Showing posts with label மயிலாடுதுறை. Show all posts
Showing posts with label மயிலாடுதுறை. Show all posts

மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


மயிலாடுதுறை!

ஹய்யய்யோ! எங்க ஊரு இப்ப கூகுள் மேப்ல நல்லா தெரியுதே!!!!!!!!!


இதுதான் எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு!


இதுதான் எங்க ஊரு ரொம்ப பிரபலமான பியர்லெஸ் தியேட்டர் (இது எதிர்லதான் எல்லா காலேஜ் பஸ்ஸும் வரும் அப்படிங்கறது ஒரு உபரி தகவல்!)


இதுதான் என்னோட பேவரைட் பெரிய கோவில்!

கூகுள் மேப்பில் எங்கள் ஊரினை நீண்ட காலத்துக்கு பிறகு பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் இருக்கே ஆஹா...! ஆஹாஹா!

புலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1

பெரிய இரும்பு கதவுகளை கொண்டு அடைக்கப்பட்ட வாசல் நான் அந்த கதவுகள் திறந்திருந்து நான் பார்த்ததே கிடையாது ஒரத்தில் இருக்கும் சிறு கதவின் வழியாகத்தான் அங்கு தொழிலாளர்கள் வேலைக்கு உள் செல்வதை சில சமய்ங்களில் கண்டதுண்டு! (பட்! அந்த கதவு அடிக்கடி திறந்து மூடப்பட்டாலும், நான் தினந்தோறும் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமே மூடியிருக்கும்! அப்புறம்தானே ஆபிஸ் டைம் ஸ்டார்ட் ஆகும்!)

கம்பெனியின் இரும்பு கேட்டில் பதியும் பார்வை அதைத்தொடர்ந்து அங்கு அமைந்திருக்கும் குடேவுனின் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வழியாக பயணித்து,கண்கள் கூர்ந்து கவனிக்க,கால்கள் குத்திக்கொண்டு நிற்க செய்யும்படியான ஆர்வமூட்டும் அந்த பல கிளை மரங்களை கொண்ட தென்னை மரம்!

பள்ளிக்கூடம் போகமல் கட் அடித்த சந்தர்ப்பங்களில்,ஏண்டா ஸ்கூலுக்கு போனதானே படிச்சு பெரியவனாகி நல்ல வேலைக்கு போயி எங்கள காப்பத்த முடியும்னு! சொன்ன பாட்டியிடம்,நான் கஷ்டப்பட்டு புலிமார்க் சீயக்காய்தூள் கவர் ஓட்டியாவது உனக்கு சோறு போடறேம்மா என்று வீராப்பு பேசி பொழுதை கழித்த காலங்கள் கண்ணில் வந்து போகின்றன!

புலி மார்க் சீயக்காய் தூள் இல்லாத தீபாவளிங்கறது காவிரி கடைமடை மாவட்டங்களை பொறுத்த வரை நோ சான்ஸ்!

தீபாவளிக்கு முதல்நாள் இரவு, எல்லா பலகாரமும் செஞ்சாச்சான்னு கேட்கறத விட புலி மார்க் சீயக்காய்தூள் ரெடியாங்கற வாசகம்தான் பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும்!

தினமும் காலை 8.00 மணிக்கு அந்த மூன்று சக்கர சரக்கு வண்டியை எடுத்துக்கொண்டு நான்கு திசைகளை நோக்கி பயணிக்கும் அந்த மனிதர்கள் கிட்டதட்ட சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீக்கும் மேல் பயணித்து கிராமங்களில் ஊர்களில் உள்ள கடைகளுக்கு சரக்கு போட்டு, பிரபலமாக்கிய கம்பெனிதான் புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

வருட வருடம் வரும் புலி மார்க் மஞ்ச கலர் புத்தாண்டு காலண்டரிலும், நோட்டுப்புத்தகங்களில் ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் லேபிள்களாலும்தான் எங்களுக்கு மத்தியில் அதிகம் பிரபலமானது – புலிமார்க் சீயக்காய்தூள் கம்பெனி!

அப்புறமா! மீதி நினைவுகளோடு வர்றேன்......!

மயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு!

காலை 5.00 மணிக்கு பாதி தூக்கதிலிருக்கும்போது, அம்மாவும் பாட்டியும், டேய் காவிரி ஆத்துக்கு போய்ட்வர்றோம் தெரு கதவைப்பூட்டிக்கோவென்று சொல்லும் சப்தம் கேட்டு,தூக்கத்திலிருந்து எழும்போதே, அம்மா..! வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா? ன்னுதான் வார்த்தை வரும்!

அது போலவே 7. மணிக்கு சூடான பொங்கல் கொண்டு வந்து வைத்துதான் எழுப்புவார்கள்! இது பல வருடங்களுக்கு முன்பு வரை!

கடைமுழுக்கு பற்றி ஒன்றும் பெரிதாக தாத்பரியங்கள் அறிந்திருக்காவிட்டிலும் கூட அன்னைக்கு போய் காவிரியில குளிச்சா, நல்லதுங்கற எண்ணம் மட்டும் ரொம்ப கெட்டிய மனசுல் இறுகிப்போச்சு!

என்னதான் காலையில் காவிரி ஆற்றுக்கு சென்றுவந்தாலும் பாட்டிக்கு சாயங்காலமும் சென்று சாமி தீர்த்தம் கொடுக்கும் போது குளித்துவந்தால்தான் மனசுக்கு நிம்மதி! (ஏம்மா! அதான் காலையில போய் குளிச்சுவந்தாச்சுல்ல பின் திரும்ப எதுக்கு சாயங்காலமும்ன்னு சொல்றத கேட்கதபோது எங்களுக்கு கோபம்தான் வரும்! ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா!)

காலை 10.00மணிக்கு கோவிலுக்கு செல்லும் நான் சாமி புறப்பாடாகி கோவில் வாசலிலிருந்து அந்த மடவளாக விளிம்புக்கு வர ஒரு மணி நேரமாவது ஆகும்! ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன்!)

வீட்டுக்கு வந்து சாமி கிளம்பிவிட்டது என்று தகவல் சொன்னால் போதும் பரபரக்க ஆரம்பித்துவிடுவார் பாட்டி! இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும்! வழி நெடுகிலும் நாதஸ்வர கச்சேரி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்!

ஒரு வருடம் நானும் துலாகட்டத்தில் சாமி வருகையை எண்ணி காத்திருந்தப்போது, சுமார் 3 மணிக்கு முதலில் யானை வந்து சேர கூட்டம் பரபரப்பாகி ஆற்றை நிரப்பியது மக்கள் வெள்ளம் ஆனால் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்ததோ 5 மணிக்கு மேல்தான்! அவ்ளோ நேரம் ஆச்சு கடைத்தெருவை கிராஸ் செய்து வர..!

ஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்வுதான் என்றாலும், இன்றும் கூட மிகுந்த உற்சாகத்தோடு கடைமுக உற்சவத்தில் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரள்கிறது!

காவிரி அன்னை எம்மை காண வராமல் தவிக்கும் நாட்களில், வருணபகவான் வாரி வழங்குகிறான்

எம் மயிலாடுதுறை மக்களுக்கு வளங்களோடு நல் வாழ்க்கையையும் - மயூரநாதரின் கருணையால்...!

படங்கள்- நன்றி sbalu

வைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை

மணிக்கூண்டு பார்க்கத பொண்ணும்;

வைத்தா கடை டீ குடிக்காத ஆணும்;

மயிலாடுதுறையில இருந்ததா சரித்திரமே இல்லைங்க!

அப்படியொரு பிரபலமான கடை!

இத்தனைக்கும் பத்து பேர் ஒண்ணா சேர்ந்து போனா அப்புறம் வர்றவங்க லைன் கட்டி ரோட்லதான் நிக்கணும்!

அந்த மாதிரியான இடம்தான் இருந்தாலும், டெயிலி வந்து போற கூட்டம் எண்ண முடியாது!

எனக்கு வைத்தா கடை அறிமுகமானது 1985களில் வெளியூருக்கு (வைத்தீஸ்வரன்கோவிலுக்குத்தாங்க!) போய் வரும்போதெல்லாம் சைக்கிள் ஸ்டாண்ட கணக்கு பண்ணி எங்க அப்ஸ் சுருக்கா இங்கயே காபி அல்லது டீ வாங்கி கொடுத்து அழைச்சிட்டு வருவாரு!

கொஞ்சம் வருசம் கழிச்சு நாமளே தனியா போக ஆரம்பிச்சாச்சு!

காலேஜ் பரீட்சைக்கு படிக்கறதுக்குன்னு லீவு போட்டு வெளிய எங்கயும் போகாம, வுட்ல உக்காந்து படிச்சு சாயங்காலம் 6.00 மணிக்கு வைத்தாவுக்கு போய் சூடா ஸ்ட்ராங் டீ சாப்பிட்டு வந்தா அப்புறம் போகும் டைம் 12.00 வரைக்கும்!

இந்த டெக்னிக் என் பிரதர்கிட்டயிருந்து நான் சுட்டது! அவன் படிக்கற டைம்ல திடீருன்னு பத்துமணிக்கு கதவு திறக்கிற சத்தம் கேக்கும் என்னாடா பண்றான்னு ஒருநாள் கேக்கறச்சா "சைக்கிள எடுத்துக்கிட்டு தடதடன்னு மிதிச்சிக்கிட்டு போன பாதிதூக்கம் போயிடும் அப்புறம் ஒரு டீ குடிச்சிட்டு திரும்பவந்தா விடிய விடிய படிக்கலாம்ன்னு, சென்னான்!

படிக்கற காலத்துல இப்படின்னா! கொஞ்ச காலம் ஊர்ல வேலை பார்க்கும்போது வைத்தா டீக்கடைக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் அதிகமாயி,காலையில ஒரு விசிட், பதினொரு மணிக்கு ஒரு விசிட் மதியத்தில எப்போதாவது சாய்ங்காலம் ஒரு விசிட்ன்னு ஆகிப்போச்சு! அதுவும் சும்மா தனியாயெல்லாம் போயி நின்னு குடிக்கறது கிடையாது! பிரெண்ட்ஸ் ஒவ்வொரு மூலையில இருப்பாங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும் இரண்டரை ரூபா டீக்கு cost benefit ratio போட்டு பார்க்காமலேயே,பெட்ரோல் செலவுப்பண்ணிக்கிட்டு வருவாங்க!

டீக்கடையுடனான அனுபங்கள் தொடரும்....!

மயிலாடுதுறையிலிருந்து - நாதஸ்வர ஓசையிலே...!

காலை வேளைகளில் சின்னகடைத்தெருவில் அந்த பகுதியை கடக்கும் போது எப்போதும் கேட்கும் மனத்துகினிய அந்த நாதஸ்வரம்+தவில் ஒசை! மங்கல ஒசை!

இந்த நாதஸ்வர ஒசை பொறந்த இடம்னு நம்ம பழைய தஞ்சை மாவட்டத்ததான் சொல்லணும்!. இந்த வாத்தியத்தில் அதிக பிரபலமானதும் எங்க மாவட்டத்துக்காரங்கதான்!

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியம் பிள்ளை இவர்களின் சிஷ்ய கோடிகள்தான் மாவட்டம் ஃபுல்லா இறைஞ்சு + நிறைஞ்சு இருக்கறது!

அதுல, எங்க ஊரு ஸ்பெஷல் பார்ட்டிகள்ன்னு சொன்னா,
"செம்பனார் கோவில் சகோதரர்கள்" என்றழைக்கப்ப்டும் எஸ்.ஆர்,ஜி.குரூப்ஸ் அல்லது எஸ்.ஆர்.குரூப்! ரெண்டு குரூப்புமே அண்ணன் தம்பி வழிமுறைதான்!

இந்த தவில் நாதஸ்வரம் விஷயங்களெல்லாம் எதாவது கல்யாணம், வீட்டு விசேஷங்கள் இல்லாட்டி கோவில் திருவிழாக்கள்ன்னுதான் பார்த்து பழக்கம்! அது மாதிரி அடிக்கடி, பார்த்து தெரிஞ்ச முகங்களானவங்கதான் இவங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket

இப்போதைக்கு அஞ்சாவது தலைமுறை ஆளுங்க வாசிச்சிக்கிட்டிருக்காங்க!

பிரபலமான எல்லா நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களோடு இணைந்து பல கச்சேரிகளை கலக்கியவர்கள்!

நாலவது தலைமுறை சம்பந்தம் & ராஜண்ணா பிரதர்ஸ்க்கிட்ட, முறைப்படி கலை கற்றுக்கொண்டவர்க்ள் இப்போ வெவ்வேறு இடங்களில் தங்கள் திறமையில், ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்!

வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்படும் ஐப்பசி விழாவின், இறுதி வாரத்தில் நடக்கும் ஊஞ்சல் உற்சவம், திருத்தேர் விழாக்களில் இவர்கள்தான் ஸ்பெஷல்!

ஐப்பசி கடைசி நாள் கடைமுழுக்கு அன்று, பெரிய கோவிலில் காலைல 10 மணிக்கு ஆரம்பிக்கும், சுவாமி ஊர்வலத்தில், வெளியூர்களிலிருந்து வரும் மற்ற நாதஸ்வர வித்வான்களுடன் சேர்ந்து, போட்டிப்போட்டுக்கொண்டு பாடும் மல்லாரி ராகத்திற்கு கூடும் கூட்டத்தை காண, அட..! அடுத்த வாரம் நீங்க நேர்லயே போய்த்தான் பாருங்களேன்..!

சுவாமி ஊர்வலம் கடைவீதிகளை வலம் வந்து மாலையில் 4 மணிக்கு இவர்களின் தீர்த்த மல்லாரியுடன் தீர்த்தம் கொடுத்து துலாகட்டத்தில முடியும்!

அதோ போல தருமபுர ஆதீனத்தில் நடக்கும் குருபூசை விழாவிலும் இவர்கள்தான் பிரதான கலைஞர்கள்!

தம் உயிர்காற்றை உருக்கி, ஊதி, அதன் மூலம் தம் சந்ததிக்கு உணவிடும் இவர்களுக்கும்,

இவர்களுக்கு துணை நின்று, ஊருக்கே மங்கல ஒசை முழங்கும் அந்த நாதஸ்வரத்துக்கும்,

நாம் மரியாதை செய்வோம்..!

மங்கல ஒசை எங்கும் முழங்கவும் செய்வோம்..!



LINK TO THIS MATTER - என்னோட கணக்குப்படி, அபி அப்பா வீட்டுக்கும் சில வீடுகள் தள்ளி, இவங்க் வீடு இருக்குன்னு நினைக்கிறேன்!

அபி அப்பா மேலதிக தகவல்கள் உண்டா...????

தொல்ஸ்'ண்ணா (அபி அப்பா) பீல் பண்ணாதீங்க..!

படம் கிடைக்கலைன்னா என் கிட்ட சொல்லலாம்ல...!

என்ன சின்னபுள்ளைத்தனமா சின்ன போட்டொவெல்லாம்

போட்டு, யேன்ன்...?


Photo Sharing and Video Hosting at Photobucket


ஒண்ணு

Photo Sharing and Video Hosting at Photobucket
ரெண்டு

Photo Sharing and Video Hosting at Photobucket

மூணு
ஆமாம் இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது...?!!
இப்ப என்னாச்சு...?
ஒ.கே படம் போதுமா இல்லை செகண்ட் பார்ட் போடலாமா?