Showing posts with label கொசுவர்த்தி. Show all posts
Showing posts with label கொசுவர்த்தி. Show all posts

B.E - குரூப் ஸ்டடி & ரிசல்ட்


பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இந்த ரிசல்ட் டே அன்னிக்கு கொஞ்சூண்டு கூட இருந்ததில்ல! கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்! மாப்ளே நாளைக்கு ரிசல்ட் வருதுடா அப்படின்னு நண்பன் எவனாச்சும் பீதியோட சொன்னா ஏண்டா இன்னிக்கே கொடுத்து தொலைக்கலாம்ல அப்படின்னு ஒரு கரிசனமான கேள்வி அவனை கண்டிப்பாக டென்ஷனாக்கி திட்ட வைக்கும்!

அப்பொழுது வரும் சமாதான வரிகளில் நாம எழுதுனதை வைச்சே நாம தெரிஞ்சுகலாம்டா பாஸா ஃபெயிலான்னு அப்படின்னு...! ராசா நீ சொல்றதெல்லாம் ஸ்கூலோட நிப்பாட்டிக்கோ இது காலேஜ் லெவல் எவனாச்சும் லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க!

பேச்சிலர் ஆப் இன் ஜினியரிங்க்கு அதுவும் பெருங்கும்பலோட வந்தப்போதுதான் லைட்டா ஒரு பயம் வந்துச்சு ஆஹா மேட்டர் பெயிலாச்சுன்னா கும்பல்ல செப்ரேட் காமிக்கமுடியாதே அப்படி இப்படின்னு ஏகப்பட்ட மனக்குழப்பங்கள் வந்து செல்லும்!

இதுல மாசம் மாசம் அசைன்மெண்ட் டெஸ்ட் இன்னபிற அட்டெண்டன்ஸ் சங்கதிகளுக்கு கட்டுப்பட்டு காலேஜ்ல கூத்துக்கட்டணும்னா நொம்ப்பவே கஷ்டம்! இதெல்லாம் இல்லாம எக்ஸாமுக்கு முந்தாகாட்டி ஒரு பத்து நாள் விடுற (எக்ஸாம்க்கு இதுலயாச்சும் படிச்சு பொழைச்சுங்கோங்கடாங்க்ற ரேஞ்சுல) லீவுல பயமக்க குரூப் ஸ்டடி வைக்கும்! அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு படிக்கிற்தான்னு ஒரு பெரும் குழப்பம் ஓடும்! குரூப் ஸ்டடின்னா எல்லாரும் ஒரே சப்ஜெக்ட் வைச்சு படிக்கிறதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தா இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்! அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!

மீதி இருக்கிற மனசும் மொத்தமா பெயிலாகிவிடாம இருக்க வேண்டி குரூப் ஸ்டடிக்கு டாட்டா சொல்லிட்டு தனிக்குடித்தனம் வந்து ஒரு வழியா ஒப்பேத்தி எக்ஸாம் அன்னிக்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை செண்டிமெண்ட்ஸ்களையும் கடைப்பிடித்து பேப்பர் நிரப்பி முன்பே முடித்துவிட்டு கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டி சாய்ஸ் கொஸ்டீன் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா பில்ட்-அப் கொடுத்து,வழக்காமாய் கன்னாபின்னாவென்று முடிச்சுட்டு பிணைத்த பேப்பரினை கொடுத்து வெளியே வருகையில் வயிற்றில் அமிலம் கரைக்க காத்திருக்கும் கூட்டத்திடமிருந்து எஸ்ஸாகி எல்லா பரீட்சைகளையும் முடித்து எக்ஸ்ட்ரா லீவு என் ஜாய் செய்து விட்டு வந்து காத்திருக்கும் நாளில் ரிசல்ட் அட்மின் பில்டிங்கில் போட்டிருக்கும் ரிசல்டினை இன்று வரை நேரில் சென்று பார்த்தது கிடையாது முன்பே வந்து கையிலே பஸ் டிக்கெட் பின்புறத்திலோ அல்லது ஏதேனும் ஒரு குப்பையில் கிடக்கும்பேப்பரில் கிறுக்கி எடுத்து வந்திருக்கும் எண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ
கடவுளின் கிருபை என்றே இப்பொழுதும் நினைக்க தோன்றுகிறது !

டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !

வெர்னியர் ஸ்கேல்

                                பத்தாவது படிக்கிறப்ப பசங்களை ஒரே ஒரு  வாட்டி பிஜிக்ஸ் (ரைமிங்காவே பிச்சிக்கிச்சுத்தாங்க வரும்!) லேப்ன்னு சொல்லி, ஸ்கூல்ல இருக்கிற ஒரு கார்னர் ரூம்ல அழைச்சிட்டுபோய் சில பல உபகரணங்களை ஒரு வாட்டி ரவுண்ட் அடிச்சு காமிச்சுட்டு ஓடிப்போங்கடான்னு சொல்லுவாங்க அங்க அதிசயமா பார்த்த பொருள் வெர்னியர் ஸ்கேல்.

எப்படியோ 10வது பிச்சுக்கிட்டு, பாலிடெக்னிக் பக்கம் வந்து டமால்ன்னு வுழுந்த பிறகுதான், ஒரு சில நாட்களில் எழுப்பி உக்கார வைச்சு பிஜிக்ஸ்,கெமிஸ்ட்ரி அப்புறம் கணக்கு ஒர்க்‌ஷாப்புன்னு லிஸ்ட் போட்டு சொல்லுறப்பவே ஒரு முடிவுக்கு வந்திருவோம், மாட்டுனோம்டான்னு!

அங்க பிளஸ்1 பிளஸ்2க்கு பயந்து இங்க ஓடிவந்தா,அங்க இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் மொத்தமா சேர்த்து இங்க வைச்சிருக்காணுங்கன்னு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்.(இதுல டெஸ்ட்ல மார்க் கொறைஞ்சு போச்சுன்னா அப்பாவை அழைச்சுட்டு வந்து லெக்சரர்கிட்ட சமாதான உடன்படிக்கை எழுதி தரணும் இனி பய ஒழுங்க படிப்பான்னு - அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ!)

அப்பத்தான் பிஜிக்ஸ் பேப்பர் அப்புறம் அது கூட ஒரு லேப் உண்டுன்னு,இந்த மிதிவண்டி இடைவெளியில் அதாவது ஒரு வாரம் கூட ஆகலைங்க காலேஜ் ஆரம்பிச்சு அதுக்குள்ளாற பயமக்க அரியர்க்கு அர்த்தம் கண்டுபுடிச்சுட்டு வந்து மாப்ள உனக்கெல்லாம் நிச்சயம் பர்ஸ்ட் இயர்ல மினிமாமாவே 6 வரும் போல தெரியுதுங்கறானுவோ அவ்வ்வ்வ்வ் (அம்புட்டு நம்பிக்கை எம் மேல!)

பிஜிக்ஸ் பேப்பர்ல இருக்குற விசயமெல்லாம் லேப்ல செய்யணும்ன்னு இதுதான் பெரிய ரிஸ்க் கிளாஸ்ல பாடம் எடுத்த அடுத்த நாளு லேப்  - பாலிடெக்னிக்குன்னு சொல்லி மாயவரத்துலேர்ந்து சிதம்பரம் போய்க்கிட்டிருந்த பயலுக்கு படிக்க எப்பங்க டைம் கிடைக்கும் இதெல்லாம் ஏன் அந்த லெக்சரர்களுக்கு தெரியமாட்டிக்கிதோ! - உள்ள போன வுடனே கிளாஸ்ல நடந்த விசயமெல்லாம் கொஸ்டீன்ஸா பறந்து வரும் ,அப்படி வர்ற கேள்வி எல்லாம் என்னிய விட்டு அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க!





அப்படி ஒரு நாள் செஞ்ச சோதனைக்களத்து முக்கிய உபகரணம்தான் வெர்னியர் ஸ்கேல் (ஹப்பாடா இப்பவாச்சும் டைட்டிலை டச் பண்ணுனீயே!) இது உருளை வடிவங்களை அளவு எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த வெர்னியர் ஸ்கேல் ரெண்டு விதமான ஸ்கேல்ஸ் இருக்கும் சின்ன ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் அளவுகளில் எந்த புள்ளியில் சின்ன ஸ்கேல் கோடு ஒத்து வருதோ அதான் சரியான கணக்கீடு  இப்படி எதாச்சும் சொல்லிக்கிட்டே கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு விசயத்தை கையில கொடுத்த பிறகுதான் தெரியும் ஒரு படபடப்பு,எந்த ஸ்கேல் எந்த கோடு எந்த புள்ளின்னு  - கடைசி லேப் பரீட்சை வரைக்கும் அந்த படபடப்பு அப்புறம் அந்த தடுமாற்றம் இருந்துக்கிட்டேத்தான் இருக்கும்.

ஓவ்வொருமுறையும் சோதனை செஞ்சு அந்த அளவுகளை பார்த்து குரூப்ல இருக்கிற அம்புட்டு பேரும் பார்த்து சரியா ரெக்கார்டு பண்ணி கொண்டு போய் லெக்சரர் கிட்ட நீட்டுனா அப்படியே ஒரு மேலோட்டமா ரீடிங்க் பார்த்துட்டு சிம்பிளா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் போடுவாரு ! இந்த வெர்னியர் ஸ்கேல் டெஸ்ட் மட்டும் கிட்டதட்ட நாலுவாரத்து ஓடிக்கிட்டிருந்துச்சு இவுனுங்க இப்படியே செஞ்சுக்கிட்டிருக்க சொன்னா 3 வருசத்துக்கும் செய்வானோன்னு டென்ஷன்  ஆகி ஒரு வழியா முடிச்சு அடுத்த 4 வாரத்துக்கு கன்கரண்ட் போர்ஸ் செய்யுங்கடான்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு !

இதையெல்லாம் நான் ஏன் இங்க சொல்லிக்கிட்டிருக்கேன்னா......

என் நண்பர்கள் சிலர்  நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!

கண்ணால் ஒரு சேதி...!

டிஸ்கி:- கொசுவர்த்தி சுத்திக்கிறேன்ப்பா!

ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம்! அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !

மத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..! (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...? ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..?!)

சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்! போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க(!?) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா? எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ! ஒரு காரணமுமே சரியா சிக்கல!

யப்போவ்..! எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் ?

அப்பா:- இப்ப எதுக்கு உனக்கு?

ம் பொறந்த நாளு வருதுல்ல !

அப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா ?

அப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு !

அப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் !

ஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு! அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...?

யப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு..? (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்..! நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ!)

சாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட! அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...!

ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப உங்களுக்கு ரெண்டு கொஸ்டீன் ரைஸ் ஆகணும் ஆச்சா...?

1.சரி என்ன அப்படி ஒரு பிளானு பிரதர் போட்டாரு...?



இந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு! அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !

2.உனக்கு...?

ப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது!

அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!

******************************************

இன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது!

சட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு! (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க!)

சிங்கிள் ஃபிளிட் வேணுமா டபுள் வேணுமான்னு டைலர்கள் கேக்க ஆரம்பிச்சாங்க!



அப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்!) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது! அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே! ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு! அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்! இப்ப நீங்க எஸ்ஸாகிக்கலாம்!