமுடன்! :-)

said...

சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

said...

வாழ்க வளமுடன்

said...

நல்ல இடுகை ஆயில்ஸ்.

கொஞ்ச நாள் முன்னாடி கேட்டது, ரொம்ப கோபமா இருக்கும் போது கூட பெரியவங்க நாசமத்துப்போ அப்படின்னு எதிராளிய சொல்லுவாங்களாம். மேலோட்டமா பார்க்கும்போது அது கோபமா, அபத்தமா இருந்தாலும், நாசம் அற்றுப் போ, நல்லா இரு என்ற அர்த்தத்துடன் அந்த சொல் புழங்கப்பட்டதாம்.

said...

நல்லா இருங்க

said...

வாழ்க வளத்துடன்.

[அப்படி சொல்வதே நன்று என சுகி.சிவம் சொல்லியிருப்பதாக ஜீவ்ஸ் சொல்கிறார். அவரிடமே விளக்கம் கேளுங்கள்:)!]

எல்லோரும் இன்புற்றிருக்க!

said...

”வாழ்க வளமுடன்” என்றுசேர்த்து சொல்லி விட்டோமோனால் எல்லாப் பேறுகளையும் உங்களுடைய வாழ்க்கையிலே பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் என்ற விரிந்த ஆழ்ந்த கருத்தினை உடையதான வாழ்த்தாக அமையும். எனவே நாம் எப்போதும் பிறரை வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்ப்ப்டுத்திக் கொள்ள வேண்டும்.(மகரிஷி)

ஆயில்யன், நான் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷியின்
மகா மந்திரமான வாழ்க வளமுடன்
எனற சொல் உங்களை போன்ற இளையவர்கள் சொல்லும் போது
நாம் ஆன்மீக பாதையில் திடமாக
முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு இதுவே அறிகுறியுஆகும்.அவ்ர் விரும்பிய உலக சமாதானம் விரைவில் மலரும். நன்றி .

பல்லாண்டுவாழ்க,நீடுவாழ்க,வளமுடன் வாழ்க,நலமுடன்வாழ்க,
தீர்க்காஆயுசுடனிரு.குழ்ந்தைகள்
தும்மினால் நூறு,நூற்றண்டு என்றும்,
கல்யாணம் பெண் வணங்கினால் தீர்க்கசுமங்கலியாய் இரு என்றும்,16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்றும்
பெரியவர்கள் கூறுவார்கள்.
நல்ல சொற்கள் எல்லாம் வாழ்த்துக்களே.வானத்தில் பறந்து செல்லும் தேவ பறவை நாம் சொல்லும் வார்த்தைகளை கேட்டு அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துமாம்.நல்லதே பேச வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

மகரிஷியின் வாழ்த்து-
‘”அருட்பேராற்றல் க்ருணையினால்
உடல்நலம்,நீளாயுள்,நிறைசெல்வம்
உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கிவாழ்க
வளமுடன்” என்று வாழ்த்தி பயன்
பெறுவோம்.

வாழ்த்து எனபது எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும்.

said...

நல்ல பகிர்வு....

said...

வளமுடன் வாழ்க...

நல்ல பதிவு...

said...

வாழ்க வளமுடன்! சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!

said...

//சாந்தியும்,//

தமிழண்ணே.. இந்த மேட்டர் அண்ணிக்கு தெரியுமா?

said...

வாழ்க வளமுடன். என்பது வேதாத்ரி மகரிஷி சொன்னது.
அவருடைய குரு வள்ளலார் சொன்னது
இன்னும் அற்புதமுங்க.
" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க."
இவன். வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com

said...

அருமையான எண்ணங்கள் வார்த்தைகளாக உருப் பெற்று வாழ்த்துகளாக வரும்போது ஏற்க என்ன தயக்கம். நல்லதே சொல்வோம்.
சொற்கள் சொல்லும் செய்தி எப்பவும் நிலைக்கும்.
வாழ்க வளமுடன்.

said...

வாழ்க வளமுடன்.