சத்யமூர்த்தி பவன் = காமெடி தர்பார்..!??


தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சத்திய மூர்த்தி பவனில் தாக்கப்பட்டபோது நடந்த சம்பவம்.வன்முறைக் கும்பல் முதல் மாடியில் மயூரா ஜெயக்குமார் இருந்த அறைக்கு வந்தபோது. கும்பலைச் சேர்ந்த சிலர் மயூரா ஜெயக்குமாரின் தலைமுடியை முதலில் பிடித்திருக்கிறார்கள்.அப்போது அவரது தலையில் இருந்த டோப்பா முடி (விக்), இழுத்தவர் கையுடன் வந்து விட்டது. அங்கிருந்து ஓடாமல் அவர்களிடம் இருந்து தனது டோபா முடியைப் பறித்து மீண்டும் தலையில் வைத்துக் கொள் வதிலேயே குறியாக இருந்தார் ஜெயக்குமார். அப்போது அரிவாளுடன் உள்ளே வந்தவர்கள் சரமாரியாக ஜெயக்குமாரை தாக்கினர்.டோபா முடிக்காக காத்திருக்காமல் வெளியில் ஓடியிருந்தால் ஒரு வேளை ஜெயக்குமார் இந்த தாக்குதலில் இருந்து தப்பியிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகிறார்கள்


நன்றி - தினமணி

0 பேர் கமெண்டிட்டாங்க: