கங்கையின் கரைகளில் சுற்றி அலைந்த நாட்களில் ஒரு வார்த்தை கூட பேசாமல்,பாறையின் மீது அமர்ந்தப்படியே ஆகாசத்தை பார்த்தபடியிருக்கும் துறவிகளை நான் கண்டிருக்கிறேன் பறந்து செல்லும் பறவையை பார்ப்பது போல மேகங்கள் கடந்துபோவதை துறவிகள் ஆனந்தத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் சில நேரங்களில் தங்களது பாறைகளிலிருந்து எழுந்து நின்று எதையோ கை கொட்டி ரசிப்பார்கள்.ஆனால் என்ன காண்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது!
- எஸ்.ராமகிருஷ்ணன்
மேகமூட்டம் சூழ்ந்த நீல நிற வானத்தினை அமர்ந்தப்படியோ அல்லது படுத்த நிலையில் பார்ப்பது என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு நிகழ்வுதான்!
வெண்மேககூட்டங்கள் அலைந்து, திரியாமல் செல்லும் அழகும் ஒரு வேறு வெண்மேகங்களுக்கு இடையில் தோன்றும் வெற்றிடத்து நீலமும்,வெண்மேகத்தில் ஓரங்களில் வெளிப்படும் உருவங்கள் குறித்தான உவமைகளும் எண்ணங்களும் எப்பொழுதுமே சுவாரஸ்யமானதாகவே அமைந்திருக்கின்றது! மொட்டை மாடியில் கான்கீரிட் உறுத்தும் வெற்று தரையில் படுத்தபடியே பல மணித்துளிகள் வானத்தை நோக்கி நோட்டம்மிட்டப்படியே அமர்ந்திருக்கும் அந்த தனிமை!
எப்பொழுதும் எதேனும் பயணத்திற்கு ஆயத்தமாகும் நாளில் முன் தினத்தில் இது போன்ற தனிமையினை தேடுவது பல வருடங்களாக பழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்! இங்கு இன்று பார்க்கும் இதே வான மேககூட்டங்களை நாளை இன்னுமொரு இடத்திலிருந்து பார்க்கப்போகின்றோம் என்ற எண்ணம் கட்டாயம் இன்பத்தினையும்/துன்பத்தினையும் மாறி மாறி தந்து கொண்டேதான் இருக்கின்றன!
வானத்தினை பார்த்தப்படியே -பற்றியப்படியே- தற்காலிகமாய் அனுபவித்த இனிய நாட்களை மனதிற்குள் தொகுத்துக்கொள்வது அந்த நேரத்தின் பணியாக இருக்கும்! தொகுத்த நினைவுகளை பிறிதொரு இடத்தில் பிறிதொரு நேரத்தில் பிரித்து பார்த்து மகிழ்ந்திருக்கும் அதே மனம்! ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகள்தான் தொடர்கின்றன!
மேகமூட்டங்களை ரசிப்பது மட்டுமல்ல,விவசாய நிலங்களின் பச்சை நிறம் பரவலாக பார்வையில் படும்படியாக வரப்புக்களில் அமர்ந்தபடியும்,ஆற்றின் கொள்ளளவுக்கு சற்றே குறைவாக செல்லும் நீரேட்டத்தினை நின்றபடியோ அல்லது அமர்ந்த நிலையிலோ உன்னிப்பாக கவனிப்பதுவும் என எல்லாமே வாழ்க்கையின் பயணத்தில் நம்மை வழி மறித்து செல்லும் இனிய அனுபவங்களே - ரசித்திருங்கள் - சாதாரணமாய் வாழ்வதை விட ரசித்து வாழ்வதிலேயே வாழ்க்கையின் அத்தனை அடிப்படைகளும் நிறைவு பெறுகின்றன !

21 பேர் கமெண்டிட்டாங்க:
மேகங்களை விட, நிர்மலமான இரவு வானம் என்னை அதிகம் கவர்ந்தது. இரவில் நிலவற்ற வானம், மேகமற்ற நட்சத்திரங்கள் தெறிக்கும் வானம் இருக்கிறதே... கடவுளின் அதிசயம் பாஸ் அது. இதை பார்க்கும் போது பக்கத்தில் தொந்தரவு செய்வது போல எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக விளக்குகள். கரிய இரவில் முதலில் ஒன்றிரண்டாகத் தெரியும் விண்மீன்கள்... நேரம் செல்லச் செல்ல பார்வையின் ஆதிக்கம் அதிகரிக்க மெல்ல மெல்ல நாணம் கொண்ட பெண்ணைப் போல எட்டிப் பார்க்கும். பார்வையை சற்று விலக்கிவிட்டு பார்த்தால் மறுபடி தெரியாது. மறுபடி கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். எங்கெங்கு காணினும் விண்மீன்கள்.. வாணத்தினூடாக பறந்து செல்லும் அனுபவம்... ஹ்ம்ம்ம்ம்ம்ம் பாஸ் வெறுப்பேத்தாதீங்க பாஸ்... இப்ப எல்லாம் வீட்டுக்கு வரதுக்கே மணி 11 - 12 ஆகிடறது.
9-ம் தேதி ப்ளான் போட்டு, 10-ம் தேதி மொட்டை மாடியில் படுத்துகிட்டு வெண் மேகங்களை ராசி பண்ணிகிட்டு இருக்கீங்க போல... நெம்ப ஸ்பீடா இருக்கீங்க... :)
என்ன பாஸ் , இப்படி 24 மணி நேரத்துல ரெண்டு பதிவு போட்டு பட்டைய கிளப்புறீங்க
Rasiganayya neer... :) but enakku iravu nera vaanam thaan pidikkum.
பாஸ் நல்ல நடை. கலக்குறீங்க பாஸ்
உருப்படியான ஒரே பதிவு. கீப் இட் அப்
ராம்கி
// J. Ramki said...
உருப்படியான ஒரே பதிவு. கீப் இட் அப்
ராம்கி//
அண்ணாத்த.... உருப்படியாய் இந்த ஒரு பதிவைத்தான் படிச்சிருக்கீங்கன்னு நினைக்கறேன்.. :-)
உங்கள் பின்னூட்டத்திற்கு கடும் கண்டனங்களை ஆயில்ஸ் பேரவை சார்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்!
ம்ம்..பகலோ, இரவோ, வானத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் எப்பேர்ப்பட்ட மனக்கவலையும் பறந்தோடிவிடும்..இரனையான பதிவு பாஸ்
//நிலங்களின் பச்சை நிறம் பரவலாக பார்வையில் படும்படியாக வரப்புக்களில் அமர்ந்தபடியும்,ஆற்றின் கொள்ளளவுக்கு சற்றே குறைவாக செல்லும் நீரேட்டத்தினை நின்றபடியோ அல்லது அமர்ந்த நிலையிலோ உன்னிப்பாக கவனிப்பதுவும் என //
உங்க ரசனைக்கு அளவேயில்லையா பாஸ்.. மிக அருமை
//மேகமூட்டங்களை....வாழ்க்கையின் பயணத்தில் நம்மை வழி மறித்து செல்லும் இனிய அனுபவங்களே - ரசித்திருங்கள்.//
ரசித்தோம்.
மேகங்களைச் தூது போகச் செய்திருக்கிறார்கள் கவிஞர்கள்.
ஆனால் உண்மையில் அண்ணாந்து பார்த்தபடி ஊரைச் சிந்தித்தால்,என் உறவுகளை கண்டால் சுகம் விசாரித்து வா என்று சொல்லவே தோன்றுகிறது.
அடப்போங்கப்பா....நான் எழுதணும்னு நினைச்சி ட்ராஃப்ட் பண்ணி வைத்த பதிவு.....ம்ம்ம்...முந்திக்கிட்டீஙக!பூங்கொத்து!
ஆயில்யன்,
எனக்கும் மேகக்கூட்டங்களைப் பார்க்க
பிடிக்கும்.அது ஒவ்வொரு தோற்றங்களை
கொடுத்து நம்க்கு இன்பங்களை அளிக்கும்.
//சாதாரணமாய் வாழ்வதை விட ரசித்து
வாழ்வதிலேயே வாழ்க்கையின் அத்தனை
அடிப்படைகளும் நிறைவு பெறுகின்றன//
ஆம் ஆயில்யன் , உண்மை.
நல்ல பதிவு தல...
இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே அழகு தான் :))
/சாதாரணமாய் வாழ்வதை விட ரசித்து வாழ்வதிலேயே வாழ்க்கையின் அத்தனை அடிப்படைகளும் நிறைவு பெறுகின்றன !/
ரிப்பீட்டு!
வெண்மேகக் கூட்டங்களை ரசிப்பது எனக்கும் பிடித்த ஒன்று. அதேபோல நட்சத்திரங்கள் மின்னும் இரவு வானத்தையும்.
வெண்மேககூட்டங்கள் அலைந்து, திரியாமல் செல்லும் அழகும் ஒரு வேறு வெண்மேகங்களுக்கு இடையில் தோன்றும் வெற்றிடத்து நீலமும்,வெண்மேகத்தில் ஓரங்களில் வெளிப்படும் உருவங்கள் குறித்தான உவமைகளும் எண்ணங்களும் எப்பொழுதுமே சுவாரஸ்யமானதாகவே அமைந்திருக்கின்றது! //
உண்மைதான். அருமையான இடுகை.
கண்டிப்பாக.
ரசித்திருப்போம்.
எனக்கும் இரவின் கரிய இருள் தான் பிடிக்கும். உங்களுடைய நடை நன்றாக இருக்கிறது ஆயிவான்...
நல்ல ரசனை..
போன பதிவு ப்ளான் தொடர்பதிவா?
நல்லாயிருக்கு,ரசித்தேன்....
Post a Comment