பவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...!

சில மாதங்களுக்கு முன்பு தான், முதன் முதலாக சைவத்திற்கென்று தனியாக ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டது இங்கு!

வசந்தபவனின் மேனேஜ்மெண்டில், பாரத் பவன் என்ற பெயரில்,துவங்கிய நாள் முதல் கத்தாரின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம், தமிழ்நாட்டு ஹோட்டல் என்று விரும்பி வர ஆரம்பித்தனர்!

Photo Sharing and Video Hosting at Photobucket

அதைத்தொடர்ந்து, ஹோட்டல் ஆர்யாஸ் தன் கிளையினை தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், வியாழன் அன்று மற்றுமொரு கிளை தொடங்குகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket

இதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும், ஹோட்டல்களின் வரவில் உள்ள வரவேற்புக்கு!

பெரும்பாலும் தமிழ்நாட்டினர், ஈழத்தமிழர்கள், & வட இந்திய தமிழர்களின் வருகையில்,ஹோட்டல் நிர்வாகத்தினர் வரவேற்று மகிழ்கின்றனர்! அது மட்டுமல்லாமல், அலுவலகங்களில், நடைபெறும் விருந்துகளிலும் சைவ உணவு வகைகள் – தமிழ்நாட்டிலிருந்து – தூள் கிளப்புகின்றன!

வசந்தபவன், ஆர்யாஸினை தொடர்ந்து, மூன்றாவதாக உலக அளவில் புகழ்பெற்ற சரவணபவனும் தம் கிளையினை இன்னும் சில மாதங்களில் திறக்கக்ப்போவதாக அறிவித்துள்ளது!

Photo Sharing and Video Hosting at Photobucket

தமிழ் சங்கமிக்க, புதிதாக இடங்கள் வரத்தொடங்கிவிட்டன!

இனி இங்கும் சுவைப்போம் தமிழை –

உணவுகளோடும்...!

நட்பின் உறவுகளோடும்...!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உணவகங்கள் - தமிழ் உணவகங்கள் திறப்பதால் தமிழர்கள் உறவாடவும், உணர்வுகளை உணவுகளுடன் கலக்கவும் நல்லதொரு வாய்ப்பு.

said...

இந்த பவன்களில் இந்தியாவில் இருக்கும் ருசியை இங்கும் தொடர வேண்டும் என்பதற்காக சாம்பார், சட்னி போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு குளிர் பதனப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு இங்கு சூடு காட்டபப்ட்டு தரப்படுகிறது என்று தகவல். குறிப்பாக துபாய், சார்ஜா சரவண பவன் போன்றவற்றில். தெரிந்தவர்கள் விளக்கலாமே!