மார்ச் 22 2008 உலக தண்ணீர் தினம்
தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று ஒரு ஆய்வு லண்டன் யூனிவர்ச்சிட்டியில், ஜான் ஆண்டனிங்கற பேராசிரியர் செஞ்சு இந்த வருடத்திற்கான, ஸ்டாக்ஹோம் வர்ச்சுவல் வாட்டர் 2008 - 150000 டாலர் விருது வருடந்தோறும் தண்ணீர் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்யும் தனிநபர்கள்,தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது - விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்! தண்ணீரை நாம் குளிக்க,குடிக்க பயன்படுத்தும்போது மட்டும் சிக்கனமாக இல்லாமல் நமது அன்றாட தேவைகளின் பயன்பாட்டிலும் சிக்கனமாக இருக்கமுடியும், இருக்கவேண்டும் என்பதுதான் இவரது முக்கியமான தீம்!
சரி வர்ச்சுவல் வாட்டர் அப்படின்னா என்னான்னு நீங்க ரொம்ப யோசிக்கவேணாம்!
நாம் காலையிலே எந்திரிச்சு,பல் தேய்ச்சு சிக்கனமா குளிச்சு ரெடியாகுறோம்னு வைச்சுக்கோங்க -தண்ணீர் சிக்கனம் பண்ணி குளிக்காதவங்க ரொம்ப பெஸ்ட்!- அதுக்குப்பிறகு சாப்பிடுவோம்.
அந்த சாப்பாட்டை ரெடி பண்றதுக்கு நாம எடுத்துக்கிற தண்ணியில கொஞ்சம் சிக்கனம் பண்ணனும், சாப்பிட்டு முடிச்சதும் கை கழுவுறதுல கொஞ்சம் சிக்கனம் இப்படியே ஆரம்பிச்சு இரவு முடியறவரைக்கும், கொஞ்சம் சிக்கனம்,
இன்னும் கொஞ்சம் சிக்கனமா இருந்தா எவ்ளோ தண்ணீர் சேமிக்கலாம்?
இதைத்தான் நம்ம ஆண்டனி சப்ஜெக்ட்டா எடுத்து அலசி ஆராய்ந்து அறிவிச்சிருக்காரு!
டயட்ல சாப்பிடுறவங்களோட ஒரு நாளைய தண்ணீர் தேவை,சைவம் சாப்பிடும் நபர்களின் ஒரு நாளைய தண்ணீர் தேவை அப்புறம் அசைவம்
சாப்பிடும் மனிதர்களின் ஒரு நாளைய தண்ணீர் தேவை இவைகளில் எதற்கு அதிகம் தண்ணீர் தேவை அதிகமிருக்கும் என்று அனைவருக்குமே ரொம்ப
ஈசியா தெரிஞ்சுருக்கும்! (இதெல்லாம்தான் அவரது ஆராய்ச்சிக்குள்ள இருக்குங்க!)
இது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவை சேமித்து மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும்!இல்லாவிடில் தண்ணீர் தேவைக்கு நாம் இப்போதிருந்தே முக்கியத்துவம் கொடுத்து அதிக செலவுகளை செய்ய நேரிடலாம்!
சரி நம்மலால முடிஞ்சது தண்ணீரை உபயோகப்படுத்துவதை இனி கொஞ்சம் குறைச்சுக்கவேண்டியதுதான்!
மதியம் வியாழன், மார்ச் 20, 2008
தண்ணீர் - மார்ச் 22
# ஆயில்யன்
Labels: உலகம்
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் கமெண்டிட்டாங்க:
சிந்திக்க வைக்கும் பதிவு. எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல நாடுகளுக்கிடையில் சண்டைசச்சரவுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் சேமிக்கும் சிறிதளவு நீரால் பெரிதாக என்ன நடந்துவிடப்போகிறது என்று எண்ணாமல் சிறு துளியே பெரு வெள்ளம் என்பதனை மனதில் இருத்தி அனைவரும் செயல்பட்டால் நலமே. நல்ல பதிவை வழங்கிய கடக ராசிகாரருக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.
உலகிலேயே தினமும் அதிகமான தண்ணீர் உபயோகப்படுத்துபவர்களின் மீட்டிங் இன்று கராமா கிடேசன் பார்க்கில் நடைபெறுகிறது...
நல்ல பதிவு.
யோசிக்க வேண்டிய விசயம்.
Post a Comment