நி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ!

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

கும்மிமேடை தன்னில் பதிவினை காணும்
திருநாளை காண வாராயோ! (வாராயோ )

தமிழ்மணத்தில் நேத்து ஹீட்டு
அதில் உன் பதிவுதானே ரொம்ப ஹிட்டு
சொல்லாம போக நினைக்காம
சோலோவா நின்னு துடிக்காதே

நாளைக்கும் பதிவு வருமா
அதில் கும்மி மேட்டரேதும் சேருமா?
கமெண்ட் மாடரேசன் தூக்காட்டி
கலாய்ப்பேன் நானும் மறுவாட்டி (வாராயோ...)

கும்மிக்கோலம் கொண்ட மகனே
புது கான பதிவு போடும் குயிலே
புது கவிக்கோலம் பூணும் கவியே
உன் குணக்கோலம் கண்ட இப்புவியே

நம் மொக்கை வாழ என்றும் பதிவிடு
நான் கும்மி ஆட என்றும் வழி கொடு!(வாராயோ...)

கும்மி அடிக்காத கையும் அடிக்காதோ
உன் மொக்கையான பதிவு கண்டு மகிழாதோ
மலராத பதிவுகள் மலரும்
முன்பு புரியாத கதைகள் விளங்கும்
மயங்காத கவிதை மயக்கும்
முன்பு புரியாத சில கவிதைகள் புரியும்

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

ஆயில்யன்:- நி.நல்லவா..! நான் தமிழ்மண பதிவர் வட்டத்தையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் எல்லாரும் கண்ணுலயும் நான் கண்ணீரைத்தான் எப்பவும் பார்க்கணும் அப்படியே வைச்சுக்குவியாப்பா!

நி.நல்லவன் :- அது என் கடமை நீ கவலைப்படாத தம்பி!

ஆயில்யன்:- நன்றி நல்லவா மிக்க நன்றி!

ஏ...!தமிழ்மணமே கும்மி மொக்கையோட நீ நீடூழி வாழணும்!பாட்டு ரசிகர்களுக்காக பிரத்யோகமாய்....!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இதெல்லாம் நீங்களும், நிஜமா நல்லவனும் சேர்ந்து செஞ்ச நாடகமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை அழுதுடுவேன்... :(

said...

இதெலலம் ஆகறதில்லே...இந்த மாதிரி பதிவுகளைப் படிப்பதற்கு பதிலாக நானும் பதிவை விட்டே போறன்பா...போறேன்.......
சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்.

said...

//தமிழ் பிரியன் said...
இதெல்லாம் நீங்களும், நிஜமா நல்லவனும் சேர்ந்து செஞ்ச நாடகமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை அழுதுடுவேன்... :(
//

யோவ்!!! என்னாது இது! இப்ப நீங்க மட்டும் ஏன் ஒதுங்குறீங்க :)))))

Anonymous said...

என்ன நடக்குது இங்கு !!! :P

said...

//கோவி.கண்ணன் said...
இதெலலம் ஆகறதில்லே...இந்த மாதிரி பதிவுகளைப் படிப்பதற்கு பதிலாக நானும் பதிவை விட்டே போறன்பா...போறேன்.......
சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்.
//

அண்ணே வேணாம்ண்ணே!

பழைய பாட்டு கண்டுபிடிச்சு அதை மாத்தி போட்டு திரும்ப கூப்பிட என்னால முடியாது ! :)))))

said...

என்ன நடக்குது இங்கு???????

ரிப்பீட்டூஊஊஊஊஊ

said...

நானும் அழுவேன் ஆமா