குட்டி நாய் - VODOFONE லேட்டஸ்ட் விளம்பரமும் + சர்ச்சையும்

எங்கு சென்றாலும் உங்களுடனேயே வரும் எங்களின் நெட்வொர்க்கும் என்று ஆரம்பத்தில் அசத்தாலாக அதுவும் அழகான நாய்குட்டியுடனான விளம்பரம் எல்லோரையும் கவர்ந்திருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை!

அப்படியே இது வரைக்கும் நான் அந்த விளம்பரங்களை பார்த்ததே இல்லை என்று ஃபீல் பண்ணுபவர்களுக்காய் இந்த கிளிப்


இப்போது லேட்டஸ்டாக வந்த ஒரு விளம்பர காட்சி ஒரு மாணவன் பள்ளிக்கு பஸ்ஸில் செல்வது போலவும் அவனை துரத்தியவாறே வருகிறது அந்த குட்டி நாய்! (துள்ளிகுதித்து வருவது அழகாகத்தான் இருக்கிறது விளம்பரத்தில்!)

இதுதான் பிரச்சனைக்குரிய விளம்பரம் :-)


இந்த விளம்பரம்தான் பிராணிகள் வதை தடுப்பாளர்களின் லேட்டஸ்ட் ஹாட் மேட்டராகியிருக்கிறது!

எப்படி நீங்கள் அந்த குட்டி நாய் வேகமாக செல்லும் பஸ்ஸினை துரத்தி வருவதுபோல காட்சிகளை படமாக்கலாம்? இதற்காக அந்த குட்டி நாய்க்கு பயிற்சி என்ற பெயரில் வதை செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறீர்கள்? என்று விளம்பர தயாரிப்பாளார்கள் மீது கோர்ட்டுக்கு கேஸ் போய்விட்டது? அனேகமாக இந்த விளம்பரம் நீக்கப்படலாம்!

குறிப்பு:-
நம்ம ஊருகளிலும் தெருவுக்கு தெரு நாய்கள் இப்படித்தான், சாரி இப்படிக்கூட அல்ல இன்னும் வேகமாக துரத்திவந்தால் மக்கா யாரும் கல்லை எடுத்து அடிச்சுப்புடாதீங்க! பிராணிகள் வதை தடுப்பு சம்பந்தமான தண்டனைக்கு நீங்கள் ஆளாகலாம்,உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///


கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா?

said...

///(துள்ளிகுதித்து வருவது அழகாகத்தான் இருக்கிறது விளம்பரத்தில்!)///


நாய்க்குட்டி, மான்குட்டி,etc.. எல்லாம் துள்ளி குதித்து ஓடிவரும் போது அழகாய் தான் இருக்கும்.

said...

எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியல. ஆட்டை மாட்டை எல்லாம் எல்லாம் கூறு போட்டு சாப்பிடுறாங்க. நாயை நாடு ரோட்டுல தினம் தினம் லாரிக்காரன் ல ஆரம்பிச்சி எல்லோரும் போட்டு தள்ளுறாங்க. அப்பவெல்லாம் இந்த பிராணிகள் வதை தடுப்புகாரங்க என்ன பண்ணுறாங்க? ஒரு வேளை நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிற மேட்டர தான் கண்டுக்குவாங்களா? எனக்கு நிஜமா எதுவும் புரியலைங்க:(

said...

முதலில் பார்த்தபோது “அட” போடவைத்தது.

said...

அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெரியலையா?

said...

இப்ப படம் தெரியுதுங்ண்ணா..

விளம்பரம் ஜூப்பரு :))

said...

//வடுவூர் குமார் said...
முதலில் பார்த்தபோது “அட” போடவைத்தது.
//

உங்களோட ரெண்டு வரிகள் வாழ்க்கையை ரொம்ப சிம்பிளா சொன்ன மாதிரி இருக்கு :)))

said...

//கப்பி பய said...
அப்ப எனக்கு மட்டும்தான் படம் தெரியலையா?
//

சூ மந்திரகாளி போட்டுனாவது தெரியவைச்சிடறேன் பெரியவங்கள்லாம் வந்திருக்கீங்க :)

said...

//நிஜமா நல்லவன் said...
எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியல. ஆட்டை மாட்டை எல்லாம் எல்லாம் கூறு போட்டு சாப்பிடுறாங்க. நாயை நாடு ரோட்டுல தினம் தினம் லாரிக்காரன் ல ஆரம்பிச்சி எல்லோரும் போட்டு தள்ளுறாங்க. அப்பவெல்லாம் இந்த பிராணிகள் வதை தடுப்புகாரங்க என்ன பண்ணுறாங்க? ஒரு வேளை நல்ல பப்ளிசிட்டி கிடைக்கிற மேட்டர தான் கண்டுக்குவாங்களா? எனக்கு நிஜமா எதுவும் புரியலைங்க:(
//
எனக்கு எல்லாமே புரியல :)

said...

//நிஜமா நல்லவன் said...
///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///


கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா?
//
கதறி அழுதா நாய் பயந்துடப்போகுதுங்க அப்புறம் அதுக்கு எதாவது தண்டனை கிடைக்கும் :))

Anonymous said...

We are sorry the video is no longer availale னு வருது, சரி பண்ணினா நானும் பாக்க முடியும்ல

said...

//சின்ன அம்மிணி said...
We are sorry the video is no longer availale னு வருது, சரி பண்ணினா நானும் பாக்க முடியும்///

நான் பாக்கறச்ச ஒ.கே தான் அக்கா!

அப்படியும் தெரியல்ன்னு நினைச்சீங்கன்னா எதுக்கும் இந்த லின்க்ல போய் பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=2gf1wsS2_Io

http://www.youtube.com/watch?v=_FEk_vXgfDE

said...

///நிஜமா நல்லவன் said...

///உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!///


கடி வாங்குனா கூட கதறி அழாம வாய பொத்திக்கனுமா? ///
எல்லாத்திலயும் உனக்கு அனுபவம் இருக்குய்யா! பெரிய ஆள்தான்...;))

said...

அப்படியே சீரியல்கள் என்ற பெயரில் மனிதன் வதைக்கப்படுவதை தடுக்க யாராவது கோர்ட்டுக்கு போங்கப்பா...

said...

'குழந்தைகள் நட்சத்திரம்' என்ற பெயரில் நடக்கும் சிறார் வன்கொடுமையும் கண்டிக்கப்பட வேண்டியது...:(

Anonymous said...

இப்ப பாத்துட்டேன். நன்றி