நாம் அடிமைகளாகிப்போன அவலம்!

அன்புக்கும் அறிவுக்கும் இன்னும் சில இடங்களில் ஆணவத்திற்கும் அடிமையாகிப்போன வரலாறு மட்டும் கொண்ட மனிதன் இனி மக்கிபோய் பின் விக்கித்து போகும் விலைக்கு போயிருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கும் அடிமைகளாகிப்போய்விட்ட அவலத்தினை சித்தரிக்கும் காட்சிகள்!


19.08.08 செய்திகளில்....!

நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அதான் நான் இப்போ காரை விட்டுட்டு ரயிலில் போறேனே.

said...

somewhere i read that the info that says.. "oil countries are not pumping as per the demand" is totally wrong and its only the American speculators are rising the prices via sharemarkets.. so which one is true ?

said...

:( சோகமாகிப் போன அவலங்கள்.

said...

:(

said...

பிரச்சனை நம் மக்களிடம் உள்ளது.தட்டுபாடு என்று சொன்னவுடனே ஒரு மாதத்திற்கு போட வேண்டிய பெட்ரோல் ஐ ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ள துடிக்கிறார்கள்.வீட்டில் இருக்கும் தண்ணீர் cane எல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.இந்த அலைகிற புத்தி நம்மை விட்டு போனாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும்