மனு நீதி நாள்..?

ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.


எத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.

இரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.

இந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.

பணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும்ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.

இதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.


இதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.


நுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.

ஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்?

நன்றி - தினமணி

மேலும் வாசிக்க...

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அது வெறும் மனு நாள்தான்... நீதியெல்லாம் ரொம்ப வருஷ்ம் முன்னாடியே ஸ்டாக் தீ்ந்து போச்சு !!

said...

உண்மை ஆயில்ஸ் - மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது - நிரைவேற்றுவதற்கு அரசு இயந்திரங்களால் முடியவில்லை. பல காரணங்கள் - ம்ம்ம் - காலம் தான் சரி செய்ய வேண்டும்

said...

:-)

said...

hmmm...

said...

Mahesh said...

அது வெறும் மனு நாள்தான்... நீதியெல்லாம் ரொம்ப வருஷ்ம் முன்னாடியே ஸ்டாக் தீ்ந்து போச்சு !!

சூப்பர்ர்ர்...
இதுக்கு மேல சொல்ல ஒன்னியுமில்ல...

said...

மனு நீதி நாள்..?

இன்னுமா இந்த உலகம் இதையெல்லாம் நம்பிகிட்டு இருக்கு !!!!!!!!!

அதெல்லாம் பசு மாடு மணி அடிச்ச காலத்தோடயே போய்டுச்சு பாஸ்.

said...

//இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள்.//

வருத்தம்தான் மிஞ்சுகிறது.

said...

எங்க பாஸ் நான் போட்ட கமெண்ட்ட காணோம் ?

said...

//எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். //

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

//எப்படித் தீர்வு கிட்டும்?

நீங்க அரசியல்ல குதிச்சீங்கன்னா கிட்டும்.....

said...

unga arivuku oru ellaiyae illa bossu

said...

oru pakkam vidama news papera epdi bossu padikeereenga

said...

எப்படித் தீர்வு கிட்டும்?

.////////////////
remba kushtam

said...

///மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது - நிரைவேற்றுவதற்கு அரசு இயந்திரங்களால் முடியவில்லை. பல காரணங்கள் - ம்ம்ம் - காலம் தான் சரி செய்ய வேண்டும்///
சீனா அய்யா... காலம் எல்லாம் சரி செய்யாது. நீங்கதான் சரி செய்யணும். தேர்தல் என்று ஒன்றுவரும்போது நீங்கள் (சாதாரண குடிமக்கள்) சரியா செயற்பட்டா, பிரச்சினைகளுக்கு எதிராக சரியா குரல் கொடுத்தா, ஊருக்கு ஒரு traffic ராமசாமி இருந்தா.. எல்லாம் சரிசெய்யப்படும்