கிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து....

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்ப டுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என் பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்க ளின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக் கூடாது.

சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸôர் தெரி விக்கின்றனர்.


நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை.

நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டி விட முடியும்.

சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது.நட்சத்திர ஹோட்டல்கள், கிளப் களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது பிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும்.

இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக் கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட் டுக் காலம் குறித்து தகவல் தெரி விக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிடவேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பண்ணித்தமிழ் = கிரெடிட் கார்டு

நற்றமிழ் = கடனட்டை

நன்றி.

said...

Useful information. I have lost my credit card once and worried a lot - no money loss, though.