எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

சைக்கிள் பெரும்பாலானோர் வாழ்வில் வெகு சகஜமாகவே வந்திருக்கும் சில சமயங்களில் சென்றிருக்கும் வாகனம்தான்!

எரிபொருள் பயன்படுத்தா இரண்டு சக்கர வாகனங்களால் மட்டுமே இந்த உலகினை மாறிவரும் தட்பவெப்பசூழலிலிருந்து பாதுகாத்து வரும் இளையதலைமுறைகள் நலமுடன் வளமுடனும் வாழ வழிவகை செய்யக்கூடிய விஷயங்களாம்!



உடல்நலத்திற்கும் ஏதுவானதாகவும் சுற்றுசுழலிற்கு ஏற்றதாகவும் மற்ற வாகனங்களை ஒப்பீடுகையில் விலை குறைவாகவும் இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் வருங்காலங்களில் அதிகரிக்ககூடும்!

இன்னுமொரு இரண்டு சக்கர வாகனம் கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கும் இரட்டை மாட்டு வண்டிகள்தான்!

மாறிவரும் காலத்துக்கேறப, எந்தவித யோசனையுமின்றி சுகமாக பயணிக்க வேண்டி, மாட்டு வண்டிகளை மறந்து டிராக்டர்களில் பயணித்து கொண்டிருக்கின்றனர் இன்றைய விவசாயிகளும் அவர்களால் விதைக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட நெல்மணிகளும் கூட.....!

எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகன பயணத்தை மீண்டும் மலர வைக்க தருணம் எதிர்பார்க்கவேண்டாம்...!

தொடர்வோம் பயணத்தை வரும் தலைமுறைக்கு வளமான வாழ்வினை வழங்கவேண்டி......!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல பதிவு... :)
நானெல்லாம் சைக்கிள் தான்.... :
அதுக்கு இரண்டு காரணம்
1. பைக் வாங்க காசு இருந்ததில்லை (இப்ப இருக்கு :) )
2. ஓட்டத் தெரியாது.

said...

தோஹால இருந்து நீங்க இந்தியா வரப்ப மாட்டுவண்டிலயே வந்திருங்க!!

said...

அங்கல்லாம் மாட்டு வண்டி இருக்கா? ஒட்டக வண்டின்னாலும் ஓகே!! அதுலயே இந்தியா வாங்க!

said...

நல்ல பதிவு... :)
எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது:(

said...

ஆமா ப்ளைட்டுக்கு எத்தனை சக்கரம்பா??

said...

//மங்களூர் சிவா said...
தோஹால இருந்து நீங்க இந்தியா வரப்ப மாட்டுவண்டிலயே வந்திருங்க!!
//
எப்பவுமே ஒரு கன் டினியுட்டி இருக்கற மாதிரி பாத்துக்கோய்யா!

இப்படி இருக்ககூடாது


லேடீ பேர்ட பாக்குறதுக்கு நீங்க மாட்டுவண்டியில வாங்க :))

அப்படி இருக்கணும்

ஹய்யோ ஹய்யோ!

said...

//நிஜமா நல்லவன் said...
நல்ல பதிவு... :)
எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது:(
//

ச்சோ பாவம் நீங்க :)

said...

//தமிழ் பிரியன் said...
நல்ல பதிவு... :)
நானெல்லாம் சைக்கிள் தான்.... :
அதுக்கு இரண்டு காரணம்
1. பைக் வாங்க காசு இருந்ததில்லை (இப்ப இருக்கு :) )
2. ஓட்டத் தெரியாது.
//

உங்களுக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாது

ச்சோ பாவம் நீங்க :)

said...

// மங்களூர் சிவா said...
ஆமா ப்ளைட்டுக்கு எத்தனை சக்கரம்பா??
/

அட இந்த லீவுக்கு அத எண்ணுறதுக்கு தானய்யா கீழ இறங்கி நின்னுக்கிட்டிருந்தேன் படுபாவி பைலட் ஒரு ஹாரன் கூட அடிக்காம வண்டியை எடுத்துப்புட்டான்! :(

said...

//மங்களூர் சிவா said...
அங்கல்லாம் மாட்டு வண்டி இருக்கா? ஒட்டக வண்டின்னாலும் ஓகே!! அதுலயே இந்தியா வாங்க!
/

நான் வர்ரது இருக்கட்டும்! ஒழுங்கா நாட்டுக்காக கை காலை அடக்கிட்டு வீட்ல குந்தியிருக்கணும் புரிஞ்சுதா? இங்க அங்கன்னு ஊரசுத்தி இயற்கைவளங்கள வேஸ்ட் பண்ணப்படாது என்ன புரிஞ்சுதா?

said...

// நான் வர்ரது இருக்கட்டும்! ஒழுங்கா நாட்டுக்காக கை காலை அடக்கிட்டு வீட்ல குந்தியிருக்கணும் புரிஞ்சுதா? இங்க அங்கன்னு ஊரசுத்தி இயற்கைவளங்கள வேஸ்ட் பண்ணப்படாது என்ன புரிஞ்சுதா? //

சரியாகச்சொன்னீர்கள்

தங்கது அணைத்து கருத்துகளும் என் எண்ணத்திற்கு ஒத்து இருக்கின்றன இருசக்கர வாகனம், புலால் உண்ணாமை, சுற்றுச்சூழல் மாசுபடுத்தாமை, தூய தமிழ் பிரயோகம் ஆகியன, இது அனைவருக்கும் இருக்கவேண்டிய அனால் இல்லாத கொள்கைகள்

மனிதநடமாட்டம் இல்லாத அமைதியான இடங்களுக்கு (பெரும்பாலும் மலையோ அல்லது குன்றாகவோ இருக்கும் ) மாதம் ஒருமுறை செல்வது வழக்கம் அப்படிச்செல்லும்போது துணைக்கு அங்கு உடன் வருபவர்கள் அங்கிருக்கும் அமைதியான சூழலை சீர்குலைக்கும்போது மனம் பெரிதும் வருந்துகிறது. முடிந்தவரை நம் சமுதாயத்தை மாற்ற நினைக்கிறேன் ஆனால் அதற்குள் ஓட்டை விழுந்துவிடும்போலிருக்கிறது ( ஒசானில் )