தந்தையர் தினம்


டிஸ்கி:- வலைச்சரத்தில் முன்புஅப்பாஎன்ற தலைப்பில் பதிவர்களின் பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை மீள் பதிவாக தந்தையர் தினத்தில்...!

۞۞۞۞۞

வேண்டாம் ராஜா! வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"

இளாவின் இந்த பதிவில் எல்லோருடைய அப்பாக்கள் மனத்தின் வெளிப்பாடுதான் இது !


۞۞۞۞۞


குடும்ப அமைப்புக்களால் பிரிந்திருக்கவேண்டிய சூழலில் தம் பெற்றோரை அருகில் இருந்தும் அடிக்கடி காண இயலாத சூழலில் அது பற்றிய தன் எண்ணங்களை குற்ற உணர்வுகளாய் வெளிப்படுத்தும் இந்த மகளின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்தான் - அன்பால் அன்பினை


۞۞۞۞۞

அவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன். அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு "குமரன் குடில்" என்று பெயர் வைக்க வேண்டும். - லக்கிலுக்கின் நைனா

۞۞۞۞۞

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள் இது கிருத்திகாவின் அப்பா பற்றிய பதிவு

۞۞۞۞۞

கோபியின் உள்ளம் சொல்லும் நல்ல பதிவுகளில் டைரிக்குறிப்புக்களாய் செம கலக்கலானது! உங்கள் கண்களும் கூட கொஞ்சம் கலங்கும்!

என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்." என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

۞۞۞۞۞

தமிழ் ஈழத்து அப்பா பற்றிய மகளின் எண்ணங்கள் கவிதையாக,


களத்தில் இரு புத்திரரையும்

புலத்தில் மறு பிள்ளைகளையும்

தொலைத்து விட்டு

எங்கோ அந்தகாரத்துக்குள்

பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி

களைத்த உன் விழிகள்

பன்னிரண்டு வருடங்கள் கழித்து

என் முகம் பார்த்ததும்

கொட்டும் அருவியாகி

எனை நனைத்த போது

உனை அணைத்துத் தாயானேன்

۞۞۞۞۞

வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்

மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!

மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்

கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!

இவர் ராஜாவின் அப்பா

۞۞۞۞۞

நீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா???? என்று அப்பாவுடனான பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் பதிவு, இவரின் பிரார்த்தனையான

"அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும்" - இதுவும் கூட கண்டிப்பாக ஆண்டவனின் அருளால் அப்பாவின் துணையால் நலமாக நடந்தேறும் என்ற வாழ்த்துக்களோடு...

۞۞۞۞۞

எனக்கு ரொம்ப பிடித்த, அப்பாவின் மீதான தன் அன்பினை வெளிப்படுத்தும் யாத்தீரிகனின் இந்த கடிதம்

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

۞۞۞۞۞

அப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால்பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.என்று தன் அப்பா பற்றிய எண்ணங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளும் மங்கை அக்காவின் இந்த பதிவு

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

nalla irukku..

ellaroda appakkalukkum thanthiyar thina (valthukal) vanakangkal

said...

அருமை

வாழ்த்துகள்

said...

கலக்கல் தொகுப்புகள்! நன்றி தம்பி :)

said...

Azhagaana thoguppu :)))

Ella Appakalukkum iniya thandhaiyar dhina vaaazhthukkal :))

said...

நல்ல தொகுப்பு

வாழ்த்துக்கள்..

said...

நல்ல பதிவு..

வாழ்த்துகள்..

said...

திடீர்னு அசத்தலா யோசிச்சு கலக்கலா பதிந்து விடுகிறீர்கள்!!!!
பூங்கொத்து!!!!

said...

தந்தையர் தின பதிவொன்று என்னுடைய பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்...

நுழைந்து பாருங்க அண்ணா......

said...

அருமையான தொகுப்பு ஆயில்யன். மிக்க நன்றி.

said...

கலக்கல் தொகுப்பு பாஸ்,

நன்றி. பொறுமையா படிக்கறேன்

said...

கலக்கிட்டிங்கண்ணே ;))

சூப்பர் தொகுப்பு ;)

said...

நல்ல தொகுப்பு... டச்சிங்கான வேலை பண்ணிட்டீங்க.. தந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!

said...

அசத்தறீங்களே சின்னப்பாண்டி!!
எனக்கு பல பதிவுகள் புதிது! தந்தையர் தின வாழ்த்துகள், சின்னபாண்டி! :-)

said...

அருமையான தொகுப்பு ஆயில்யன். முதன்முறையாக அவற்றை படித்து நெகிழ்ந்தேன்.

நன்றியும் வாழ்த்துக்களும்.

said...

மீள்பதிவை எத்தனை ஆண்டுகளும் மீளப்போடும் அளவுக்கு சிறப்பு, நன்றி சி.பா

தந்தையர் தின வாழ்த்துகள்

said...

அன்பு தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நம்ம தந்தையர் தின கவிதை இங்கே சென்று படியுங்கள். http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_20.html

Anonymous said...

This is my dad: http://the-nutty-s.blogspot.com/2009/03/blog-post.html

I miss him......

Anyways Thanks for the links

said...

அழகான வெளிப்பாடின் தொகுப்பு இந்தப் பதிவு,

உங்களின் தந்தையர் தினப் பதிவும் எனக்கு ரொம்பப் பிடித்தம்.

said...

சூப்பர் தொகுப்பு. முக்காவாசிப் பேரோட அப்பா பதிவுகள் இப்போதான் பாக்றேன். சூப்பர்.