ப்ளான்




எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு 40X60 சதுர அடியில மனை வாங்கிப்போட்டாச்சு எப்படியாவது வீட்டை கட்டிப்புட்டோம்முன்னா வயசான காலத்துல சொந்த வூட்ல ஹாய்யா காலை நீட்டிப்போட்டுக்கிட்டு உக்கார்ந்து தின்னலாம் - இதுதான் எந்தவொரு மனிதனுக்கும் கனவு ஆசை இலட்சியம் இன்னபிற எதிர்காலம் சம்பந்தப்பட்ட எல்லா வார்த்தைகளுமே...!

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இடம் வாங்குவது அத்தனை பெரிய கஷ்டமான காரியமாக யாருக்கும் தோன்றவில்லை ஆனால் வீடு கட்டுவது என்பது பெரிய மலைப்புக்குரிய விசயமாக இருந்தது உண்மை! வீடு கட்ட லோன் வாங்க அலைவதும், லோன் கிடைப்பது என்பதும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள்! இப்பொழுது நிலைமை தலைகீழ்!

லோன் கொடுக்க போட்டிப்போட்டுக்கொண்டு முன்வரும் கடன் நிறுவனங்கள் ஏராளம் ஆனால் நிலத்தின் மதிப்பு துரத்திக்கொண்டு போனாலும் பிடிக்க இயலாத உச்சிக்கு சென்று கொண்டே இருக்கிறது - நின்றபாடில்லை! சரி இந்த கடன் கவலை நிலம் இதெல்லாம் எப்படியோ சமாளிச்சு வந்தாச்சு அடுத்த கட்டம் என்ன வீடு கட்டி குடி போக ஆயத்தமாக வேண்டியதுதான்! பாதி உழைப்பில் நிலம் வாங்கினால் மீதி உழைப்பில் வீடு கட்ட முடியும் என்ற சூழ்நிலைதான் தற்போது! அதற்காக வாடகை வீட்டிலேயே குடியிருந்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்தால் அதுவும் மிக சுலபமான காரியமன்று!

முன்பெல்லாம் வாடகை வீட்டில் நீண்ட வருடங்கள் குடியிருந்து, வீட்டு ஓனரின் குடும்ப நண்பராக மாறியிருந்த காலமெல்லாம் போயே போய்விட்டது! வாடகை குடியிருப்பில் இப்பொழுதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே காலம் தள்ளமுடியும் என்ற நிலைதான்!

சரி டைட்டில் ப்ளான்னு இருக்கு ஆனா என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன்னு நீங்க நினைச்சா - உண்மைதான்! சம்பந்தமில்லாம இருந்தாலும் வீடு கட்டப்போறதுக்குன்னு ஒவ்வொரு மனிதனும் முதலில் ப்ளான் பண்ணுவது கடன் & நிலம் பெறுதல் அதை சரியாக ப்ளான் செய்து விட்டால் அதற்கு பிறகு வரும் நிகழ்வுகள் கஷ்டப்படுத்தாமல் இருக்ககூடும்! குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்று வெகு தொலைவுக்கு சென்று விடாமல்,அதே சமயத்தில் நிலம் வாங்கி வீடு கட்டும் பணத்தின் அளவுக்கு நிலம் மட்டுமே வாங்கிட முடிவு எடுக்காமல் சற்று மார்கெட் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதும் மிக அவசியம்! நல்லா கவனிங்க!

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

good post, but now in chennai the prices have been coming down, so be careful while investing on lands/apartments

said...

பாஸ் நல்லா கவனிச்சு தங்கச்சிக்கு ஒரு வீடு கட்டி குடுங்க பாஸ் :))

said...

//நிலத்தின் மதிப்பு துரத்திக்கொண்டு போனாலும் பிடிக்க இயலாத உச்சிக்கு சென்று கொண்டே இருக்கிறது//

உண்மைதான் இன்னும் வருகிற நாட்களில் நிலங்களே கிடைக்காத சூழ்நிலை உண்டானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

//முன்பெல்லாம் வாடகை வீட்டில் நீண்ட வருடங்கள் குடியிருந்து, வீட்டு ஓனரின் குடும்ப நண்பராக மாறியிருந்த காலமெல்லாம் போயே போய்விட்டது!//

சரிதான்.

//வீடு கட்டும் பணத்தின் அளவுக்கு நிலம் மட்டுமே வாங்கிட முடிவு எடுக்காமல் சற்று மார்கெட் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதும் மிக அவசியம்! நல்லா கவனிங்க!//

தேவையான சிந்தனைப்பகிர்வு...

said...

பாஸ் என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.

அப்புறம் அந்த கிணறு ப்ளான் :)

said...

Plan 1, plan 2, plan 3,.... Ippadi continoue pannunga boss.

said...

ம்ம்ம்

said...

Amithu amma... innum motta madiyil kinaru velai mudiyalaya?. .. ;-)))

said...

பாஸ் என்னோட பல வருட கனவு பாஸ் சென்னையில வீடு வாங்கனும்னு.... ஆனா இப்ப இருக்குற நிலைமையில சென்னையில முடியுமான்னு தெரியல.

said...

பொறுப்பாக இருப்பதற்கு பாராட்டுக்கள் ! சீக்கிரமே அழகான ஒரு வீடு கட்டவும் வாழ்த்துகள் !

said...

தொரை பொசுக்குன்னு பொறுப்பாக என்ன காரணம்? மலையாள ஃபிகரெல்லாம் உங்களை போட்டி போட்டுகிட்டு.. பண்ணிட்டாங்களா? அட ரிஜக்ட் பண்ணிட்டாங்களா?

said...

வேறொன்னுமில்ல உங்களை தான் கொஞ்சம் கவனிக்கனும் பாஸ்!

said...

நல்ல பதிவு. சரி, உங்கள் ப்ளான் எந்த லெவலில்? சீக்கிரம் கிரகப் பிரவேசத்துக்கு அழைப்பு வைக்க, வாழ்த்துக்கள்!

said...

//குப்பன்.யாஹூ said...

good post, but now in chennai the prices have been coming down, so be careful while investing on lands/apartments//

நன்றி பாஸ்!

said...

//G3 said...

பாஸ் நல்லா கவனிச்சு தங்கச்சிக்கு ஒரு வீடு கட்டி குடுங்க பாஸ் :))//


ரைட்டு !

said...

//க.பாலாஜி said...

//நிலத்தின் மதிப்பு துரத்திக்கொண்டு போனாலும் பிடிக்க இயலாத உச்சிக்கு சென்று கொண்டே இருக்கிறது//

உண்மைதான் இன்னும் வருகிற நாட்களில் நிலங்களே கிடைக்காத சூழ்நிலை உண்டானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

//முன்பெல்லாம் வாடகை வீட்டில் நீண்ட வருடங்கள் குடியிருந்து, வீட்டு ஓனரின் குடும்ப நண்பராக மாறியிருந்த காலமெல்லாம் போயே போய்விட்டது!//

சரிதான்.

//வீடு கட்டும் பணத்தின் அளவுக்கு நிலம் மட்டுமே வாங்கிட முடிவு எடுக்காமல் சற்று மார்கெட் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதும் மிக அவசியம்! நல்லா கவனிங்க!//

தேவையான சிந்தனைப்பகிர்வு...//


நன்றி பாலாஜி!

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ் என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.

அப்புறம் அந்த கிணறு ப்ளான் :)//

பாஸ் கண்டிப்பா கிணறு தோண்டி கொடுக்கறதுதான் சென்னையில என்னோட முதல் புராஜெக்க்ட்டு ஆனா 1 கிரவுண்ட் ப்ளோர் எனக்கு கொடுத்துடணும் ஃபீஸ்! :)))

said...

//தமிழ் பிரியன் said...

Plan 1, plan 2, plan 3,.... Ippadi continoue pannunga boss.///

நல்லாத்தான்க்கீது ! :))

said...

// கானா பிரபா said...

ம்ம்ம்//


ம்! விவசாயத்துல பிசியா நடக்கட்டும் நடக்கட்டும்!

said...

//தமிழ் பிரியன் said...

Amithu amma... innum motta madiyil kinaru velai mudiyalaya?. .. ;-)))//

யோவ் நானே எது எதோ சொல்லி சவுண்ட் கம்மி பண்ணி வைச்சிருக்கேன் ஏனய்யா திரும்ப ஆரம்பிக்கிறீரு? :)

said...

//☀நான் ஆதவன்☀ said...

பாஸ் என்னோட பல வருட கனவு பாஸ் சென்னையில வீடு வாங்கனும்னு.... ஆனா இப்ப இருக்குற நிலைமையில சென்னையில முடியுமான்னு தெரியல.//

பாஸ் கவலைப்படாதீங்க கண்டிப்பா முடியும்!

said...

//enRenRum-anbudan.BALA said...

பொறுப்பாக இருப்பதற்கு பாராட்டுக்கள் ! சீக்கிரமே அழகான ஒரு வீடு கட்டவும் வாழ்த்துகள் !///

நன்றி சாரே! :)

said...

// ILA(@)இளா said...

தொரை பொசுக்குன்னு பொறுப்பாக என்ன காரணம்? மலையாள ஃபிகரெல்லாம் உங்களை போட்டி போட்டுகிட்டு.. பண்ணிட்டாங்களா? அட ரிஜக்ட் பண்ணிட்டாங்களா?//

அடி ஆத்தி எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா அவ்வ்வ்வ்வ்!!!

said...

//kappi said...

வேறொன்னுமில்ல உங்களை தான் கொஞ்சம் கவனிக்கனும் பாஸ்!/

ஹைய்ய்ய் பாஸ் வாங்க வாங்க ! :)

said...
This comment has been removed by the author.
said...

// ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. சரி, உங்கள் ப்ளான் எந்த லெவலில்? சீக்கிரம் கிரகப் பிரவேசத்துக்கு அழைப்பு வைக்க, வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!

said...

G3 said...

பாஸ் நல்லா கவனிச்சு தங்கச்சிக்கு ஒரு வீடு கட்டி குடுங்க பாஸ் :))

தம்பி ஒருத்தன் இங்க வாடகை வீட்டுல அல்லாடிக்கிட்டிருக்கேன்றதையும் மறந்துடாதீங்க பாஸு....ஆமா சொல்லிபுட்டேன்.

said...

"ப்ளான்”
நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.
எல்லோருக்கும் ஒரு கனவு வீடு இருக்கும்.

ஆயில்யன் உங்கள் கனவு இல்லம்
நிஜமாகி அங்கு குடியேற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

said...

உங்க
'ப்ளான்'
சூப்பர்.

Anonymous said...

நல்ல திண்ணை வீடா கட்டுங்க. திண்ணைல உக்காந்து அஞ்சு நிமிஷம் பேசிட்டு போறோம்.

said...

வீடு கட்டறீங்க.. பாலம் கட்டறீங்க..ம்ம்...என்னமோ நடக்குது.. :-)

said...

//ஆனால் நிலத்தின் மதிப்பு துரத்திக்கொண்டு போனாலும் பிடிக்க இயலாத உச்சிக்கு சென்று கொண்டே இருக்கிறது - நின்றபாடில்லை//

இதுக்கெல்லாம் பயந்துதான் பாஸ் நாங்கல்லாம் ஃபேஸ்புக்ல வீடு, நிலம்ன்னு வாங்கி செட்டில் ஆயிட்டோம்;‍))