வாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா! பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு! எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!
அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்கு போயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!
சரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர் கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாக அமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம் ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு! வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூட ஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னா அடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]
சரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்து குந்தும் பாருங்க! அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமா நாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்க கிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு!
பலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுல டிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்க வீணாக்குவேன்!?)
சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!
குட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்த அந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் ! :)
டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!
24 பேர் கமெண்டிட்டாங்க:
வகுப்பறைத் திகிலைக் கிளப்பி விட்டுட்டீங்களே ஆயில்யன்:)
நல்லாவே கதை விடறீங்க.:)
"பரீட்சைப் பேப்பரேய்ய்" நல்ல ரசனையாக எழுதியுள்ளீர்கள்.
//டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!//
ஒன்பதாவது, பத்தாவது படிக்கும்போது கிளாஸ் பரிட்சைப் பேப்பரை திருத்தின அனுபவம் உண்டு. அப்போதான் என்கூட படிக்குறவங்க எம்புட்டு யோசனை செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது :-)
மெய்யாலுமே இம்புட்டு பொறுமையா படிச்சுட்டு திருத்தற வாத்தியார்கள் தெய்வம்தான்!
//[எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]//
பாஸ் நான் நினைக்கிற மாதிரி அப்படியே தான் இருக்கு :)
அதுல பாருங்க நான் எம்புட்டு பயந்தாலும் இதுவரைக்கும் அடிவாங்கினதே கிடையாது. நல்ல மார்க் எடுத்து பாஸாகியிருப்பேன். எல்லாம் ஒரு மன பிராந்தி தான் பாஸ் ஹி ஹி
//(ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுல டிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்க வீணாக்குவேன்!?)//
டாங்ஸ் பாஸ் :)
//டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!//
உண்மை தான் அண்ணா.. :)))
:-)))))))))))
எங்க இங்க்லீஷ் டீச்சர் ஒருத்தங்க இருந்தாங்க.. பேப்பர் திருத்தும் போது சிரிச்சிகிட்டே திருத்துவாங்க.. பாத்த பசங்க எல்லாம் "சரியான ... டா அது" அப்படின்னு கிண்டல் பண்ணுவாங்க... பேப்பர் வந்ததும் தான் தெரியும் யார் என்னன்னு... நல்ல மிஸ் அடிக்கவே மாட்டாங்க.. :))
exama???:))theriyathanama vanthuteno:)
எனக்கும் கெமிஸ்ட்ரிக்கும் ஆகவே ஆகாது... அந்த பேப்பர் தராங்கன்னா மட்டும் அன்னைக்கு ஸ்கூல் மட்டம் போட்டுடுவேன்.. :(( நல்ல மார்க் வாங்கிருந்தாலும் ஏனோ அது எனக்கு பிடிக்காத பாடமாவே ஆகிடிச்சு.. :(( அவ்வ்வ்வ்வ்வ் பழச எல்லாம் கிளறிட்டீங்களே அண்ணா... :)))
நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே//////////////////////////
kandippaga Nichayamaga...uruthiyaaga:)
சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்/////////////
50kka irukum boss:)
Very Nice. It reminds me of my good old school days.
\\பல (வி)”னா”க்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும்//
ஆகா ஆகாகா
ம்...:)
தெய்வம் தான், அவங்க தெய்வம் தான்.. இல்லன்னா உங்களுக்குள்ள திறமையெல்லாம் இன்னிக்கு பதிவா வந்து சேர வாய்ப்பு ஏது?
/*டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!*/
ஆமாம் ஆமாம்
உண்மையிலேயே அவர்கள் தெய்வம் தான் - ஆயில்ஸ்
நல்லா இருக்கு இடுகை - உணர்ச்சி பொங்க மனநிலையினை விவரிக்கும் விதம் நன்று - 37 - அடேங்கப்பா - இவ்ளோ மதிப்பெண் வாங்கினீங்களா - பலே பலே ஆயில்ஸ்
நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்
சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!
:)))))))))))))))
super boss.
நீங்க சயின்ஸ் ல மட்டும்தான் இந்த மார்க் வாங்குவீங்களா இல்ல எல்லா சப்ஜெக்ட்லியும் இதே மார்க் வாங்குவீங்களா பாஸ்
//இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனா//
// [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]//
கவலையே படாதீங்க. எல்லாரும் தாண்டி வந்ததைத்தான் அழகோ அழகாச் சொல்லியிருக்கீங்க:))))!
பாஸ்....எனக்கும் அப்படியே கொசுவத்தி சுத்திஃபையிங்...அது நிஜமாவெ டெரர் ஃபீலிங் பாஸ்!! :-))
இந்த பரிட்சை பேப்பர் படம்..:-))))))))))))))
\\போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு!\\
இந்த 2 மட்டும் தானா!!..மழை, அடிதடி அப்படி எதுவும் இல்லையா!!
//[எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]//
என்ன ஒரு சமுதாய சிந்தனை...
எல்லாருக்கும் இது இருந்திருக்கும்னு நினைக்கிறேன். ஒரு சில தடவையாவது.
என் பேப்பர்ஸ் திருத்தினவங்க பட்ட கஷ்டத்த நானும் அனுபவிச்சிட்டு இருக்கேன்... :))))
நாங்கெல்லாம் தெய்வமாக்கும்....கும்புட்டுக்கோங்கப்பா!
ஆயில்யன்,வீட்டில் 2குழந்தையை சமாளிக்க முடியவில்லையே,ஆசிரியர்கள்
எத்தனை குழந்தைகளை சமாளிக்கிறார்கள்,உண்மையில் அவர்கள்
தெய்வம் தான்.
Post a Comment