படிக்கட்டும் அவள்!பெற்றோர்கள் தம் பிள்ளைகளினை படிக்க சொல்லியே நாம் அறிந்த செய்திகளுக்கு எதிர்மாறாக ஒரு பெண்ணின் அப்பாவுக்கு தன் பெண்ணை மேற்கொண்டு படிக்கவைப்பதில் இம்மியளவும் எண்ணம் இல்லை! - காரணம் பெண் வயதுக்கு வந்த பிறகு வீட்டைவிட்டு அனுப்ப எண்ணமில்லாததுதான்! பழமையில் ஊறிப்போன பாதி பாவி! அப்பெண்ணின் அம்மாவுக்கோ படிப்பறிவு சுத்தமாக கிடையாது! கணவனின் நிழலிலேயே இருந்தவர் அவர்!

இவர்கள் பெற்ற பெண்ணுக்கோ படிக்கும் ஆர்வமும் இருக்கிறது அதற்கேற்ப வாய்ப்புக்களும் வந்து சேர்ந்திருக்கிறது!

பெண்ணுக்கும் படித்தே தீருவேன் என்ற வைராக்கியமும் கூட..

பெண்ணின் மதிப்பெண்ணிற்கேற்ப தொழில்நுட்பகல்லூரியில் இடம் கிடைக்கிறது - அதுவும் அருகாமை நகரிலேயெ

ஆனாலும் பெற்ற தகப்பனாரோ பெண் படித்த பள்ளியில் எனது அனுமதியில்லாமல் என் பெண்ணின் சான்றிதழ்களினை தரக்கூடாது என்ற செய்தியையும் கூறி விட, திகைத்து நிற்கிறாள் பெண் அவள் நிலை கண்டு தன் நிலை நொந்துக்கொள்ளும் தாய்!

பெண்ணின் தாய் எடுத்த முடிவில் இறுதியில் சரணடைந்த இடம் மதுரை உயர்நீதிமன்ற கிளை!

உயர்நீதிமன்றத்தின் உதவியோடு பள்ளியிலிருந்து சான்றிதழ்கள் பெறப்பட்டு அப்பெண் கூடிய விரைவில் கல்லூரியில் சேர்ந்துவிடுவாள்!

ஆனால் பெற்றோர்கள் பிரிந்த நிலைதான் வீட்டினை விட்டு வெளியேறி தம் சொல் கேளாமல் சென்றவர்களை இனி வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி கொண்டு திரியும் பெற்றவர்!

இந்த நூற்றாண்டிலும் கூட தம் கொள்கைகள் தம் மதக்கோட்பாடுகள்தான் பெரிது என்று திரியும் இது போன்ற சில பெற்றோர்களுக்கு அவர்கள் வணங்கும் இறைவன் தான் நல்ல எண்ணங்களையும் நல்ல வாழ்க்கையினையும் வழங்கவேண்டும்!

இது நாள் வரையிலும் தம் கணவனின் நிழலிலேயே வாழ்ந்து தன் பெண்ணின் விருப்பம் நிறைவேறியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்கேற்ப வெற்றி நடைப்போற்று சென்ற அந்த தாய் தான் எடுத்தமுடிவு சரியானதுதான் என்பதனை அவரது தியாகத்தில் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் அப்பெண்ணின் பிற்காலங்கள் உணர்த்த வேண்டும்!

அந்த உள்ளங்களுக்கு...

என் உள்ளத்தினை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுகிறேன்!

வாழ்க நலமுடன் வளமுடன்....!

டிஸ்கி:- பெயர்கள் மதங்கள் மற்றும் ஊர்கள் தவிர்த்த ஒரு உண்மை சம்பவம்!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அந்த உள்ளங்களுக்கு...

என் உள்ளத்தினை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுகிறேன்!

வாழ்க நலமுடன் வளமுடன்....!

said...

துணிச்சலாக எடுத்த நல்ல முடிவு. பாராட்டுக்கு உரியவர் அந்த தாய்! நிலைமைகள் மாற வேண்டும்.. :)

said...

துணிச்சலாக எடுத்த நல்ல முடிவு. பாராட்டுக்கு உரியவர் அந்த தாய்!

said...

அந்த பெண்ணிற்கு என் வாழ்த்துக்கள்...

said...

அடப்பாவிகளா இப்பயும் இப்படி இருக்காங்களா?

said...

அந்த பெண்ணிற்கும் அவள் தாய்க்கும் வாழ்த்துக்கள்.

said...

படிக்கட்டும் அவள் ...
இந்த காலத்தில் இப்படி ஒரு அப்பாவா?என்று கேட்கத் தோன்றுகிறது.இருப்பது சாத்தியமே .எப்படி?முதாதையரின் ஜீன் என்று ஒன்று அழியாமல், வம்சத்தைத் தொடர்ந்து ,ஏதோ ஒரு கருவில், தன் குணாதிசயங்களோடு,பழக்க வழக்கங்களோடு இடம் பிடித்துவருவதால் ...அந்தக் கால எண்ண ஓட்டத்தோடு இன்றைய அப்பாக்களோ அம்மாக்களோ இருக்க வாய்ப்பு இருக்கிறது.எனவே இது அவரவர் தலையெழுத்துதான்