மதியம் சனி, மார்ச் 01, 2008

வேணாம் ராசா வந்துடு...!

மலைக்குன்றுகள் நிறைந்த, எந்த நேரமும் கடுமையானதாக்குதல்கள் நடைபெறும் ஆப்கானின் ஹெல்மண்ட் ( இந்திய விமானம் கடத்தல் நாடகம் அரங்கேறிய கந்தகாரின் அருகாமை பகுதிதான்) மாகாணாத்தில் இங்கிலாந்தின் ராணுவத்தில் பணி. சார்லஸ் டயானா ஜோடியின் அருமை புதல்வன் ஹாரிக்கு..!

அரச பரம்பரையில் இரண்டாவது ஆளாக போர்க்களம் கண்டவர்,சென்றவர்தான் ஹாரி!
இச்செய்தி கேட்டு இங்கிலாந்து செய்தி நிறுவனங்கள் ஹாரியை பின் தொடர்வதற்கு முன்பே பாதுகாப்பு துறையிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு ரகசிய தகவலாக இத்தகவலை ரகசியமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது!

டிசம்பர் மாதத்திலிருந்தே தன் பணியை ஆப்கானிஸ்தானில் துவக்கிய ஹாரிக்கு மூன்றாம் நிலையில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தை புகைப்படங்களோடு, புதன் கிழமை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியது ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கை !

கொஞ்சம் புகைப்படங்கள்தான் வெளியான நிலையில் பல தரப்பிலிருந்தும் விதவிதமான புகைப்படங்கள் இன்று பத்திரிக்கைகள்,இணையங்களை ஆக்ரமித்துக்கொள்ள,எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல கதையாகி விட்டது ஹாரியின் நிலைமை!

இந்நிலையில் அரச குடும்பத்தின் சார்பில் ஹாரியை திரும்ப வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது! இன்னும் சில நாட்களில் திரும்ப சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்.ஆப்கானிஸ்தானில் போர்க்களத்தில் பணி புரிந்த இளவரசருக்கு தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு அவர் தற்போது இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டுள்ளது!



PHOTOS - HERALD TRIBUNE


மே மாத காலத்திலேயே இவருக்கு இராக்கில் இருக்கும் ப்ளூஸ் & ராயல் படைப்பிரிவில் பணியில் செல்ல தயாராக இருந்தபோது கடைசி நேரத்தில் அங்கிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில்,பாதுகாப்பு காரணங்களால் தவிர்க்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பரில் ஆப்கானிஸ்தான் சென்றவராம்!

மேலும் சில படங்களுக்கு இங்கே செல்லவும்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவாரசியமான தகவல் தான்.

ரசிகன் said...

இளவரசருக்கு ஆசை நிறவேறிய மகிழ்ச்சி...
வீரர்களுக்கு அவரை பாதுகாக்க வேண்டுமே என்ற கூடுதல் சுமை/கவலை..:)

ரசிகன் said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...

சுவாரசியமான தகவல் தான்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.....