சாராய சாவு - கண்டுபுடிச்சிட்டோம்ல!

கிட்டதட்ட 180 பேருக்கும் மேல் பலிவாங்கிய சாராய சாவின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சாராயத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளதாம்!

இது பற்றிய செய்தியாக...

தமிழகம், கர்நாடகத்தில் சாராயம் குடித்து 134 பேர் இறந்த சம்பவத்துக்கு, அதில் கலக்கப்பட்ட "மெத்தனால்'தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராய விற்பனையாளர்கள் போலீஸரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பழைய சாராய வியாபாரிக ளைக் கணக்கெடுத்து கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

100 மில்லி லிட்டர் கொண்ட எத்தில் ஆல்கஹால் அல்லது எரிசாராயம் ஆகியவற்றைக் கொண்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தால் 1,000 மில்லி எத்தில் ஆல்கஹால் கிடைக்கும்.இதைக் குடிப்பதால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் சிலர் எத்தில் ஆல்கஹாலுக்குப் பதிலாக மெத்தனாலை வாங்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இது முதலில் கண் எரிச்சலைக் கொடுக்கும். பின்னர் கண் பார்வை மங்கி உயிரைப் பறிக்கும்'' என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. "


இதோடல்லாமல் ஆய்வகங்களில் எப்படி சரியான முறையினில் சாராயம் தயாரிப்பது என்று கரெக்ட் பார்முலாவினை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழிமுறைப்படுத்தி கொடுக்கவும் ஏற்பாடு செய்ய *** உத்தரவிட்டுள்ளது!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///கிட்டதட்ட 180 பேருக்கும் மேல் பலிவாங்கிய சாராய சாவின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சாராயத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளதாம்! ///
இனிமேலாவது சரியான விகிதத்தில் கலந்து கிடைப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.

said...

பேட்டரி கட்டை, மரப்பட்டை, அழுகிய பழங்கள், கரப்பான் பூச்சி, இதெல்லாம் அடுத்த பதிவுல வருமா?,.... :)))

said...

//தமிழ் பிரியன் said...
பேட்டரி கட்டை, மரப்பட்டை, அழுகிய பழங்கள், கரப்பான் பூச்சி, இதெல்லாம் அடுத்த பதிவுல வருமா?,.... :)))
//

அனுப்புறோம்ய்யா அனுப்புறோம்!

அங்கிங்கெனதபடி எங்கும் ஸ்டீரிக்டா இருக்கற அந்த ஊருல இருந்துக்கிட்டே இவ்ளோ எக்ஸ்பெக்டேஷான என்னைய நீங்க ரொம்ப ஆச்சர்ய படுத்திறீங்க :)))))))

said...

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நீங்க தான் திலகவதி ஐ.பி.எஸ் ரேஞ்சில பிடிச்சீங்கன்னு நினைச்சேன்