ஓரங்க நாடகம்/ஸ்டேஜ் ஷோ

பள்ளிக்கூட ஆண்டுவிழாக்கள் கல்லூரி வருட இறுதி கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் செலுத்தும் மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே மிக அரிதாக இந்த ஓரங்க நாடகம் கான்செப்ட் எடுத்துக்கொண்டு கலக்குறத்துக்கு முயற்சி செய்வாங்க! பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி ..சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை! (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்!)

சரி அந்த விசயமெல்லாம் வேண்டாம் நாடகம் பத்தி பேசுவோம் நானெல்லாம் ஸ்கூல்ல படிச்ச காலத்துல ஆண்டுவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே அருமையான சப்ஜெக்ட் எடுத்து வைச்சு யார் யாரு என்ன என்ன கேரக்டருன்னெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு முடிஞ்சா ரிகர்சல் பாக்கலாம்ன்னு முடிவு பண்ணினதோட சரி ரொம்ப சீக்கிரத்துலயே செலக்ஷன் கமிட்டிகூடி நீங்க என்னா செய்யப்போறீங்கன்னு கேக்கப்போற நாளும் வந்து அன்னிக்குன்னு பார்த்து டைரக்டரா இருக்கறேன்னு சொன்ன பய வராததால என்/எங்களோட ஓரங்க நாடக கனவு கம்பெனி இழுத்து மூடப்பட்டது! ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு! - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ! நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான்!)

பிறகு பாலிடெக்னிக்ல சுத்திக்கிட்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஆசை வந்துச்சு ஆனா செலக்ஷன் பண்ணப்போற வாத்தி எங்க குரூப்பு மேல செம கடுப்புல இருந்ததால நாங்களே வேண்டாம் பொழச்சுப்போங்கன்னு விட்டுட்டோம். ஆனா அந்த டைம்ல எங்க ப்ரெண்ட்ஸ் குரூப்பு செஞ்ச நாடகம் செம க்ளாப்ஸ் வாங்கினுச்சு! - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்ஷன்! ஸ்டூடன்ஸ் லெக்சரர் பிரின்ஸ்பால் இப்படி எல்லாருக்கும் அடக்க முடியாத சிரிப்பு நடிச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அவுனுங்க ஃபிகருங்ககிட்டேர்ந்துல்லாம் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன்!!

ஓரங்க நாடகங்கள் இப்போதைய காலகட்டத்தில் ரொம்ப குறைஞ்சுடுச்சுன்னு பொதுவாக பார்க்கும்போதே தெரியுது. துணுக்கு தோரணங்களாக வர்ணிக்கப்பட்ட நகைச்சுவை நாடக அரங்கேற்றங்கள் ஆடியோ கேசட் ரீலிசுகள் சுத்தமா நின்னுப்போச்சு அல்லது அது பற்றிய செய்திகள் காணக்கிடைப்பதில்லை! இதெல்லாம் விரும்பாத அளவுக்கு மக்கள் சந்தோஷமாக இருக்காங்களோன்னு நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு!

டிவிக்களில்
முழு நேரமும் தொடர்களும்,திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் ஒரே நகைச்சுவை காட்சிகளும் மக்களை கட்டிப்போட்டுவைத்திருக்கிற உண்மையினை நாடகம் நடத்துறவங்க நல்லா புரிஞ்சுக்கிட்டு கம்முன்னு இருக்காங்க போல...!

பதிவுலகத்தில கூட அவ்வப்போது நாடக டைப்புல பதிவுகள் வந்துக்கிட்டிருக்கும் இப்பவெல்லாம் சுத்தமா நின்னுப்போச்சு! டெரர் காமிக்கிற பதிவுகள் தான் எழுதறவங்களும் படிக்கறவங்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க போல..!

தேவைப்படும் போது தேவைப்படற விசயம் கிடைக்காம போச்சுன்னா அக்கம்பக்கத்துலேர்ந்து வாங்கிகிடலாமாம் - காபி தூள் சக்கரைக்கு பக்கத்து வூட்டுல போய் கடன் கேட்டு வாங்கியாச்சும் ஃபில்டர் காபி குடிக்கிற மாதிரி - இப்ப ஸ்டேஜ் ஷோவுக்கு சாம்பிள் எதாச்சும் காமிக்கலாம்னு தேடி அலைஞ்சா ஒண்ணுமே சரியா சிக்கல சரின்னு எண்ட தேசம் பக்கம் போயி புடிச்சுட்டு வந்துட்டேன்!

பைஜு {Byju} காமெடி - பயபுள்ள டாப் லெவல்ல இருக்கிற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம் தண்ணிப்போட்ட மாதிரி நடிக்கிறதுல கில்லாடியாம்! அதுமாதிரியான கேரக்டர்தான் நல்லா பேரு வாங்கி கொடுத்து இப்ப உலகம் பூரா சுத்தி சுத்தி ஷோ போட்டுக்கிட்டிருக்காராமாம்!


12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மூன்றாம் நாலாம் ஐந்தாம் வகுப்பில் நான் நடித்த நகைச்சுவை
நாடகங்களின் நினைவு கண் முன் வந்து போனது.
மலையாளம் முழுசா புரியல .. அதனால் கொஞ்சம்தான் ரசிக்க முடிஞ்சது.

said...

செம கொசுவத்தி அண்ணே ;)

said...

//கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் -//

அடப்பாவிகளா.. இதையேத்தான் நான் ஆறாவது படிக்க ஆரம்பிச்சப்ப மேடை ஏத்தி பத்தாவது வரைக்கும் வெற்றிகரம்ன்னு சொல்லி வருசா வருசம் என் ஸ்கூல் ஆண்டு விழாவுல கொல்லுவாங்க :(

இன்னமும் இந்த நாடகம் மாத்திரம் எனக்கு அலர்ஜி!

said...

சிரிக்கக் கூடியதாக இருந்தது. மலையாளம் அவ்வளவு விளங்காது.

said...

ஆகா ஒரு வீடியோவுக்கு அருமையான கொசுவத்தி பாஸ் :-)

said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு கலைஞன் தூங்கிட்டு இருக்கானா...

அந்த வீடியோவை ரூம்ல போய் பார்க்கிறேன்.

said...

ஹாஹாஹா....எனக்கு மலையாளம் புரியும்!!!!

said...

ஐந்தாம் வகுப்பு படிக்கையில் திருவிளையாடல் நாடகம் போட்டார்கள். அதில் நான்தான் முருகன். புள்ளையாரையும் முருகனையும் தவிர மற்றவங்க எல்லாம் 10,11ஆம் வகுப்பு சீனியர்ஸ். என்ன ஒரு செட்டிங் போட்டாங்க தெரியுமா ஒவ்வொரு காட்சிக்கும். தட்சண் யாகத்தைக் காட்ட அக்னி பீடத்துள் டேபிள் ஃபானை படுக்க வைத்து அதில் ரெட் பேப்பர் ரிப்பன்கள் கட்டி நடுவில் ரெட் பல்பு வைத்து ஆன் பண்ண ஜகதோதியாய் அக்னி வளரவும் எழும்பிய கைத்தட்டல் மறக்கவில்லை இன்னும்.

நல்ல பதிவு ஆயில்யன். வீடியோ இனிதான் பார்க்கணும்.

said...

பழைய நினைவுகள் அருமை.

//பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை(அப்பத்தான் பசங்களும்
நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்//

ஆசிரியர்களுக்கு சொல்லி கொடுக்கும்
வேலை இல்லை,பசங்கலே ஆடிவிடுவாங்க,ஆனால் நாடகம் என்றால்
நிறைய வேலை,வகுப்புகளை கட் செய்யவேண்டும்,ஒத்திகை பார்க்க.
அதை ஆசிரியர்கள் ஒத்துக் கொள்வது இல்லை.

said...

சூப்பரு அந்த பாட்டை ஒரேமாதிரி பாடறதும்..அதைப்பாத்து அந்த குடிகாரர் முகபாவம் மாத்தறதும்.. :)))

said...

கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்‌ஷன்! //

இதப்படிக்கும் போதே சிரிப்பு வருது பாஸ்:)

வீடியோ + ஆடியோ பாக்க / கேட்க முடியலியே :(

said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html