இது கவர்ன்மெண்டா...?


உலகம் பூராவும் உள்ள நாடுகளில் அடிப்படை கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது! மேல்படிப்புக்களுக்கு செல்லும் போதுதான் கொஞ்சம் காசு கரையுது! அதுவும் சிலருக்கு அட...! இதுவும் ஒரு முதலீடு மாதிரிதானேன்னுத்தான் நினைப்பு! (இது நம்ம ஊர்களில் ரொம்ப அதிகம்ங்க! பையன ஐ.டி அல்லது எலெக்ட்ரிகல் படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டு கடன் வாங்குறாங்க!?)

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கல்வித்துறை சிறப்பாக பங்காற்றிவருகிறது! அதுலயும் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கறதுக்காக வேண்டி கவர்ன்மெண்ட்ல படிக்கிற புள்ளைங்கள,தனியார் பள்ளிக்கு டிரான்ஸ்பர் பண்ணி படிக்க சொல்ற கவர்ன்மெண்ட்டும் இருக்குங்க!
நம்ம மகாராஷ்டிரம்தான் அந்த கவர்ன்மெண்ட்!

அங்க கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற பசங்கல அரசே பணம் உதவி சொஞ்சு தனியார் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வசதி செய்துவருகின்றனர்!

சுமாராக 800 மாணவர்கள் வரும் கல்வியாண்டில் இந்த சிறந்த கல்வி தரும் தனியார் பள்ளிகளில் இணைய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!
இதற்கு அந்த மாநில அமைச்சரும் மாணவர்கள் கல்வி விளையாட்டில் சிறந்து இருக்கும்போது அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைத்தான் இது என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்!

எதுவாயிருந்தால் என்னங்க? அந்த 800 பேர தவிர்த்து மத்தவங்க மோசமான கல்வியைதானே (அரசின் வாதத்தின்படி) பெறமுடியும்!

இதெல்லாம் கவர்ன்மெண்டா இல்ல மெண்டல்களா?

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக இலவச கல்வி , கட்டணக்கல்வி கூட ரொம்ப கம்மி தான், அதனால் தான் அயல் நாடு வாழ் இந்தியர்களின் வாரிசுகள் , இந்திய பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் படிக்கிறார்கள்.

அரசுப்பள்ளிகளில் படிக்க கட்டணம் இல்லை, ஆனாலும் மக்களுக்கு என்னமோ கான்வெண்டில் படிக்க வைக்கும் மோகம், பெரிய விஞ்ஞானிகளை எல்லாம்பார்த்தால் அரசுப்பள்ளியில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள், உ.ம், அப்துல் கலாம், எம்.எஸ்.சுவாமிநாதன், என பல பிரபலங்கள் அடக்கம் இதில்.

தங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் மம்மி, டாடி என்று அழைக்க வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் தான் பணம் கட்டி , தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யும் எந்திரம் ஆக மாற்றி மதிப்பெண் வாங்க வைத்து, அவர்களின் உண்மையான அறிவுத்திறனை கொன்று விடுகிறார்கள்.

மஹாராஷ்டிர அரசு செய்வது அதிகப்படி தான், ஒரு வேளை இதில் அரசியல்வாதிகள் நடத்தும் கான்வெண்டுகளுக்கு ஏதேனும் வருமானம் வர வைக்கும் வழியாக இருக்கலாம்(உள்நோக்கம் இல்லாமல் அரசியல்வாதிகள் எதையும் செய்ய மாட்டார்கள்).

said...

நல்ல பதிவு, ஆனா அது உண்மைதானே பல கவர்மெண்ட் ஸ்கூலில் அடிப்படை வசதி கூட இருப்பது இல்லையே!

யாரும் மம்மி டாடி என்று கூப்பிடும் மோகத்தில் பிரைவேட் ஸ்கூலில் சேர்பது இல்லை தரமான கல்வி எங்கு கிடைக்குமோ அங்கயே சேர்பார்கள்.

பிரைவேட் ஸ்கூலில் பசங்களை சேர்பதை அந்த கவர்மெண்டே செய்வதால் அந்த அரசை குறை சொல்லாம்.

said...

"அப்துல் கலாம், எம்.எஸ்.சுவாமிநாதன், என பல பிரபலங்கள் அடக்கம் இதில்"

மனசாட்சி படி சொல்லுங்க அரசு பள்ளிகளில் தரம் இருக்கா? பீஸ் அதிகம் வாங்குகிறார்கள் அது ஒரு புறம் இருக்கட்டும். சில அரசு பள்ளிகளும் இருக்கீன்றன மிகவும் நல்ல முறையில் செயல் படுகின்றன ஆனால் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் ஒழுங்கான டாய்லெட் வசதி கூட இல்லாமல் தான் இருக்கிறது.