சமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க!

இன்னிக்கு ஒரு சூப்பர் ஐட்டம் செஞ்சு, எல்லா பிளாக்கர்ஸ்ஸும் சாப்பிட்டு சந்தோசமா இருக்கவைக்க்ணும்னு ஒரு முடிவோடத்தான் இந்த சமையல் குறிப்பு
இது ரொம்ப சிம்பிளா செய்யிற ஐட்டம்தான் அதனால் ரொம்ப பீதியடையவேண்டாம் ஒ.கே!
இந்த ஐட்டம் செய்யுறதுக்கு மூலப்பொருடகள கூட நம்மக்கிட்ட ஏற்கனவே இருக்கற ஐட்டம்ங்கறதால பட்ஜெட் எகிறாது! இருக்கறத வைச்சே சமாளிச்சுடலாம்! ஒ.கே


டெய்லி காலையில செஞ்சு வைச்ச இட்லிய புல் கட்டு கட்டுனதுக்கப்புறமும் மீந்து போச்சேன்னு, எல்லாருக்கும் ஒரு ஃபீலிங் இருக்கும் அந்த மீந்து போன ஐட்டத்த வைச்சுத்தான் நாம் இந்த சூப்பர் ஐட்டம் செய்யப்போறோம்!

இட்லி எடுத்து கத்தியால கட் பண்ணி துண்டுகளாக்கியும் பிசைஞ்சுக்கலாம் இல்ல ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு நினைச்சா அப்படியே இட்லிய கையாலயே பிசைஞ்சு தனியா ஒரு பாத்திரத்துல எடுத்துவைச்சுக்கோங்க!

அகலமான பாத்திரத்தில,கொஞ்சம் நல்லெண்ணெய ஊத்தி,
கொஞ்சம் கடுகு,கொஞ்சம் கடலை பருப்பு, கொஞ்சம் சிவப்பு மிளகாய் எல்லாத்தையும் போட்டு லைட்டா வறுத்துக்கிட்டு, அப்புறமா பிசைஞ்சு வைச்ச இட்லிய எடுத்துப்போட்டு கொஞ்சமா தண்ணிய தெளிச்சு நல்லா கிளறிக்கிட்டே இருக்கணும்.

பத்து நிமிஷத்துல சூடானத்துக்கப்புறம் கிளறத நிப்பாட்டிட்டு, மூடி வைச்சுட்டு, மத்த வேலைகளை பார்க்காலம்,கொஞ்சமா கருகுற வாசனை வரும்போது வந்தா போதுமானது!

இப்ப இட்லி உப்புமா ரெடி!

நில்லுங்க! உடனே அரக்கப்பரக்க எடுத்து திங்க நீங்க என்ன அரபுநாட்டுலேர்ந்தா வந்திருக்கீங்க...? நோ...!

இது நம்ம ஐட்டம் கிடையாது!

இட்லி உப்புமாவ ஒரு தட்ல அழகா எடுத்து எறிஞ்சுடுங்க., - அது நம்மளுக்கு தேவையில்ல!

தோசை சுடுற கரண்டிய ஒரு கையில எடுத்துக்கிட்டு, வேல் படத்துல சூர்யா அருவா புடிக்கிற மாதிரி ஸ்டைலா புடிச்சுக்கிட்டு, இன்னொரு கையால பாத்திரத்த கொஞ்சம் ஸ்ட்ராங்கா புடிச்சுக்கிட்டு சுரண்ட ஆரம்பியுங்க!

நான் சொன்னபடியே கவனமா செஞ்சுருந்தா, நாம திங்கறத்துக்கு நிறைய ஐட்டம் கிடைக்கும்!

உங்களோட முழுத்தெம்பையும் அதுல காட்டி சுரண்டி எடுக்கணும் ( பாத்திரம் ஓட்டையான கூட பரவாயில்ல!)

எடுத்து பத்திரமா ஒரு துளி கூட சிந்தாம சிதறாம தட்ல போட்டு சாப்பிட்டுட்டு அப்புறம் வந்து சொல்லுங்க!

கருப்பு காந்தல் சூப்பரா இல்லையான்னு..???

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அய்யா மாயவரத்து சாமி! இப்படியா ஓடோடி வந்த ஆட்களைக் கண்ணைக் கட்ட வைப்பது?
தாங்கல்லை :-)

said...

அப்ப இது நல்லாயில்லையா அக்கா?
சரி வேற ஒரு சமையல் குறிப்பு ரெடி பண்றேன்!
நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க!
அப்புறம் பார்க்கலாம்!

said...

நல்ல குறிப்பு. குறித்துக் கொண்டேன்.

ராத்திரி தூங்கம இருக்கும்போதோ அல்லது கிருத்திகை விருத வயிற்றுப்பசி கிள்ளிய கொடுமையான நேரத்திலோதான் இது மாதிரி ஐடியா வந்திருக்கனும்னு நினைக்கிறேன்?!!!!!!!!!!!

said...

படிக்கும் போதே கண்ணைக்கட்டுதே

said...

கருப்பு ஓர் அழகு, காந்தல் ஒரு ருசி!
எங்கூர் இட்லி உதுத்து தாளிச்சதைதான்
பந்தாவா சொல்லிக்கீறீங்க. இதோடு சாம்பார் வெங்காயம் அரிந்து போட்டு தாளித்தால்...ம்ம்ம் சூப்பர்.
இதே டெக்னிக்கை ரவா உப்புனாமாவினும் செய்யலாம். ரொம்ப நல்லாருக்கும்.

said...

அட ஆமாங்க...!

அந்த சின்ன வெங்காயத்த அரிஞ்சு போட மறந்துட்டேன்ல..?

அதுதானே முக்கியமான ஐட்டம்!
ரவா உப்புமாவும் இதே சேம் டெக்னிக்தான்!

தாங்கஸ் நானானி!

Anonymous said...

என்னாச்சுங்க. தீஞ்சதெல்லாம் சாப்பட ஆரம்பிச்சுட்டீங்க. காதல் நோய் மாரி ஏதாச்சும் வந்திடுச்சா என்ன :):)