மதியம் செவ்வாய், ஜூன் 30, 2009

மனப்பூக்கள் மலரட்டும் - 4

முடியும்;
முடியாது.

தெரியும்;
தெரியாது.

புரியும்;
புரியாது.

இப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)

முடியும் என்றால் கவலைப்படவே தேவையில்லை முடியாது என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் இந்த மிதிவண்டி இடைவெளியில் கவலை வந்து நம் மனத்தினை ஆக்ரமிக்க எப்படி இடம் கொடுக்கிறோம்?

எந்தவொரு சிக்கலான அல்லது நம்மால் இயலாத காரியம் என்று, ஒன்றை எண்ணும்போதே இது போன்ற சிந்தனைகள் எழுகின்றன.

சில காரியங்களினை எப்படி செய்வது என்ற அடிப்படையே தெரியாது ஆனால் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிகம் கவலை மட்டும் கொண்டு உடல் நலத்தினை கெடுத்துக்கொள்வோம்! இதை போன்று சில காரியங்கள் செய்வதில் நெகடிவ் எண்ணங்களின் அதிக ஆழத்திற்கு செல்வோம் முடிவில் கவலை கொண்டு காரியமாற்றாமல் அமர்ந்திருந்தலே அவசியமாகிவிடும்!

கவலை கொள்வதால் மட்டும் நான் செய்யவேண்டிய செயல்களுக்கு மீண்டும் ஒரு சாய்ஸ் கிடைக்கும் என்று எண்ணுவதை முற்றிலும் தவிருங்கள்!



கவலை அவசியம் படத்தான் வேண்டுமா? கவலைப்படாமல் வாழ இயலுமா என்று ஒன்றுகொன்று முரணாய் பல கேள்விகள் கேட்டு தங்களுக்குள்ளாகவே கவலையில்லாத மனிதன் யார் இருக்கிறார் என்று பதில் கூறி கவலைகளோடே பயணித்துக்கொண்டிருப்பார்கள்!

பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;

கவலையும் பயமும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன - அதனிடத்தில் உங்களை அதிகம் இழக்கும்போது...!

உங்களுக்கு மிக மிக விருப்பமான வேலையினை எடுத்து செய்யுங்கள் இது போன்ற நேரங்களில் அல்லது உங்களுக்கு பிடித்தமானவருடன் பேசிக்கொண்டே இருங்கள் - தற்காலிகமாய் தப்பிக்க வழி கிடைக்கும்!

நிரந்தரமாகவெனில் - நல்ல செயல்களிலும், நல்ல எண்ணங்களையும் யோசிக்க, செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால் கவலையாவது பயமாவது..!

27 பேர் கமெண்டிட்டாங்க:

Iyappan Krishnan said...

too close to get nice details :) but details are gone. probably due to noise ?

Iyappan Krishnan said...

hai :)) me the firstay

சென்ஷி said...

@ ஜீவ்ஸ்.

:-))))))))))))))))

சென்ஷி said...

//முடியும் என்றால் கவலைப்படவே தேவையில்லை முடியாது என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் இந்த மிதிவண்டி இடைவெளியில் கவலை வந்து நம் மனத்தினை ஆக்ரமிக்க எப்படி இடம் கொடுக்கிறோம்?/

அதுக்கு காரணம் இருக்குது ஆயில்.. ஏன்னா நாம எல்லா விஷயத்தையும் முடியும் ஆனா முடியாதுன்னு யோசிக்கறோம்.

எச்சச்ச எச்சச்ச.. கச்சச்ச கச்சச்சன்னு முடிவு செய்யறதில்லையே! :)

Thamiz Priyan said...

நேத்து படங்களுக்கு இது சுமார் தான்.. ஆனாலும் நல்லா இருக்கு!
சூப்பர்!

Thamiz Priyan said...

நல்ல சிந்தனைகள் எல்லாம் சொல்றீங்க.. நீங்க ஏன் கலைஞர் அல்லது சண்டிவியில் காலை சிந்தனைகள் சொல்லப் போகக் கூடாது?
(பார்த்துக்கங்க.. ஸ்மைலி கூட போடல)

Thamiz Priyan said...

///Jeeves said...

too close to get nice details :) but details are gone. probably due to noise ?///

டிட்டெய்லா தானே ஆயில் அண்ணெ பதிவு எழுதி இருக்காங்க.. வெண்பாவுக்கு இன்னும் என்ன வேணுமாம்? புதசெவி

நாய்ஸா? படக்காட்சியோ, பாட்டோ இல்லையே.. நாய்ஸ் எங்க இருந்து வரும்? புதசெவி

;-))) (ஸ்மைலி போட்டு இருக்கேனே..)

pudugaithendral said...

மனப்பூக்கள் கண்டிப்பாய் மலரவேண்டும்.

அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்

நாணல் said...

//உங்களுக்கு மிக மிக விருப்பமான வேலையினை எடுத்து செய்யுங்கள் இது போன்ற நேரங்களில் அல்லது உங்களுக்கு பிடித்தமானவருடன் பேசிக்கொண்டே இருங்கள் - தற்காலிகமாய் தப்பிக்க வழி கிடைக்கும்!//

sariyaa soneenga...indha vazhi thaan pala neram enakku vazhi kaattiyirukku....

கோபிநாத் said...

\\பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;\\

அண்ணே நீங்களா!! இப்படி எல்லாம் எழுதுறிங்க!!?? ;))))

உங்களுக்குள்ள சாமீ வந்துடுச்சாண்ணே!!! ;)

பாசகி said...

அண்ணாச்சி அண்ணாச்சி
காலங்காத்தால என்னாச்சி!

படிச்சி படிச்சி
மண்டையெல்லாம் காஞ்சாச்சு!
***
பதிவுக்கும் இப்பின்னூட்டத்துக்கும் யாதொரு தொடர்பும் இலா :))))

R.Gopi said...

//பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;

கவலையும் பயமும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன - அதனிடத்தில் உங்களை அதிகம் இழக்கும்போது...!//

***********

Absolutely........ How true this is?

Well done..........

☀நான் ஆதவன்☀ said...

பாஸ்...நீங்க ஆயில்யனா??

அய்யய்யோ...ஆயில்யன் ப்ளாக் ஹேக் செய்துட்டாங்களா??

நட்புடன் ஜமால் said...

அழகான புகைப்படம் ...


கவலை கொள்ளுதல்

ரொம்ப கவலையா இருந்தா

வலைக்கு வந்து கொல்லுங்க அந்த க-வலையை ...

நட்புடன் ஜமால் said...

கவலை அவசியம் படத்தான் வேண்டுமா? கவலைப்படாமல் வாழ இயலுமா என்று ஒன்றுகொன்று முரணாய் பல கேள்விகள் கேட்டு தங்களுக்குள்ளாகவே கவலையில்லாத மனிதன் யார் இருக்கிறார் என்று பதில் கூறி கவலைகளோடே பயணித்துக்கொண்டிருப்பார்கள்!\\



இம்பூட்டு யோசிக்கனுமா

ரொம்ப கவலையா இருக்கு பாஸ்

:)

அமுதா said...

/*கவலை கொள்வதால் மட்டும் நான் செய்யவேண்டிய செயல்களுக்கு மீண்டும் ஒரு சாய்ஸ் கிடைக்கும் என்று எண்ணுவதை முற்றிலும் தவிருங்கள்! ?*/
ஆமாம்.... கவலைப்படறதால மட்டும் கவலையெல்லாம் போயிடுமா? கவலையே படாட்டா கவலை எப்படி வரும்? பாயிண்ட்...

Rangs said...

இது உறவுகள் குறித்த கவலைகளுக்கு பொருந்தாது நண்பரே..

சந்தனமுல்லை said...

//
எச்சச்ச எச்சச்ச.. கச்சச்ச கச்சச்சன்னு முடிவு செய்யறதில்லையே! :)//

ஹிஹி! சூப்பர்!

S.A. நவாஸுதீன் said...

Rangs said...

இது உறவுகள் குறித்த கவலைகளுக்கு பொருந்தாது நண்பரே..

இதுதான் என்னோட கருத்தும். சிறு கவலை கூட இல்லாத வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. சுவாரசியம் இருக்காது

இது நம்ம ஆளு said...

முடியும்;
முடியாது.

தெரியும்;
தெரியாது.

புரியும்;
புரியாது.

அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

சந்தனமுல்லை said...

/ \\பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;\\

அண்ணே நீங்களா!! இப்படி எல்லாம் எழுதுறிங்க!!?? ;))))

உங்களுக்குள்ள சாமீ வந்துடுச்சாண்ணே!!! ;)

30 June, 2009 9:58 AM
Blogger பாசகி said...

அண்ணாச்சி அண்ணாச்சி
காலங்காத்தால என்னாச்சி!

படிச்சி படிச்சி
மண்டையெல்லாம் காஞ்சாச்சு!
***
பதிவுக்கும் இப்பின்னூட்டத்துக்கும் யாதொரு தொடர்பும் இலா :))))//

ஹிஹி!

சந்தனமுல்லை said...

//இப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

//இப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//

ஆபிஸ்க்கு வந்தா மட்ட்ட்ட்ட்ட்டும் எங்கேர்ந்துதான் இம்புட்டு தூக்கம் வருமோ ஆச்சிக்கு....????

கவிதா | Kavitha said...

ம்ம்..மனப்பூ நல்லா இருக்கு ஆனா மலர்ந்தும் கவுந்துகிடக்கு......!!

அ.மு.செய்யது said...

உங்களுக்கு திடீர்னு என்ன ஆச்சு சகோ..

மனசு ஏதும் சரியில்லையா ??

அன்புடன் அருணா said...

அருமை! பூங்கொத்து!

கபிலன் said...

"பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;"

சினிமா, பொண்ணு, அரசியல்,தொழில்நுட்பம்,போட்டோ பதிவுகள் போடுவது சாதாரணம் தான். இந்த மாதிரி நம்மலே யோசிச்சும் பதிவு எழுதுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.
நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்!