வெர்னியர் ஸ்கேல்

                                பத்தாவது படிக்கிறப்ப பசங்களை ஒரே ஒரு  வாட்டி பிஜிக்ஸ் (ரைமிங்காவே பிச்சிக்கிச்சுத்தாங்க வரும்!) லேப்ன்னு சொல்லி, ஸ்கூல்ல இருக்கிற ஒரு கார்னர் ரூம்ல அழைச்சிட்டுபோய் சில பல உபகரணங்களை ஒரு வாட்டி ரவுண்ட் அடிச்சு காமிச்சுட்டு ஓடிப்போங்கடான்னு சொல்லுவாங்க அங்க அதிசயமா பார்த்த பொருள் வெர்னியர் ஸ்கேல்.

எப்படியோ 10வது பிச்சுக்கிட்டு, பாலிடெக்னிக் பக்கம் வந்து டமால்ன்னு வுழுந்த பிறகுதான், ஒரு சில நாட்களில் எழுப்பி உக்கார வைச்சு பிஜிக்ஸ்,கெமிஸ்ட்ரி அப்புறம் கணக்கு ஒர்க்‌ஷாப்புன்னு லிஸ்ட் போட்டு சொல்லுறப்பவே ஒரு முடிவுக்கு வந்திருவோம், மாட்டுனோம்டான்னு!

அங்க பிளஸ்1 பிளஸ்2க்கு பயந்து இங்க ஓடிவந்தா,அங்க இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் மொத்தமா சேர்த்து இங்க வைச்சிருக்காணுங்கன்னு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்.(இதுல டெஸ்ட்ல மார்க் கொறைஞ்சு போச்சுன்னா அப்பாவை அழைச்சுட்டு வந்து லெக்சரர்கிட்ட சமாதான உடன்படிக்கை எழுதி தரணும் இனி பய ஒழுங்க படிப்பான்னு - அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ!)

அப்பத்தான் பிஜிக்ஸ் பேப்பர் அப்புறம் அது கூட ஒரு லேப் உண்டுன்னு,இந்த மிதிவண்டி இடைவெளியில் அதாவது ஒரு வாரம் கூட ஆகலைங்க காலேஜ் ஆரம்பிச்சு அதுக்குள்ளாற பயமக்க அரியர்க்கு அர்த்தம் கண்டுபுடிச்சுட்டு வந்து மாப்ள உனக்கெல்லாம் நிச்சயம் பர்ஸ்ட் இயர்ல மினிமாமாவே 6 வரும் போல தெரியுதுங்கறானுவோ அவ்வ்வ்வ்வ் (அம்புட்டு நம்பிக்கை எம் மேல!)

பிஜிக்ஸ் பேப்பர்ல இருக்குற விசயமெல்லாம் லேப்ல செய்யணும்ன்னு இதுதான் பெரிய ரிஸ்க் கிளாஸ்ல பாடம் எடுத்த அடுத்த நாளு லேப்  - பாலிடெக்னிக்குன்னு சொல்லி மாயவரத்துலேர்ந்து சிதம்பரம் போய்க்கிட்டிருந்த பயலுக்கு படிக்க எப்பங்க டைம் கிடைக்கும் இதெல்லாம் ஏன் அந்த லெக்சரர்களுக்கு தெரியமாட்டிக்கிதோ! - உள்ள போன வுடனே கிளாஸ்ல நடந்த விசயமெல்லாம் கொஸ்டீன்ஸா பறந்து வரும் ,அப்படி வர்ற கேள்வி எல்லாம் என்னிய விட்டு அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க!





அப்படி ஒரு நாள் செஞ்ச சோதனைக்களத்து முக்கிய உபகரணம்தான் வெர்னியர் ஸ்கேல் (ஹப்பாடா இப்பவாச்சும் டைட்டிலை டச் பண்ணுனீயே!) இது உருளை வடிவங்களை அளவு எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த வெர்னியர் ஸ்கேல் ரெண்டு விதமான ஸ்கேல்ஸ் இருக்கும் சின்ன ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் அளவுகளில் எந்த புள்ளியில் சின்ன ஸ்கேல் கோடு ஒத்து வருதோ அதான் சரியான கணக்கீடு  இப்படி எதாச்சும் சொல்லிக்கிட்டே கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு விசயத்தை கையில கொடுத்த பிறகுதான் தெரியும் ஒரு படபடப்பு,எந்த ஸ்கேல் எந்த கோடு எந்த புள்ளின்னு  - கடைசி லேப் பரீட்சை வரைக்கும் அந்த படபடப்பு அப்புறம் அந்த தடுமாற்றம் இருந்துக்கிட்டேத்தான் இருக்கும்.

ஓவ்வொருமுறையும் சோதனை செஞ்சு அந்த அளவுகளை பார்த்து குரூப்ல இருக்கிற அம்புட்டு பேரும் பார்த்து சரியா ரெக்கார்டு பண்ணி கொண்டு போய் லெக்சரர் கிட்ட நீட்டுனா அப்படியே ஒரு மேலோட்டமா ரீடிங்க் பார்த்துட்டு சிம்பிளா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் போடுவாரு ! இந்த வெர்னியர் ஸ்கேல் டெஸ்ட் மட்டும் கிட்டதட்ட நாலுவாரத்து ஓடிக்கிட்டிருந்துச்சு இவுனுங்க இப்படியே செஞ்சுக்கிட்டிருக்க சொன்னா 3 வருசத்துக்கும் செய்வானோன்னு டென்ஷன்  ஆகி ஒரு வழியா முடிச்சு அடுத்த 4 வாரத்துக்கு கன்கரண்ட் போர்ஸ் செய்யுங்கடான்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு !

இதையெல்லாம் நான் ஏன் இங்க சொல்லிக்கிட்டிருக்கேன்னா......

என் நண்பர்கள் சிலர்  நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!

35 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இப்ப நீங்கதான் டெர்ரர் !!

said...

//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!//

இப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... :)

said...

\\அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ!\\


ஹையோ ஹையோ!

said...

என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க,\\


தயவு செய்து அவர்கள் லிஸ்ட்டை வெளியிடவும் ...

(இருக்கு ...)

said...

உங்களுக்கு பிஜிக்ஸும் பிச்சுக்கிட்டு வருது

கெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.

கலக்கறீங்க பாஸ்.

கடகராசிக்கு இப்ப நேரம் ரொம்ப நல்லா இருக்கு போல :)-

said...

அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க!

பாஸ் செம டெர்ரர் பாஸ் நீங்க.
அப்பவே யாரும் உங்கள கேள்வி கேக்காம பாத்துக்கிட்டு இருக்கீங்க.

said...

// இராம்/Raam said...

//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!//

இப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... :)//

ரிப்பீட்டே :)))))

said...

//கெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.//

அஞ்சலிய வுட்டுப்புட்டீங்க?? அண்ணாச்சி பீல் பண்றாரு பாருங்க :)

said...

இந்த பதிவை படிக்கும்போது 11 ம் வகுப்பு நியாபகம் வந்தது, கடந்த காலத்தை னேனைத்து பார்க்க உதவிய உங்கள் பதிவுக்கு நன்றி, அடுத்து கெமிர்ஸ்டரீ பையாலஜீ னு பதிவு போட்டு ஒரு 1/4 வருசம் தள்ளிறுவீங்களா?

said...

:) anna mudiyalai....

said...

வெள்ளிக்கிழமை அதுவுமா
காலையிலேயே ஏன் இந்த கொலைவெறி?

நம்ம நாட்டுல உள்ள மக்கள் ஞாயிறு
யாராச்சும் தலையை வைச்சு கூட
படுக்கறதுல்ல
வளைகுடா நாட்ல உக்காந்துகிட்டு வெள்ளிக்கிழமை ஏன் ????????????????

said...

/ G3 said...

//கெமிஸ்ட்ரியும் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது அனன்யா வோட (ஆயில்யா க்கு அப்புறம் அவங்கதானே) பாஸ்.//

அஞ்சலிய வுட்டுப்புட்டீங்க?? அண்ணாச்சி பீல் பண்றாரு பாருங்க :)/

Repeattuuuuu.!

said...

//என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!//

இப்பிடிதான் டெர்ரர்ரா யோசிக்கனும் பாஸ்... :)) கீப் இட் அப்பு... //

ரிப்பீட்டு

said...

ஒரு முடிவாத்தான் இருக்கிறிங்க..

said...

வேணியர் இடுக்கி மானி அப்படின்னு சொல்லுவாங்க-இதானா அது...

:)

said...

எனக்கும் இங்க இருந்துதான் ஆரம்பிச்சது கஷ்டகாலம் அப்புறம் கடைசி வரைக்கும் சரியாகவே இல்லை...

maths படிச்சு கோட்டை விட்டதுதான் மிச்சம்..

:(

said...

அண்ணா முடியலண்ணா

said...

பழைய ஞாபகம் குருவே...

said...

அப்புறம் அடிக்கடி பிஸிக்ஸ் பதிவு போடுங்க(எவன்யா அவன் கெமிஸ்ட்ரி கேட்டது பதிவுல)

:))

said...

கலக்கிட்டீங்க அண்ணே! கடந்த மூணு வருடமா உங்களை இணையத்தில் பார்க்கிறேன்.. நல்ல முன்னேற்றம்.

said...

துறை சார்ந்த பதிவுகளை வெளியிடுவதில் உங்களுக்கு நீங்கள் தான் ஆயில்யன்.. கலக்கல்!

said...

ஐயா! தயவு செய்து அடுத்து கெமிஸ்ட்ரி பாடத்தில் ஆண்- பெண் இடையேயான வேதியியல் மாற்றங்கள் பற்றி கொஞ்சம் தெளிவான விளக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

said...

அண்ணே! கொஞ்சம் ஜூவாலஜி சப்ஜெக்ட் பற்றியும் எழுதுங்க... அதில் நான் வீக்கு.. ;-)

said...

24

said...

மீ த 25!

said...

என் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, //


பாஸ்

பயோலஜி பத்தியும் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்

said...

பாஸ் பாஸ்

இதில இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க சொல்லணும், கேக்குறதுக்கு தானே நாம இருகோம்.

http://www.dmoz.org/Science/

said...

பாஸ் பாஸ்
இதில இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க சொல்லணும், கேக்குறதுக்கு தானே நாம இருகோம். http://www.dmoz.org/Science/

said...

ந‌ல்லாதான் யோசிக்க‌றீங்க‌

said...

///அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க!
///

இந்த‌ டெக்.னிக் எல்லாம் எங்க‌ கிட்ட‌ ந‌ட‌க்காதுங்கோவ்..

said...

நீங்களும் வெர்னியருக்கு ரிப்பீட்டு வாங்கினவரா? வெல்கம் டு தி க்ளப்.
:)

said...

சிவில் எஞ்சினிய‌ரிங்ன்னு ஒரு ச‌ப்ஜெக்ட் இருக்காமே...அதைப் ப‌த்தி ஏதாவ‌து தெரிஞ்சாகூட‌ எழுத‌லாமே:-)

said...

தலைப்பை பார்த்தவுடனே பின்னூட்ட வந்துட்டேன். (படிக்க)முடியலண்ணே...

said...

நம்ம பட்ட கஷ்டத்தை அழகா சொல்லிருக்கீங்க பாஸ்..
படிச்சு முடிச்ச உடனே நான் சென்னைக்கு வேலை தேடி வந்தப்போ இப்படித்தான் ஒரு கம்பெனியில, ஒரு காம்போனெண்டையும், இந்த பாழா போன வெரினியரையும் கொடுத்து, மெஷேர் பண்ணி ட்ராயிங் போடுங்கனு சிம்புளா சொல்லிட்டாங்க. நம்ம எப்படி விடுவோமா... பக்கத்தில இருந்த ஸ்டீல் ஸ்கேலை வைச்சே மெஷேர் பண்ணி ட்ராயிங் போட்டோம்ல.. ஆனா என்ன வேலைதான் அங்க கிடைக்கல :-))

said...

கலக்குறீங்க அண்ணா.... உங்க கிட்ட தனிய ஒரு விடயம் கேட்கணும்,.... நம்ம ஏரியாப் பக்கம் வாங்க......