நல்லா பரீட்சை எழுதுங்க...!


காலையிலேயே எழுந்துவிடுங்கள்!

ரிலாக்சாக இருங்கள்!

உங்களுக்கு மட்டும் தான் பரீட்சை என்பதில் கவனத்தை வைத்துக்கொள்ளுங்கள் - குடும்பமே டென்ஷனாக இருக்க தேவையில்லைத்தானே!

உங்களுக்கு பிடித்த பேனாக்களை உங்கள் வசதிப்படியே வைத்துக்கொள்ளுங்கள்!

சிலரது வீடுகளில் பெற்றோர் புது பேனா வகையறாக்களை வாங்கி ஆசையோடு தருவார்கள் - பெற்றுக்கொள்ளுங்கள்!

ஆன்மீக ஈடுபாடு இருப்பினும் கொஞ்சம் கடவுளையும் கூ(கும்)ப்பிட்டுக்கொள்ளுங்கள்!

தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பே இருக்குமாறு சென்றுவிடுங்கள்!
(அன்றைய நாளில் இந்த மணித்துளிகள் வரையிலும் படிக்க வேண்டிய தேவையே இல்லை- தினமும் சரியாக படித்திருந்தால்!)

தேர்வு அறைக்குள் சென்று அமர்ந்து பின்னர் அக்கம் பக்கம் பார்த்து சிரிப்பதோ அல்லது பாடம் சம்பந்தமாக பேசுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்!

கையில் தேர்வு வினாத்தாள் பெற்றதும் அதை முழுவதும் மிகப்பொறுமையாக ஒரு முறை பாருங்கள்!

பிளான் செய்துகொள்ளுங்கள் எவற்றை முதலில் எழுதவேண்டும் என்று (தேவைப்பட்டால் மொக்கையை கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள்)

ரொம்ப பெரிய கேள்விகளுக்கான பதில்களில் உங்களது விடையின் சாரம்சத்தை முதலில் சிறு முன்னுரையாக்கி பின்னர் தெளிவாக எழுதுங்கள்!

எழுதுங்கள் நல்ல தெளிவான வார்த்தைகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியும் வகையில்!

புலவர்கள் பரம்பரையிலேயே வந்தாலும் கூட நீங்கள் எழுதப்போவது காகிதத்தில்தான் என்பதை உணர்ந்து,பேனாவை எழுத்தாணியாகவோ அல்லது காகிதத்தை ஒலைச்சுவடியாகவே தீர்மானித்து நினைத்துக்கொள்ளாதீர்!

நேரத்தை உத்தேசமாக கணக்கிட்டு ஒவ்வொரு வினாவிற்கும் பிரித்துக்கொண்டு தேர்வு முடிவடைவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே போஸ்ட் புரொடெக்‌ஷனுக்கு தயாராகி விடுங்கள்!

கட்சி கலர்களோ அல்லது கண்ட கண்ட எரிச்சலை வரவழைக்கும் விதத்திலோ போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளாதீர்கள்!

கடைசி நிமிடங்களில் சுருங்க சொல்லி விளக்கும் விதமான விடைகளுக்கேற கேள்விகளை எடுத்துப்போட்டு எழுதுங்கள்!

முடித்துவிட்டு வெளியேறுகையில் தேவையற்ற தேர்வு தாள் விவாதங்களை எழுப்பாமல்,

வீட்டுக்கு நடையை கட்டுங்கள்!

வெற்றி!!!

உங்கள் வாழ்க்கைக்கு வழியை காட்டும்!

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Vaazhththukkal!

said...

ஆயில்ஸ்,
அட்டகாசமான பதிவு. நானும் ஒரு பதிவு போடறேன் :)

said...

நான் SSLC எழுதும் போது இந்த மாதிரியெல்லாம் யாரும் சொல்லவில்லை.கேள்வித்தாள் வாங்கிய சில நிமிடங்கள் தான் அந்த குழப்பம் அப்புறம் என்ன நாளையில் இருந்து இந்த பாடம் படிக்க வேண்டியதில்லை என்ற சந்தோஷமே என்னை வேகமாக எழுதத்தூண்டியது.
இந்த டென்ஷன் வகையராக்களை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.

said...

rompa nari anne. ithellam munnadi padikkum pothu seyyalai. senjathu irandu thaan
///முடித்துவிட்டு வெளியேறுகையில் தேவையற்ற தேர்வு தாள் விவாதங்களை எழுப்பாமல்,

வீட்டுக்கு நடையை கட்டு////

said...

இலகுவான கேள்விகளுக்கு முதலில் பதிலளிப்பதும் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்பது என்னுடைய கருத்து...
நல்ல ஆலோசனை...

said...

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் யாரும் இப்படி சொல்லித்தரலை!!!

ஆனாலும் நான் கணக்குலே நூத்துக்கு நூறாக்கும்!!!

நல்ல பதிவு ஆயில்யன்!!!

said...

மகனுக்கு இன்று முதல் பரீட்சை ஆரம்பம். நல்ல பதிவு. காண்பிக்கிறேன் அவனிடம். நன்றி.

said...

//தேர்வு அறைக்குள் சென்று அமர்ந்து பின்னர் அக்கம் பக்கம் பார்த்து சிரிப்பதோ அல்லது பாடம் சம்பந்தமாக பேசுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்!
//

நச்!

said...

அண்ணே சமீபகாலமா உங்க பின்னூடத்த எந்தப் பதிவிலும் காணாமல் பதிவுலகமே வெறுமையாகத் தெரிந்தது. ஊரில் இருந்து திரும்பி விட்டீர்கள் என நினைக்கிறேன். ஊரில் அனைவரும் நலம்தானே??

:)

said...

முடித்துவிட்டு வெளியேறுகையில் தேவையற்ற தேர்வு தாள் விவாதங்களை எழுப்பாமல்,

வீட்டுக்கு நடையை கட்டு////

athutha examkku padikkara valiya paarunga..

All the Best

said...

சூப்பர்

போஸ்ட் ப்ரொடக்‌ஷன் - ரசித்தேன்.


எழுதுங்கள் நல்ல தெளிவான வார்த்தைகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியும் வகையில்!//

ஆமா, இப்ப நம்ம ஆயில்ஸ் அண்ணா எழுதியிருக்காரே அது மாதிரி எழுதனும்.

said...

பிளான் செய்துகொள்ளுங்கள் எவற்றை முதலில் எழுதவேண்டும் என்று (தேவைப்பட்டால் மொக்கையை கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள்) //

இது பரீட்சை எழுதறவங்களுக்கா இல்ல ப்லாக் எழுதறவங்களுக்கா ந்னே

said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

பிளான் செய்துகொள்ளுங்கள் எவற்றை முதலில் எழுதவேண்டும் என்று (தேவைப்பட்டால் மொக்கையை கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள்) //

இது பரீட்சை எழுதறவங்களுக்கா இல்ல ப்லாக் எழுதறவங்களுக்கா\\

நானும் கூவிக்கிறேன் ...

said...

Vaazhththukkal!

said...

ஆகா..ரொம்ப நல்ல பதிவு!

said...

அண்ணன் சொன்னா கரெக்டுதான்...!

said...

எங்க இருக்கிறிங்க ஆளைப்பாக்கவே முடியல... ?