சென்ஷி - காதலன்

காதல் என்பது அனுபவம்;

காதலித்தல் சுகானுபவம்;

காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்...நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்....நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்...அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலை ஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

சென்ஷி - காதலன்

*********************************************************************************இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி...!

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இளமைப் புயல், என்றும் காதலன், இணைய மஜ்னு, சார்மிங் ஷாஜகான், செக்ஸி சென்ஷிக்கு இன்று போல் என்றும் பதினாறாக பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி:)!

said...

vaazhthukal....!

kaathal....yella varikalum azhaku!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி :-)

said...

வாழ்த்துகள் தல :)

said...

நண்பர் சென்ஷிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

காதல் சுனாமி சென்ஷி அண்ணனை கவிஜயால் வாழ்த்த முடியவில்லை அதனால் மெளனமாக வாழ்த்தி விடைபெறுகிறேன்

said...

மனமாந்த வாழ்த்துக்கள் டா மச்சி ;)

said...

மனமாந்த வாழ்த்துக்கள் டா மச்சி ;)

said...

//காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.//

உண்மையான வரிகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி

said...

வாழ்த்துகள் சென்ஷி ...

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

கவிதை நல்லாருந்தது. நீங்க எழுதலல்ல.?

சென்ஷிக்கு வாழ்த்துகள்.!

said...

//கவிதை நல்லாருந்தது. நீங்க எழுதலல்ல.?//

மேலிருக்கும் கவிதை
கீழ் நிற்பவரால் எழுதப்பட்டு,
அவர் என் கேமரா கவிதையாக பிரசுரிக்கப்பட்டிருக்கிறது!

[ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப யப்புடீயெல்லாம் சீண்டறாங்கப்பா]

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி,

(எங்க பாக்கவே முடியல..)

said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சென்ஷி.
அறியக் கொடுத்த ஆயில்யனுக்கும் நன்றி.

said...

வாழ்க வளமுடன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி

said...

belated b'day wishes....

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்ஷி.

மன்னிக்கவும் சென்ஷி,அம்மா ஊரில் இல்லை.இரண்டு மூன்று தினங்களாய்.

ஆயில்யனுக்கு நன்றி.

said...

வாழ்த்துக்கள் சென்ஷி!

இந்த படம் ஊருக்கு வந்தப்போ எடுத்தது தானே கேமிரா கவிஞரே? :)

said...

எல்லாமே நல்லா இருக்கு. இதுவும் நல்ல கட்டுரை நம்ம ஊரு நலமா !