கைகள் கைகளுக்குள் கைகள் வைச்ச கொலாஜ்;
குட்டீஸ்களின் போட்டோக்கள் அதை சுற்றிலும் அழகாய் கைவண்ணத்தில் பூக்கள்;
வித விதமான மேக்கப்களில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் டீச்சர்ஸ்;
மொத்தத்தில் ஸ்கூல், ஆபிஸ்ன்னு தொடங்கி எங்கெங்கு காணினும் கலர்களடா ரேஞ்சுலதான் பெயிண்டிங்க்ஸ் போட்டு சுவரை அலங்காரம் செஞ்சிருக்காங்க எல்லா பெயிண்டிங்க்ஸும் பசங்களோட டெரர் அட்டாக்தான்! - சரி அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க!
இன்னிக்குன்னு பார்த்து நான்-யூனிபார்ம் டேவாம் (அப்புடி டே’வெல்லாம் கொண்டாடுறாங்க - ஹம்ம்ம்ம்) டீ சர்ட்டு முக்கால் டவுசரு/ஜீன்ஸ் பேண்ட் போட்ட வாத்தியாருங்க யூனிஃபார்மெல்லாம் இல்லாம குட்டீஸ் எல்லாம் வித விதமான டிரெஸ் போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாய் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கற அந்த இடத்துல நாங்க போன வேலையெல்லாம் மறந்துட்டு ஆ’ன்னு வாய் பொளக்க பார்த்துக்கிட்டு இருந்தோம்ன்னு தான் சொல்லணும்!
எல்லா டீச்சர்ஸும் ஒரு ரேஞ்சுக்கு ஓடிக்கிட்டும் வெளையாடிக்கிட்டும் பாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க! இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வாத்தியாரு!(ஹம்ம்ம்)
சயின்ஸ் லேப்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு ஒரு செவப்பு அம்மிணி உக்காந்திருந்தாங்க கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் 7வது பசங்களாம் ஹாய் டீச்சர்ன்னு எண்ட்ரீ கொடுத்துக்கிட்டே வந்து என்னமோ ப்ரெண்ட்கிட்ட கிண்டல் அடிக்கிற மாதிரி அம்மிணி ஏன் சோகமா இருக்கீங்க ரேஞ்சுக்கு கொஸ்டீனு போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் பெற ஒரே கலகல சத்தம்தான்! (ஹம்ம்ம்ம்)
ஒருவழியா வந்த வேலைகள் முடிஞ்சு வெளியில வந்து நின்னா, ஒரு டீச்சரு கழுத்தில நிறைய வளையத்தை மாட்டிக்கிட்டு ஒடிவராரு பின்னாடி பார்த்தா லைன் கட்டி குட்டீஸ்ங்க ஒடியாறாங்க! எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம்! (ஹம்ம்ம்ம்) - அதுல ரெண்டு மூணு குட்டீஸ்ங்க நம்ம புதிய வானம் எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல தாவி தாவி போனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு!
இப்படியே நிறையா ஹம்ம்மிக்கிட்டே ஒரு 4 மணி நேரம் சுத்தி சுத்தி வந்ததுல ஒரு விசயம் மட்டும் - மனசுல நிறைஞ்சிருந்தது -குட்டீஸ்ங்க முகத்துல எந்தவிதமான டல் மூட் அல்லது அழுகையோ இல்லை என்பதுதான்! எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்!
படிக்கிற காலத்துல டெய்லி எந்திரிச்சு முதல் நாள் செய்யாம விட்ட ஹோம் ஒர்க் செஞ்சுப்புட்டு ரொம்ப கடுப்போட ஸ்கூலுக்கு போகும்போது போற வழியில பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கையில பேக் எடுத்துக்கிட்டு ஆபிஸ் போற ஆபிசர் அண்ணன்களை பார்த்து நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு ஃபீலிங்க் வுட்ட கால நினைவுகளெல்லாம் மறந்து போய் மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு!
பிராக்கெட் குறிப்பு - படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே!

17 பேர் கமெண்டிட்டாங்க:
ஸ்கூலுக்கு போவேண்டிய காலத்தில போமாட்டேங்கறது. இப்ப ஸ்கூலுக்குபோவேன்னா எப்படி
///படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே!//////
nice
super ஆயில்யன் குழந்தைகள் செய்த விசயங்களை அப்படியெ கண்முன் காட்சியா வர வச்சிட்டீங்க.. :)
அருமை அண்ணா... :)) பொறாமையா இருக்கு... இப்படி ஒரு இடத்துக்கு போய் அந்த குட்டீஸ் எல்லாம் பாக்கவாவது உங்களால முடிஞ்சதேன்னு... :(( இங்க மருந்துக்குக்கூட குழந்தைகள் இல்ல... பஸ்ல போகும்போது மட்டும் எந்த குழந்தை வந்தாலும் தூக்கி மடில வெச்சிப்பேன்... என் ராசி மடில வந்ததும் தூங்க ஆரம்பிச்சிடும்.. எங்க அம்மா அப்படியே கேவலமா ஒரு லுக் விடுவாங்க.. ம்ம்ம் :((
//சின்ன அம்மிணி said...
ஸ்கூலுக்கு போவேண்டிய காலத்தில போமாட்டேங்கறது. இப்ப ஸ்கூலுக்குபோவேன்னா எப்படி
/
அதானே!
//பஸ்ல போகும்போது மட்டும் எந்த குழந்தை வந்தாலும் தூக்கி மடில வெச்சிப்பேன்... என் ராசி மடில வந்ததும் தூங்க ஆரம்பிச்சிடும்.. எங்க அம்மா அப்படியே கேவலமா ஒரு லுக் விடுவாங்க.. ம்ம்ம் :((//
ஏதாவது கவிதை சொன்னயா ஸ்ரீமதி?
இந்த மாதிரி விசயத்துல இங்கிலீஷ்காரன் இங்கீலீஷ்காரன் தான் பாஸ். படிப்பை எப்படி சொல்லிகொடுக்கனும், எப்ப சொல்லிக்கொடுக்கனும்னு அவன்கிட்ட நம்ம பள்ளிகூட வாத்தியாருங்க கத்துகிறலாம்.
வயசான காலத்துல இந்த மாதிரி ஃபீலிங்க் எல்லாம் வரத்தான் செய்யும் பாஸ்!
பாத்து, ஆ.கோளாறுல நாளைக்கு காலை எழுந்திரிச்சு ஸ்கூலுக்கு போயிடப்போறீங்க.:)
அன்பின் ஆயில்ஸ்
நாம் பள்ளிக் குழந்தைகளாக மாற ஆசை தான் - ஆனால் இந்தியாவில் அல்ல - அயலக்ங்களில்
இங்கு இலண்டனில் பேரன் பேத்திகளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விடுவதும் கூட்டி வருவதுமாக பொழுது போக்குகையில் நாமும் குழந்தைகளாக மாற மாட்டோமா எனத் தோண்ரும். உணமை
பல நாடுகளைச் சேர்ந்த பல வண்ணப் பூக்களின் குதூக்லத்தின் நடுவினில் நாமும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆயில்ஸ்
நல்வாழ்த்துகள்
ஹம்ம்ம்ம்.....
எனக்கு என் பசங்கள பாக்க பொறாமையா இருக்கு.
அவங்களுக்கு என்ன பாக்க பொறாமையா இருக்கு.
//☀நான் ஆதவன்☀ said...
//பஸ்ல போகும்போது மட்டும் எந்த குழந்தை வந்தாலும் தூக்கி மடில வெச்சிப்பேன்... என் ராசி மடில வந்ததும் தூங்க ஆரம்பிச்சிடும்.. எங்க அம்மா அப்படியே கேவலமா ஒரு லுக் விடுவாங்க.. ம்ம்ம் :((//
ஏதாவது கவிதை சொன்னயா ஸ்ரீமதி?//
கவிதை சொல்லியிருந்தா அந்த குழந்தை என் கழுத்த நெறிச்சிருக்கும்... :)))))
ஹையா...நிறைய விஷயம் எங்க ஸ்கூலில் நடக்குதே!
அழகுப்பதிவு.
நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு // 8 படிக்கும்போது 10க்கும், 10ல் 12க்கும், 12ல் கல்லூரிக்கும், கல்லூரியில் வேலைக்கும் இப்படிப்போக ஆசைப்பட்டேன். அவ்வ்வ்..
//மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு!//
டூ லேட் தாத்தா:)))))))))))))
எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்!//
அதே பிரிட்டீஷ்காரவுக நம்ம பிள்ளைகளை மனஅழுத்தத்துடன் படிக்மும் சூழ்நிலையை தந்திருக்காக.
:(
ரொம்ப இயல்பா வர்ணனை கொடுத்திருக்கீங்க ஆயில்யன்.
எங்க பசங்க படிக்கும்போது நானும் நினைத்திருக்கிறேன். இவர்களுக்குச் சந்தோஷம் தரும் இடமாகப் பள்ளிக்கூடம் இருக்கக் கூடாதான்னு.!!
எப்போது பார்த்தாலும் ரெகார்ட்,இல்லாட்டா சைக்கிள் கார்னு டெஸ்ட்:(
ஆயில்யன்,குழந்தைகள் குதுகலத்தை சொல்லி, மீண்டும் குழந்தை பருவம்
ஆசையை தூண்டி விட்டு விட்டீர்கள்.
Post a Comment