நம் ஆழ்வார்!

கிட்டதட்ட 10 ஆண்டுகளாகளுக்கும் மேலாகவே விவசாயம் சார்ந்த செய்திகளில் அதிகம் பிரபலமாகி இருக்கும் பெயர் நம்மாழ்வார்!


இந்த பெயரினை பிரபலப்படுத்திய பெருமை கண்டிப்பாய் நம் தினசரி பத்திரிக்கை மீடியாவுக்கே போய்சேரவேண்டும்!

இயற்கை விவசாயம் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டு வரும் நோக்கில் இவர் மேற்கொண்டுள்ள பயணங்கள் பயன் தரும் நிச்சயம்! மிகத்தெளிவான கருத்துக்கள்! பொதுவில் பார்த்தால் இவரின் கருத்துகளையொத்த கருத்தினை உடையவர்கள் இன்றும் கிராமங்களில் டீக்கடைகளுக்கு முன்பு சாலை ஒரங்களில் உட்கார்ந்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பவைதான்!

பத்திரிக்கைகளில் வெளி வர ஆரம்பித்த இவரினை பற்றிய செய்திகள் மற்றும் இவரின் ஆலோசனைகள் பலவும் இயற்கை விவசாயத்தின் நோக்கம் அதனால் நாம் பெறப்போகும் நன்மைகள் நம் வருங்காலத்து தலை முறைகள் பெறப்போகின்ற நன்மைகளினை பற்றிய விளக்கத்தில் கண்டிப்பாக பலரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்தது!

இயற்கை விவசாயம் தொடர்பாக தமிழ் நாடு முழுக்க சுற்றி வரும் இவரினை ஓரிடத்தில் காண்பது என்பது மிக சிரமமான காரியமாம்! நிறைய விவசாயிகளை செய்ற்கை உரங்களின் பய்ன்பாட்டிலிருந்து விடுவித்து இயற்கை விவசாய முறைகளை மேற்கொள்ள பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து வருவதில் தான் தன் அனைத்து முயற்சிகளையும் செலவிட்டு வருகிறார்!

இவரின் மனதில் நிற்கும் பெரும்பாலும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் செயல்படுத்த நினைக்கும் பணி மரம் நடும் பணி ஒன்றுதானாம்! அது சம்பந்தமாக மிக எளிய பேச்சு வழக்கில் இவர் கூறும் விஷயங்கள்! நம் பெற்றோர்கள், நம் தாத்தாக்கள் சொல்லும் அறிவுரை போன்றே அத்தனை எளிமையாய்,நாம் முயற்சித்தாலும் கூட மிக எளிதாய் செயல்படுத்தகூடிய விசயங்கள் தான் இவை!

கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நானும் கேள்விப்பட்டுள்ளேன்.... அவசர விளைச்சலுக்காக இரசாயான உரங்களைப் பயப்படுத்தி நிலங்களை பாழ்படுத்துவதைத் தவிர்க்கப்பட வேண்டும்.... :)

said...

இவரை பற்றி மேலும் சில தகவல்கள்:

நீண்ட தாடியுடன் பார்க்க கிராமத்து மனிதரைப்போல இருக்கும் இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் விவசாயப்படிப்பில் தேர்சிபெற்றவர். ஆனாலும் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டு ஒரு மிகப்பெரிய சமூகப்பணியை தீவிரமாக செய்துவருகின்றார். இயற்கை வேளாண்மை ஆராய்சியில் பல புதுமைகளை கண்டறிந்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றவர். இவரைப் போன்றே மராட்டியத்தை சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் அவர்களும் செலவில்லா விவசாயத்தை பரப்பிக்கொண்டுள்ளார்.

சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் இருவரும் விகடன் குழுமத்தின் பசுமை விகடன் வாயிலாக தொடர்ந்து பல கருத்துகளை சொல்லிக்கொண்டுள்ளனர்.

நம்மாழ்வாரை குறித்த உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

said...

//சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் இருவரும் விகடன் குழுமத்தின் பசுமை விகடன் வாயிலாக தொடர்ந்து பல கருத்துகளை சொல்லிக்கொண்டுள்ளனர்.//

Kஒவை இறொடு பகுதிகளில் இவர்களின் சீரோ பட்ஷட் விவசாய்ம் பலன் கொடுக்கிறதாம்

said...

உழவர் நலப் பணியில் உத்வும் கரமாய் நம்மாழ்வார்
வணங்குவோம் அவரை

said...

இப்படிபட்ட மனிதர்களை பார்பது மிக அறிதல்லவா//

Anonymous said...

இவரை பற்றிய தகவலுக்கு நன்றிகள்..இன்று தான் அறிந்து கொண்டேன்..