மீன் மாத்திரை

1985களின் மத்தியில் பள்ளிகூட சத்துணவு சாதத்தை ஒரு முக்கு முக்கிட்டு ரொம்ப டைட்டாக உக்கார்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலைப்பொழுதில், டேய் பசங்களே எல்லாரும் வாங்கடா லைனா? ஒண்ணாம் டீச்சர் கூப்பிடும் சத்தம் கேட்டு எந்திரிச்சு சாரி சுதாரிச்சு அக்கம்பக்கம் திரும்பி பார்த்தா அம்புட்டு பயமக்களும் என்னைய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டானுவோ! அதுக்கும் காரணம் இருக்கு!

எப்போதுமே ஒண்ணாம் டீச்சர் எங்களுக்கு உதவும் கரம் மாதிரிதான்!கடுப்பேத்திக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனில் கடவுளே டீச்சர் கூப்பிடணும் கிரவுண்டுக்கு அப்படின்னுத்தான் வேண்டிக்குவோம்!

அப்படி ஒரு ஹெல்பிங்க் ஹாண்ட் டீச்சர்! எப்போதுமே, கிரவுண்டுக்கு வாங்கடா போட்டி வைக்கப்போறேம் அல்லது எதாவது விசேஷமான செய்தி அப்படியில்லாங்காட்டி முனிசிபால்டியிலிருந்து வந்திருக்கும் மீன் மாத்திரை டிஸ்டிரிப்பியூசன்!

மீன் மாத்திரை பேரைக்கேட்டாலே யாருக்குமே எஸ்கேப்பாகணும்னு எண்ணம் வராது! ஏன்னா அப்படிப்பட்டதொரு மாத்திரை மத்த மாத்திரைங்களைமாதிரி கசக்குறதோ அல்லாங்காட்டி கல்லுமாதிரி இருக்கறதோ கிடையாது!

இது குருவி ஸ்டைல்ல மொழ, மொழன்னு யம்மா யம்மா வாகத்தான் இருக்கும்! எதோ உடம்புக்கு நல்லதுன்னு கொடுப்பாங்களாம்! அது சரி நமக்கு ஃப்ரியா கிடைச்சாத்தான் நோ கொஸ்டீன் ரைசிங் ஆச்சே!
பயலுக கையில கொடுத்த திங்காம தூக்கி போட்டுடுவானுவேன்னு நினைச்சு எல்லாரையும் லைன் கட்டி கையையும் கட்டி வாயை மட்டும் ”ஆ” தொறக்க சொல்லி மீன் மாத்திரைய போடுவாங்க! நாங்களும் அந்த நிமிசம் கரெக்ட்டா வாயால காட்ச் பிடிச்சு மறுநிமிசம் இடம் மாறி கைக்கு மாத்திடுவோம்!
அதுக்குப்பப்புறம் என்ன நடக்கும் சண்டைதான்!

ஒருத்தனுக்கொருத்தன் மாறி மாறி மாத்திரையை பாக்குறேன் சொல்லி பொறமை புடிச்சவனாட்டம் உடைச்சுப்புட்டு ஓட கல்லெறி கலகங்கள் துவங்கும்!

சரி நீங்க கல் எடுக்கறதுக்கு முன்னாடியே இந்த கதையை அப்ரூட்டா கட் பண்ணிக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்!

நம்ம சா(ப்)ட்வேர் வேலையில் இருக்கறவங்களுக்கு,அல்லது இதே போன்றதொரு பணியிடங்களில் பணி ஆற்றுபவர்களுக்கு அதிக நோய் தொந்தரவுகள் வர்றதுக்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்!

வைட்டமின் டி இது அதிகம் வெய்யில்ல அடங்கியிருக்காம் இந்த டி நம்ம உடம்புல இருக்குற கால்சிட்டிரால்ங்கற ஹார்மோன் அனுதினமும் சாப்பிடற ஐட்டமாம்!

இந்த சாப்பாடு குறையறப்ப கால்சிட்டிராலோட வேலையும் குறையுது இதனால மத்த ஆளுங்க கெட்ட வேலை செய்யறதுக்காக நம்ம உடம்புல பூந்து விளையாட ஆரம்பிக்க நாம உடம்பு படாத பாடு படுது! கால்சிட்டிரால் ஒரு பாதுகாப்பு படை மாதிரி எந்த எதிரிகளையும் சீக்கிரத்தில அண்டவிடாது!அதுக்கு நாம சரியா சோறுபோடலைன்னா நம்ம கதி அதோகதியாகுது!

வெளியில அலைஞ்சு திரிஞ்சு வேலை பாக்குறவங்களவிட இப்ப ஏசி ரூம்ல இருந்துக்கிட்ட்டு வேலைபாக்குறவங்க எண்ணிக்கைத்தான் அதிகமாயிக்கிட்டிருக்குதாம் அதே நேரத்தில இந்த டி பிரச்சனையினால வியாதிகளும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிக்கிட்டே வந்து சேருதாம்!

ஸோ மக்களே அப்பப்ப வெளியில வெய்யில்லயும் கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சுக்கோங்க! இல்லாங்காட்டி அதை ஈக்குவல் பண்றதுக்கு நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பியுங்க! ஒ.கேவா!

எல்லாம் உடம்புக்கு நல்லது :-)

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மீ த பர்ஸ்ட்டு :))

said...

//மீ த பர்ஸ்ட்டு :))//

ரிப்பீட்டு :))

said...

மீ த பர்ஸ்ட்டு ன்னு ரெண்டு தடவை சென்ஷி சொன்ன்னா = நான் மீ த செகண்டு ன்னு எத்தனி தபா சொல்ல்ல்லொணும்

said...

நான் மீன் மாத்திரை வாங்குறதோட சரி :) காலம் முடிஞ்சதும், கடமையா தூக்கி எறிஞ்சுடுவேன்! இனிமே ஒழுங்கா சாப்பிடனும்...

said...

மீன் மாத்திரை கண்ணுக்கும் நல்லதுன்னு சொல்வாங்க.

நல்லதை நல்ல நேரத்தில் ஞாபகபடுத்திய ஆயிலயனுக்கு சபாஷ்.

said...

மீன் மாத்திரைக்கு பதில் மீன் சாப்பிட்டால் பலன் உண்டா வைத்தியரைய்யா?

said...

thala athu enna thenkodula procket pottu red collerla numbeu varutha athu enna

my id symeeran@gmail.com

said...

//ஒலிபெருக்கி said...
thala athu enna thenkodula procket pottu red collerla numbeu varutha athu enna
//

?????


புரியலயே என்னான்னு?

said...

//தஞ்சாவூரான் said... //


ஊருக்கு வந்தாச்சா?


எப்படி இருக்கு ஊரு?

said...

//குசும்பன் said...
மீன் மாத்திரைக்கு பதில் மீன் சாப்பிட்டால் பலன் உண்டா வைத்தியரைய்யா?
//
தெரியலயேப்பா?


எனக்கு ஒண்ணும் சொல்ல தெரியலயேப்பாஆஆஆ???

said...

//புதுகைத் தென்றல் said...
மீன் மாத்திரை கண்ணுக்கும் நல்லதுன்னு சொல்வாங்க.

நல்லதை நல்ல நேரத்தில் ஞாபகபடுத்திய ஆயிலயனுக்கு சபாஷ்.
//

:)

said...

//cheena (சீனா) said...
மீ த பர்ஸ்ட்டு ன்னு ரெண்டு தடவை சென்ஷி சொன்ன்னா = நான் மீ த செகண்டு ன்னு எத்தனி தபா சொல்ல்ல்லொணும்
///

:))

ஒரு தபா போதும்:)

said...

//சென்ஷி said...
//மீ த பர்ஸ்ட்டு :))//

ரிப்பீட்டு :))
/

இது ரீப்பிட்டு இல்ல அப்பீட்டு :-))

said...

கண்ணுக்கு நல்லதுன்னு இதை பாட்டில் பாட்டிலா முழுங்கி இருக்கோம் நானும் என் தம்பியும்.. ஆனாலும் என்ன செய்ய ,சாப்பாடும் சரியா சாப்பிடனும் இல்ல.. போட்டிருக்கோம் இப்ப கண்ணாடி.. :((

இப்ப பொண்ணுக்கும் டாக்டர் அதே மாத்திரை சொல்றார் ... :)

said...

சின்ன வயதில் நாங்களும்(நாறுகிறதோ இல்லையோ, அந்தப் பெயருக்காகவே) மூக்கைப் பிடித்துக் கொண்டு மீன் எண்ணெய் மாத்திரைகளை முழுங்கி இருக்கிறோம்.

said...

நல்லதொரு பதிவு:))

மீன் எண்ணேய் மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரத்தில் ஏப்பம் விட்டால்........மீன் எண்ணெய் வாசம் வரும, அதுக்காகவே அதை சாப்பிடுவதில்லை:))

இனிமேல் சாப்பிடனும்!!