புலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1

பெரிய இரும்பு கதவுகளை கொண்டு அடைக்கப்பட்ட வாசல் நான் அந்த கதவுகள் திறந்திருந்து நான் பார்த்ததே கிடையாது ஒரத்தில் இருக்கும் சிறு கதவின் வழியாகத்தான் அங்கு தொழிலாளர்கள் வேலைக்கு உள் செல்வதை சில சமய்ங்களில் கண்டதுண்டு! (பட்! அந்த கதவு அடிக்கடி திறந்து மூடப்பட்டாலும், நான் தினந்தோறும் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமே மூடியிருக்கும்! அப்புறம்தானே ஆபிஸ் டைம் ஸ்டார்ட் ஆகும்!)

கம்பெனியின் இரும்பு கேட்டில் பதியும் பார்வை அதைத்தொடர்ந்து அங்கு அமைந்திருக்கும் குடேவுனின் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வழியாக பயணித்து,கண்கள் கூர்ந்து கவனிக்க,கால்கள் குத்திக்கொண்டு நிற்க செய்யும்படியான ஆர்வமூட்டும் அந்த பல கிளை மரங்களை கொண்ட தென்னை மரம்!

பள்ளிக்கூடம் போகமல் கட் அடித்த சந்தர்ப்பங்களில்,ஏண்டா ஸ்கூலுக்கு போனதானே படிச்சு பெரியவனாகி நல்ல வேலைக்கு போயி எங்கள காப்பத்த முடியும்னு! சொன்ன பாட்டியிடம்,நான் கஷ்டப்பட்டு புலிமார்க் சீயக்காய்தூள் கவர் ஓட்டியாவது உனக்கு சோறு போடறேம்மா என்று வீராப்பு பேசி பொழுதை கழித்த காலங்கள் கண்ணில் வந்து போகின்றன!

புலி மார்க் சீயக்காய் தூள் இல்லாத தீபாவளிங்கறது காவிரி கடைமடை மாவட்டங்களை பொறுத்த வரை நோ சான்ஸ்!

தீபாவளிக்கு முதல்நாள் இரவு, எல்லா பலகாரமும் செஞ்சாச்சான்னு கேட்கறத விட புலி மார்க் சீயக்காய்தூள் ரெடியாங்கற வாசகம்தான் பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும்!

தினமும் காலை 8.00 மணிக்கு அந்த மூன்று சக்கர சரக்கு வண்டியை எடுத்துக்கொண்டு நான்கு திசைகளை நோக்கி பயணிக்கும் அந்த மனிதர்கள் கிட்டதட்ட சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீக்கும் மேல் பயணித்து கிராமங்களில் ஊர்களில் உள்ள கடைகளுக்கு சரக்கு போட்டு, பிரபலமாக்கிய கம்பெனிதான் புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

வருட வருடம் வரும் புலி மார்க் மஞ்ச கலர் புத்தாண்டு காலண்டரிலும், நோட்டுப்புத்தகங்களில் ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் லேபிள்களாலும்தான் எங்களுக்கு மத்தியில் அதிகம் பிரபலமானது – புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

அப்புறமா! மீதி நினைவுகளோடு வர்றேன்......!

0 பேர் கமெண்டிட்டாங்க: