மதியம் வியாழன், நவம்பர் 01, 2007

ரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்

Photo Sharing and Video Hosting at Photobucket

கண்ணா..! நான் யோசிக்காம, சொல்றதில்ல சொல்லிட்டு யோசிக்கறதில்ல!

திட்டமிடுதல் என்பது ஒவ்வொரு செயல் அல்லது நிகழ்வுக்கும் முக்கியமான ஒன்று,ஒரு முறை சரியாக திட்டமிட்டுவிட்டால் பின்பு அதை பற்றி மறு முறை சிந்திக்க தேவையின்றி, இலக்கை அடைவதில் திட்டமிட்டபடி கவனத்தை செலுத்தவேண்டும்!

இது எப்படி இருக்கு?

ஒரு செயலை செய்ய, அதற்கு முன்பு அதை சக அலுவலக நண்பர்களிடம், பணியாளார்களிடம், கூறி அதைப்பற்றி கருத்து கேட்பதன் மூலம் அதை சரியாக, செய்யமுடியும்!

நான் தட்டி கேட்பேன் ஆனா கொட்டி கொடுப்பேன்!

தலைமையிடத்திலிருந்து எவ்வளவோ கடுமையாக நடந்துக்கொண்டாலும்,இரு செயலை சிறப்பாக செய்து முடித்தால் கண்டிப்பாக அதற்கான பலனை நீங்கள் பெறுவீர்கள்!

சொல்றேன்..! செய்யிறேன்...!!

நிர்வாகத்தில் இந்த சொற்கள் மிகுந்த பலம் வாய்ந்தவை!
ஒரு செயலை சொல்வதிலும் அதை செயற்படுத்துவதிலும் நாம் செலுத்தும் அக்கறை நம்மை மேன்மையாக்கும்!

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!

ஒரு கருத்தினை உள்வாங்கிக்கொள்ளும் திறன் மற்றும் செயல்படுத்தும் திறனை நாம் மேம்படுத்திக்கொள்வதன் மூலம் தேவையற்ற கால விரயத்தை தவிர்க்கமுடியும், ஒரு முறை சொல்லும் வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்படுகிறதோ, அதற்கான புரிந்துகொள்ளும் திறனை பெறுவது நம்மை முதலிடத்திற்கு கொண்டு செல்லும்!

நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்!

ஒரு த்யாரிப்பு அல்லது செயல் குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தபட முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் செயலாக்கப்படும் காலத்தில் அந்த காலக்கட்டதிற்கேற்ப மாற்றங்களுடன் இருத்தல் அவசியம்

என் வழி தனி வழி!

ஒவ்வொரு பணியிலும், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் சென்றால் வெற்றி + புகழ் அடையலாம்!

(ரஜினி ரசிகர்கள் இணையத்தில பார்த்தது, சரி நம்ம பீல்டு சம்பந்தமா, ஆங்கிலத்தில இருக்கே1 அப்படியே தமிழ்ப்படுத்தி நம்ம பிரெண்ட்ஸ்க்கு அனுப்பி கலக்குவோம்னு, பண்ணது! இவ்ளோ பிரெண்ட்ஸ்க்கும் மெயில்"ரதத்தில்"விடறதுக்கு இங்க போட்டா ஒ.கேதானே...!!!!)

15 பேர் கமெண்டிட்டாங்க:

வித்யா கலைவாணி said...

சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக்குகளை வைத்து இவ்வளவு விளக்கமா? ம் தொடருங்கள்.:)

Sathish said...

ஆஹா..பேஷ் பேஷ்.. கலக்கிட்டீங்க போங்க ! .. தலைவர் dialogues எல்லாம் சும்மா அதிருதில்ல ! மிக்க நன்றி அண்ணாத்த !

ரசிகன் said...

மாப்ள.. இது அந்த கொழப்பவாதி (?) சொன்னதில்ல.. கதாசிரியங்க.. சொன்னது..
இருந்தாலும்..அதுலயும் இருந்து கருத்த கடைஞ்சி எடுத்ததுக்காக.. உங்களுக்கு ஒரு "ஓ"போடலாமுங்கோ..
சபாஷ்..நம்ம கத்தரு பெருமை காப்பாத்திட்டீங்க..

cheena (சீனா) said...

மேலாண்மைத் தத்துவத்தில் அனைத்து பஞ்ச் வசனங்களுக்குமே தனிப் பொருள் தான்.

துளசி கோபால் said...

இந்த டயலாக் எல்லாம் எழுதுனவர் யாரு?

Unknown said...

building strongu basement weakku
eppudi iruntha naan ippdi aayitten

punchunna ithu thaan punchu...

ippo varuven appo varuven, ithu eppdi irukku? ippudu choodu... - thoo ithellaam punch dialogaamaa, ithuku oru management vilakkam veraa....

Sanjai Gandhi said...

எப்டி சாமி இப்டி எல்லாம்?
தூங்கும் போது யோசிப்பிங்களோ?
::(

Sanjai Gandhi said...

//துளசி கோபால் said...
இந்த டயலாக் எல்லாம் எழுதுனவர் யாரு?//

இது நல்ல கதையா இருக்கே..
இதெல்லாம் கை வலிக்க டைப் பன்னது நம்ம ஆயில்யன் மாமா தான்.. இதுக்கெல்லாமா ஆள் வச்சி பதிவு எழுதுவாங்க? :)

RATHNESH said...

அருமை.அருமை.அருமை.

விஜய்காந்த் ரசிகர்களுக்கும் சரத்குமார் ரசிகர்களுக்கும் நல்ல வேலை கொடுத்திருக்கீங்க. இவங்க தானே 2011-ல் அநேகமா ஆளுக்கு 20 வார பாணியில் நாடாளப் போகிறவர்கள்?

ஆயில்யன் said...

//மாப்ள.. இது அந்த கொழப்பவாதி (?) //
கொழ்ப்பவாதியா - நல்லாத்தான் காமெடி பண்றீங்க!?!?
மாமு! கொயப்பாவாதின்னு சொல்லதீங்க!
அதுவும் ஒரு டெக்னிக்ல திங்கிங்க டெல்ஃபி டெக்னிக்குன்னு சொல்வாங்க!!!!

ஆயில்யன் said...

//இந்த டயலாக் எல்லாம் எழுதுனவர் யாரு?//

துளசியக்கா! ஆங்கிலத்திலிருந்ததை தமிழ்படுத்தியது நானே நாந்தான்!!!

ஆயில்யன் said...

//punchunna ithu thaan punchu...//

கண்ணா..!! இதுதான் பஞ்ச்சா?

அப்ப நீ பிஞ்சு பையன் போல!?

ஆயில்யன் said...

//~பொடியன்~ said...
எப்டி சாமி இப்டி எல்லாம்?
தூங்கும் போது யோசிப்பிங்களோ? //

இது மாதிரி யோசிச்சாத்தான் தூக்கமே வருது..! ராசா..!

ஆயில்யன் said...

//இவங்க தானே 2011-ல்//

நல்லா பீதிய கிளப்புறீங்க

cheena (சீனா) said...

//மாப்ள.. இது அந்த கொழப்பவாதி (?) //
//கொழ்ப்பவாதியா - நல்லாத்தான் காமெடி பண்றீங்க!?!?
மாமு! கொயப்பாவாதின்னு சொல்லதீங்க!
அதுவும் ஒரு டெக்னிக்ல திங்கிங்க டெல்ஃபி டெக்னிக்குன்னு சொல்வாங்க!!!!//

எல்லாத்துக்கும் நம்ம நண்பர் ஆயில்யன் பதில் வைச்சிருக்கார்.

டெக்னிக்ல் திங்கிங்க டெல்பி டெக்னிக்னுன்னு சொல்வாங்க

ஓடிப்போய்டலாமான்னு இருக்கு