வாழைக்காய்!

டிஸ்கி:- சமைத்த பொருட்களின் பெயர்களினை தலைப்புக்களாய் பல பதிவர்களால் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுவிட்ட பிறகு இனி சமைக்கும் பொருட்களின் பெயர்களினை வைத்து ஸ்டார்ட் மியூஜிக் செய்யும் முயற்சியின் வெளிப்பாடாய்...!

>>>>>>>>>

எளிதாய் கிடைக்கக்கூடிய விளை பொருளாக நம் இல்லங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடிந்த வாழைக்காய் முக்கிய விசேஷங்களின் கட்டாயம் சமையலில் சேர்க்கப்படும் ஒரு காய்! கனியாகவும் இருக்கும் - ரொம்ப கனிந்து போச்சுன்னா கண்றாவியாவும் இருக்கும்!

சுமாராக பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லோர் வீடுகளிலும் கொல்லையில் தோட்டம் போடுவதையும் அதில் வாழை போடுவதையும் ஒரு வழக்கமான பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் தமிழ் மக்கள்!

இன்றைய காலகட்டத்தில் 2400 சதுர அடி பிளாட்டில் கான்கீரிட் தவிர்த்து மணலை காண்பதே அரிதாகிப்போய்விட்டது! இன்னும் நெருக்கமாய் வீடுகள் அமைந்து, கொஞ்ச நாள் கழித்து அடுத்தவன் வீட்டு மூச்சுக்காற்று என் வீட்டிற்குள் வருகிறதே என்று மொத்தமாய் மூடிவிடும் வாய்ப்பும் அதிகம்!

சரி சிட்டியை விட்டுட்டு கிராமப்புற போகலாம்ன்னு பார்த்தா, அவ்வ்ப்போது வநது கொல்லும் பலத்தமழைக்கு பயந்து வாழைத்தோட்டம் என்ற ஒரு சொல்லினையே சொல்ல தயங்க ஆரம்பித்துவிட்டனர்!

ஏதோ இருக்கும் ஒரு சிலர் மட்டுமே மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு விளைவிக்கும் வாழைகள் அது தரும் கனிகள் தான் இன்றும் இந்த வாழையின் பெயர் மார்கெட்டுக்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்க காரணமாய் அமைந்திருக்கின்றன!

வாழைக்காய் இரும்புச்சத்து மாவுச்சத்து கொண்ட காய் என்பதால் சிறுவயது முதலே உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேணடிய பொருளாக நம் பெரியோர்கள் கட்டளை இட்டுவிட்டனர் போலும்!

ஆங்கில காய்கறிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு நம் சமையலறைகளினை ஆக்ரமித்து இருந்த காய்கறிகளில் வாழைக்காய்,வாழைப்பூ & வாழைத்தண்டு இவைகள்தான் ஸ்பெஷல்!

ஜஸ்ட் வாழைதண்டு போட்டு சாம்பார் வைச்சு,வாழைக்காய் பொரியல் செய்து,வாழைப்பூ போட்டூ கூட்டு வைத்து சமைத்து சாப்பிட்டாலே ஒரு பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரியான பீலிங்க் இருக்கும் அப்படின்னுயாரும் சொல்லலை ஆனா நான் அப்படி தின்னு நிறைய் தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் இப்ப கிடைக்காம, திங்க முடியாம ஃபீல்பண்றேன்!

சரி எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டங்கள் மட்டும் சொல்றேன்! உங்களுக்கு பிடிச்ச வாழைக்காய் ஐட்டம் எதாவது இருந்தா வாய்ப்பு கிடைச்சா செஞ்சு சாப்பிட்டு வந்து சொல்லுங்க ஒ.கே!வாழைக்காய் காரக்கறி - அதுவும் கொஞ்சம் காரத்தோட மிளகு சீரகம் போட்டு வாழைக்காயை வில்லை வில்லையா நறுக்கிப்போட்டு செஞ்சா...! ச்சே சான்ஸே இல்லப்பா!( இப்ப அதிகம் உருளைகிழங்கு யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! :-( )

வாழைக்காய் பொறியல் - இது அதிகம் எல்லோருமே சாப்பிட்டிருக்ககூடும்! அழகிய ஸ்கெயர் டைப்புல வெட்டி அதுல தேங்காய் துருவிப்போட்டு.....!

வாழைக்காய் பஜ்ஜி- இது நீளமா வெட்டிபோட்டு பஜ்ஜி போட்டாலும் சரி இல்ல வில்லையாக்கினாலும் சரி சூப்பர் டேஸ்ட் அத்தோட கொஞ்சம் தேங்காய் சட்னி சைடுல உட்டுக்கிட்டா சூப்பரோ சூப்பர்! (வெளியே கடையில செக்கசெவேல்ன்னு விக்கிற பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பு!)

கூடுதல் தகவல்:-

தமிழ் பெயர்:- வாழைக்காய்
ஆங்கில பெயர்:- Plantain, green
அறிவியல் பெயர்:- Musa sapientum

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வாழைக்காய் சிப்ஸ் விட்டுட்டீங்களே?
வாழைக்காய் ப்ரை..ம்ம்.யம்மி!!
அப்புறம் வாழைப்பூ வடை...:-))

said...

:-)))...

said...

வாழைக்காய் ரசம்
சூப்பரா இருக்கும்!!

said...

வாழைக்காய் பொடி(மாஸ்) சூப்பரா இருக்கும் செய்வதும் சுலபம்.

2 வாழைக்காய் அவித்து தோலுரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.

2ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் இவற்றை 1ஸ்பூன் எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடி செய்து(கொஞ்சம் கரகரவென)
உப்பு சேர்த்து அதை துருவி வைத்திருக்கும் வாழைக்காயுடன் கலந்தால் வாழைக்காய் பொடி ரெடி.

இது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம். சைட்டிஷாகவும் தொட்டுக்கொள்ளலாம்.

(விரும்புகிறவர்கள் பருப்பை வறுக்கும்போது கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.)

said...

/
புதுகைத் தென்றல் said...

ஓ இப்பிடி செய்முறையும் சொல்லணுமா????

said...

வாழைக்காய் பொடிமாஸ்க்கு அவித்த தண்ணீரை வடிகட்டி ரசம் செய்ய பயன்படுத்தி ரசம் செய்துகொள்ளவும் வாழைக்காய் ரசம் ரெடி!

என்ன மக்களே செஞ்சு சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு ஆஸ்பத்திரில இருந்து போன் பண்ணுங்க !! ஓகே!!

:))

said...

புதுகைத் தென்றல் சொன்னதைத்தான் சொல்ல நினைத்தேன். அதை நாங்கள் வாழைக்காய் புட்டு என்போம்.
சின்ன மாறுதல்.

வாழைக்காய் ஜஸ்ட் ஒரே விசிலுக்கு அவித்து தோலுரித்து, துருவி வைத்துக்கொள்ளவும். கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை தாளித்த பின் பொடியா நறுக்கிய இஞ்சி, ரொம்பப் பொடியா அரிந்த பச்சை மிளகாய், சுமார் பொடியா அரிந்த வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதங்கியதும் துருவிய வாழைக்காயும் துருவிய தேங்காய் சிறிதும் சேர்த்துப் பிரட்டி இறக்குங்கள்.

பி.கு: வீட்டில இருந்தே நல்லாருக்குன்னு ஃபோன் பண்ணுவீங்க.

ம.சிவா said...
//என்ன மக்களே செஞ்சு சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு ஆஸ்பத்திரில இருந்து போன் பண்ணுங்க !! ஓகே!!//

சொன்னதும் வந்து பில் செட்டில் பண்ணிடுவீங்கதானே:))?!

said...

ஹி..உப்பு சொல்லாமலே சேர்த்திடுவீங்கதானே:))!

said...

//சந்தனமுல்லை said...
வாழைக்காய் சிப்ஸ் விட்டுட்டீங்களே?
வாழைக்காய் ப்ரை..ம்ம்.யம்மி!!
அப்புறம் வாழைப்பூ வடை...:-))
///

ஆஹா ஆமாம் அக்கா ஆமாம்! இந்த வாழை சிப்ஸ் விட்டுட்டேனே!

:(

கொல்லையில இருக்கற வாழைமரத்துல கைக்கு எட்டின வரைக்கும் பறிச்சிட்டு வந்து நானே வைச்ச சிப்ஸ் தான் என்னோட வாழைக்காய் சமையல்ல முதல் ஐட்டம்! :))

said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...
//

அனேகமா நிறைய வாழைக்காய் ஐட்டங்கள் சாப்பிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க! :)))

said...

//மங்களூர் சிவா said...
வாழைக்காய் ரசம்
சூப்பரா இருக்கும்!!
//

பிரதர் இப்படி ஒரு ஐட்டம் இருக்கா?? :)

said...

//புதுகைத் தென்றல் said...
வாழைக்காய் பொடி(மாஸ்) சூப்பரா இருக்கும் செய்வதும் சுலபம்.

2 வாழைக்காய் அவித்து தோலுரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.

2ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் இவற்றை 1ஸ்பூன் எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடி செய்து(கொஞ்சம் கரகரவென)
உப்பு சேர்த்து அதை துருவி வைத்திருக்கும் வாழைக்காயுடன் கலந்தால் வாழைக்காய் பொடி ரெடி.

இது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம். சைட்டிஷாகவும் தொட்டுக்கொள்ளலாம்.

(விரும்புகிறவர்கள் பருப்பை வறுக்கும்போது கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.)
//

அட ஈசியா செய்யலாம்போல ஒ.கே டிரைப்பண்ணி பார்த்துடுறேன்
:)

said...

//மங்களூர் சிவா said...
/
புதுகைத் தென்றல் said...

வாழைக்காய் பொடி(மாஸ்) சூப்பரா இருக்கும் செய்வதும் சுலபம்.

2 வாழைக்காய் அவித்து தோலுரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.

2ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் இவற்றை 1ஸ்பூன் எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடி செய்து(கொஞ்சம் கரகரவென)
உப்பு சேர்த்து அதை துருவி வைத்திருக்கும் வாழைக்காயுடன் கலந்தால் வாழைக்காய் பொடி ரெடி.

இது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம். சைட்டிஷாகவும் தொட்டுக்கொள்ளலாம்.

(விரும்புகிறவர்கள் பருப்பை வறுக்கும்போது கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.)
/

ஓ இப்பிடி செய்முறையும் சொல்லணுமா????
///

கண்டிப்பா!!!!

said...

//மங்களூர் சிவா said...
வாழைக்காய் பொடிமாஸ்க்கு அவித்த தண்ணீரை வடிகட்டி ரசம் செய்ய பயன்படுத்தி ரசம் செய்துகொள்ளவும் வாழைக்காய் ரசம் ரெடி!

என்ன மக்களே செஞ்சு சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு ஆஸ்பத்திரில இருந்து போன் பண்ணுங்க !! ஓகே!!

:))
//

தெரியுமய்யா எனக்கு தெரியும்!

என்னடா ஒரு வேளை ஜெர்மனியின் செந்தேன் மலர் குறிப்புகளிலிருந்து எடுத்திருப்பாரோன்னு நினைச்சு இது உங்கட குறிப்புத்தான்னு இப்ப வெளங்குது

said...

//ராமலக்ஷ்மி said...
புதுகைத் தென்றல் சொன்னதைத்தான் சொல்ல நினைத்தேன். அதை நாங்கள் வாழைக்காய் புட்டு என்போம்.
சின்ன மாறுதல்.

வாழைக்காய் ஜஸ்ட் ஒரே விசிலுக்கு அவித்து தோலுரித்து, துருவி வைத்துக்கொள்ளவும். கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை தாளித்த பின் பொடியா நறுக்கிய இஞ்சி, ரொம்பப் பொடியா அரிந்த பச்சை மிளகாய், சுமார் பொடியா அரிந்த வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதங்கியதும் துருவிய வாழைக்காயும் துருவிய தேங்காய் சிறிதும் சேர்த்துப் பிரட்டி இறக்குங்கள்.

பி.கு: வீட்டில இருந்தே நல்லாருக்குன்னு ஃபோன் பண்ணுவீங்க.//

கண்டிப்பா செஞ்சு தின்னுட்டு நான் போன் இல்லல்ல மெசேஜ் பண்றேன் அதுக்கு நீங்க என்னிய ஆடு பண்ணுங்க

//ம.சிவா said...
//என்ன மக்களே செஞ்சு சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு ஆஸ்பத்திரில இருந்து போன் பண்ணுங்க !! ஓகே!!//

சொன்னதும் வந்து பில் செட்டில் பண்ணிடுவீங்கதானே:))?!//

பயபுள்ள!நீங்க எவ்ளோதான் பில் அனுப்பினாலும் உடனே கேஷ் அனுப்பிவிட்டுடும் :))

said...

///ராமலக்ஷ்மி said...
ஹி..உப்பு சொல்லாமலே சேர்த்திடுவீங்கதானே:))!
//

ரொம்ப காலம் அது சேர்க்காமலே சாப்பிட பழகிட்டேன் அப்பப்ப சேர்த்துப்பேன் :))