LITTER இந்தியாவாக மாறும் LITTLE இந்தியா - சிங்கப்பூரில்!ஆயிரக்கணக்கில் காலியான தண்ணீர் பாட்டில்கள்
அதே கணக்கில் காலியான குளிர்பான பாட்டில்கள்
எண்ண இயலாத அளவு சிறு சிறு காகித கிண்ணங்கள்
எங்கு பறக்கின்றன என்று தெரியாத அளவு சிறு சிறு காகிதங்கள்

இவையனைத்தையும் ஒன்று சேர்த்து,கூட்டி பெருக்கவைத்து சுத்தப்படுத்து வேலை செய்யும் சகோதரர்களை நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், கஷ்டமாகத்தான் இருக்கிறது!( அட அது அவங்க வேலைத்தானப்பா அப்படின்னுத்தான் பலரும் சொல்வார்கள்! சரி அவர்களின் சொல்படியே விட்டுவிடுவோம்!)

சரி இந்த விஷயங்கள் எங்கே நடக்குது? என்று கேட்பவர்களுக்கு, ரோட்ல சோத்தை போட்டு திங்கலாம்டா! அப்படி ஒரு சுத்தம்! அப்படின்னு ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் நாடான சிங்க்ப்பூரில்தான்...!

சரி இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது யார் என்று கேட்டீர்களெனில் அதுவும் நாம்தான்! நம்மைப்போன்று வேலை தேடி வந்திருக்கும் மற்ற இந்திய மாநிலத்தவர்களும்தான்!

ஒவ்வொரு வாரமும் வார இறுதி விடுமுறை நாளில் நண்பர்களை சந்தித்து கூடி (குடி?!) களித்திருந்து செல்லும் இடமான லிட்டில் இந்தியா பகுதியில்தான் இந்த குப்பைகளின் அலங்கோலங்களை காணமுடியுமாம்! இத்தனைக்கும் அந்த பகுதியில் சிறப்பு ஏற்பாடுகளாய் குப்பை தொட்டிகளினையும் அதிகப்படுத்தி வைத்துள்ளார்களாம்!

இத்தனைக்கும் சிங்கப்பூரில் பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு தண்டனையும் உண்டாம்! அப்படி இருக்கும்போதே இப்படி!!

வார இறுதி நாளில் அங்கு சுத்தம்செய்யும் பணியாளர்களுக்கு கண்டிப்பாய் அவர்களின் மனசுக்குள் எழும் கேள்வி...

ஏம்ப்பா நாங்களும் வெளிநாட்லேர்ந்துதான் வந்து வேலை பாக்குறோம் எங்களுக்கும் இன்னிக்கு ரெஸ்ட் கிடையாதா....???? - இதுவாகத்தான் இருக்கும்!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆஹா ஆப்பு வச்சுட்டீங்களே?

said...

அரசாங்கம் என்னென்னவோ முயற்சிகள் பண்ணி பார்த்துட்டு அட போங்கப்பான்னு விட்டுட்டாங்க.

said...

நானும் சிங்கப்பூரன் தான், விஜயகாந்த பாணியில் சொல்லனுன்னா "சிங்கப்பூர்ல எனக்கு பிடிக்காத ஒரே ஏரியா லிட்டில் இந்தியா தான்" , சகட்டு மேனிக்கு குப்பைய போடுறது, தாறுமாறா ரோட்ட கிராஸ் பண்றது, கண்ட எடத்துல உக்காந்து சாப்பிட்டு பீர் பாட்டில் ,சாப்பிட்ட பேப்பர் எல்லாத்தையும் வீசுறது இப்படி நிறைய நடக்குது அங்க , அரசாங்கம் ஏன் ஒன்னும் செய்ய மாட்டேங்குதுன்னு தெரியல, ஒழிஞ்சு போங்கடான்னு அந்த ஏரியாவையே தண்ணீ தெளிச்சு விட்டாங்களா அல்லது இவனுங்கள திருத்தவே முடியாதுன்னு ஒன்னும் ஆக்ஷன் எடுக்காம விடுறாங்களான்னு தெரியல , 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ' , இந்தியாவுல இருந்து வந்ததுனால அதே பழக்கம் இங்கயும் தொடருது, ஒன்னும் செய்ய முடியாது சார், நம்மவர்கள் வீட்டில் காட்டும் சுத்தத்தை வெளியில் காட்ட மாட்டார்கள் .

said...

இது இந்தியர்கள் இருக்கக் கூடிய பல இடங்களில் உள்ள பிரச்ச்சினை தான்... திருந்தனும்.... :)

said...

ஞாயித்துக்கிழமை மத்தியானத்துக்கு மேல் விவரம் தெரிஞ்சவுங்க சிராங்கூன் ரோடுக்குப் போகப்பிடாது.ஆமாம்.

போலீஸ் கண்காணிப்பு மேடைன்னு உசரத்துலே அமைச்சு வச்சுருக்காங்க.

தேனீக்கூடுகளைக் கலைச்சதுபோல ஒரு 'உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'சத்தம் அலையலையாப் பரவுது.

said...

அட இதப் போய் சீரியஸா எடுத்துகணுமா என்ன. சிங்கையில் "சைனா டவுன்" போனா சீனாவுக்கே போன மாதிரி எபெக்ட் இருக்கும். மலேய் வில்லேஜ் போனா மலேசியா போன மாதிரி. அப்ப குட்டி இந்தியா இப்படித் தான் இருக்கணும் என்று அரசாங்கமே சும்மா இருக்குதோ என்னவோ !!!!