மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் - பதிவர்கள் குடும்பத்தோடு..!

நாகரீகமாக உடுத்தி, நெற்றியில் விபூதி இட்டு, கழுத்தில் இரட்டை வட செயின் சகிதம் எப்போதும் பளிச்சென்றுதான் இருப்பாள். எப்போதும் பிள்ளையார் பைத்தியமாக இருந்த பேரனோடு தான் எடுத்துக்கொண்ட போட்டோதான் பாட்டிக்கு பிடித்தமான போட்டோ. பிள்ளையார் இருந்தால்தான் போஸ் கொடுப்பேன் என்று அழுது அடம்பிடித்த பேரனை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிலேயே இருந்த போட்டோவை கழட்டி பேரனிடம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பேத்தியையும் இன்னொரு கையில் போட்டோவையும் நழுவ விடாமல் பத்திரமாக பிடித்துக்கொண்டு பேரப்பிள்ளைகளே என்னுடைய உலகம் என்று முப்பது வருஷமாய் மனதுக்குள் தீர்மானம் செய்து வைத்திருந்த பாட்டிதான் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்.


இறைவனுக்கும், எம்மை ஈன்றவளின் தாய்க்கும் வைத்த கோரிக்கை நிறைவேறியது!

எங்கள் குடும்பத்தை மகிழ்விக்க, என் அண்ணனின் மகளாய், எம் குடும்பத்தின் குட்டி தேவதையாய், மறு பிறவி எடுக்கும்,
எமக்கு தாயாய் இருந்த - இருக்கும், எம் பாட்டிக்கும்,

இறைவனுக்கும் நன்றிகளுடன்...!

எனது மகிழ்ச்சியினை பகிர்ந்துகொள்கிறேன்! பதிவர் உலகில் வாழும் எம் தமிழ் குடும்பங்களோடு...!

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மகிழ்வான செய்தி! இன்றூ தேவதைகளின் தினமோ!!!

ரஜினி ராம்கிக்கும் இன்றூ பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்

said...

//ரஜினி ராம்கிக்கும் இன்றூ பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
//
ஆம் எங்கள் குடும்பத்தில் குட்டி தேவதையின் வரவில் மகிழ்கிறேன்!

ராம்கியின் சகோதரனாய்...!

said...

//ராம்கியின் சகோதரனாய்...!//

சொல்லவே இல்லை :-)))))

said...

//சொல்லவே இல்லை//

நீங்க வந்து பார்க்கவே இல்லை
:-)))))

said...

ஆயில்யன்,

நீங்கள் வேண்டியது கிடைத்ததைக் கொண்டாடிடும் இத்தருணத்தில் எனது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

said...

congrats thala

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

said...

வாழ்த்துக்கள்!!
:)))

said...

வாழ்த்துக்கள் சகோதரரே!

said...

கடகராசி நேயர்களே!!
இன்று நீங்கள் வேண்டியது எல்லாம் பலிக்கும் காலமிது.வாழ்த்துக்கள் ஆயில்யன்! உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு பெறுகிறேன்!!

said...

முத்துகுமரன்
ஹரிஹரன்
கார்த்திக்பிரபு

குட்டிபிசாசு
ஜெகதீசன்
வித்யா சகோதரி
நானனி

அனைவருக்கும் என் நன்றிகளுடன்....!

said...

//
வித்யா கலைவாணி said...
வாழ்த்துக்கள் சகோதரரே!

//
ரிப்பீட்டேய்

வாழ்த்துக்கள் ஆயில்யன்

said...

வாழ்த்து(க்)கள் ஆயில்யன்.

பாப்பாவுக்குப் பாட்டியின் பெயர் வச்சீங்களா?

குழந்தை அமோகமா இருக்கட்டும்.

தங்கமணிக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.

பிள்ளையார் 'பைத்தியம்' இன்னும் இருக்குதானே?:-)

said...

வாழ்த்துக்கள், நம்ம சங்கத்துக்கு 2 புது மெம்பர் ரெடி, சீக்கிரம் வந்து அட்மிசன் வாங்கிக்கோங்க

said...

//Baby Pavan said...
வாழ்த்துக்கள், நம்ம சங்கத்துக்கு 2 புது மெம்பர் ரெடி, சீக்கிரம் வந்து அட்மிசன் வாங்கிக்கோங்க
//
பவன் குட்டி ட்வின்ஸ் இல்லா ஒரே ஒரு குட்டி தேவதைதான்!

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்

said...

அண்ணன் குழந்தையும் சேயும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா தெய்வங்களும் ஆசிர்வதிக்கட்டும்.

said...

கானா பிரபா அண்ணனுக்கும்,
குசும்பன் தம்பிக்கும்
புதுகைதென்றலுக்கும்
நன்றிகளுடன்....!

said...

பிள்ளையார் என்றுமே பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்

வாழ்த்துகள்

said...

நன்றி சீனா அய்யா!

said...

//delphine said...
வ்வாழ்த்துக்கள் கடகம்...
போட்டோ? எங்கே?
///

நன்றி டாக்டரம்மா!
இதுவ்ரைக்கும் வர்லை! நானும் வெயிட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!

said...

தட்டு தடுமாறி எழுதி சொல்லுகிறென் வாழ்துக்கள்