இந்த நாள் இனிய நாள் - ஆகஸ்ட் 15

அதிகாலை எழுந்து அவசரவசரமாய் இன்று மட்டும் ஸ்பெஷலாய் வெள்ளைச்சட்டை காக்கி டவுசர் அயர்ன் செய்து அணிந்து நண்பர்கள் குழுவாக பீடு நடை போட்டு பள்ளி சென்று,

தமிழ்தாய் வாழ்த்து....!

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !


பாடி முடித்து,

அதை தொடர்ந்து ஆசிரியர்களின், சுதந்திரத்திற்காய் உழைத்த தலைவர்களின் கதைகள் கேட்டு, அரசு தயவில் வரும் இனிப்பு பெற்று,

முடிவில் தேசிய கீதம் பாடி,

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாமே ஜாகே,

தவ சுப ஆஷிஷ மாகே,

ஜாஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.களித்திருந்த நாட்கள்! - கனவில் வந்துப்போகிறது

அப்பொழுதும் தெரியவி்்லை இப்பொழுதும் புரியவில்லை

இந்தியமாக உருவகப்படுத்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் இன்னும் தம் எல்லையினை தாண்டி வெளியே வரவில்லை என்று!

எல்லோரையும் ஓட ஓட விரட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அரசியல்வாதிகள் அப்பாவி மக்களின் துணைக்கொண்டு!

தற்போதைய நிலையில் நாம் உருவாக்கம் செய்து வைத்திருக்கும் இந்திய தாயின் நிலைமையும் இந்த தாயின் நிலைமையும் ஒன்றுதான்!


ஒற்றுமையாய் இருங்கள் எம் இந்திய தேசத்து மக்களே! ஜாதி, மத, மாநில,மொழி வேற்றுமைகள் மறந்து....!

வருடந்தோறும் வரும் இந்நாளில் மட்டுமாவது நாம் கொஞ்சம் சிந்திப்போம் தேசத்தினை பற்றி!

ஆம் தேசத்தினை பற்றியே! - தேசத்தை நேசமாய் பற்று!

10 பேர் கமெண்டிட்டாங்க:

said...

फ़िर भी हम है हिन्दुस्तानी

said...

என்ன ஆனாலும் நாங்களும் பாரத தாயின் மக்கள்கள். அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் :)

said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்...:)

said...

வருடந்தோறும் வரும் இந்நாளில் மட்டுமாவது நாம் கொஞ்சம் சிந்திப்போம் தேசத்தினை பற்றி!

ஆம் தேசத்தினை பற்றியே! - தேசத்தை நேசமாய் பற்று!
பதிவிற்கு நன்றி.

said...

इनिया सुधान्थिरा तहिना वाज्ह्थ्ठुक्कल!

said...

ఇనియ సుధన్తిర తిన వాజ్హ్త్తుక్కల్!

said...

ಇನಿಯ ಸುಧನ್ಥಿರ ತಿನ ವಾಜ್ಹ್ಥ್ತುಕ್ಕಲ್!

said...

ഇനിയ സുധന്തിര തിന വാഴ്ത്തുക്കള്‍!

said...

எல்லைகளை கூகுள் வழி கடந்திருக்கிறேன்....அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!