பட வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! ஆனால் நிஜவாழ்க்கைக்கு நிச்சயம் இதை போன்றதொரு அருமையான மனத்திண்மை அல்லது மனிததன்மை இருந்தால் நீங்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!
சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு! - அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!- சிலருக்கு ஏனோ அது போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம். நாம் நினைக்கின்ற அல்லது நாம் அடைய முயல்கின்ற எதோ ஒன்றினை மற்றவர்கள் தடுத்துக்கொண்டாலோ, அல்லது வேற வகையில் அதை பெற முடியாதபடி செய்தாலோ நமது கோபங்கள் அவர்களை சென்று அடைகின்றன மிதமிஞ்சிய கோபத்தின் வெளிப்பாடே இப்படியான நிராகரித்தல் நிகழ்வுகள்.
சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல்,தம் குடும்பத்தினரையும் கூட பழக விடாமல் ஒரு வீணாய்ப்போன வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்!
தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,
கேவலப்படுத்திட்டாங்க என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்! இந்த வார்த்தைகளை பயன்படுத்திறவங்களை வைச்சுக்கிட்டே நாம ஓரளவுக்கு அம்மனிதர்களை பற்றி நிறை தெரிந்துக்கொள்ளலாம் - அனுதாபம் தேடி அலைபவர்கள் என்று!
மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க பயன்படுத்த வேண்டிய விசயம்ன்னு எதுவும் பிரத்யோகமா இல்லைங்க வழக்கமான அஸ்திரம்தான் ஜஸ்ட் ஒரு புன்சிரிப்பு அல்லது நெகிழ்வான அல்லது நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)

அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)
(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)
நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!
சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!




