அஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே


காந்தியவாதியும் ராஜ்யசபா உறுப்பினருமான நிர்மலா தேஷ்பாண்டே அவர்கள் இன்று அதிகாலை உடல்நலகுறைவால்,அவர்தம் 79வது வயதில் இயற்கை எய்தினார்!

இல்லற வாழ்வில் இணையாமல், தம் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகளின் கொள்கைகளினை பின்பற்றி சமூக சேவைகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டதொரு ஆத்மா இன்று நிரந்தர அமைதி வேண்டிச்சென்றுவிட்டது!

டெல்லியிலுள்ள காந்தி சமாதிக்கு ஒவ்வொரு முறையும் உலக தலைவர்களின் வருகையின் போதும், உடனிருந்து காந்திய சிந்தனைகளை பற்றி எடுத்துரைத்தவர்!

காந்தியின் சீடரான வினோபாவேவின், அதிக நிலம் வைத்திருப்பவர்கள் நிலமற்ற ஏழைகளுக்காக ஒரு பங்கு நிலத்தை தானமாகத் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் உருவாக்கிய பூமிதான் இயக்கத்தில் இணைந்து,.ஊர் ஊராக போய் நிலப்பிரபுக்களைச் சந்தித்து நிலங்களைத் தானமாகப் பெற்று அதே ஊரில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு உழைத்து பாடுபடத் தந்த வினோபாவேவுடன் உடன் சுமார் 40000 கி.மீக்கள் பயணித்தவர் நிர்மலா தேஷ்பாண்டே!

உலக அளவில் காந்திய சிந்தனைகள் முக்கியத்துவம் பெற்று உலகநாடுகள் சபை அக்டோபர் இரண்டினை உலகின் வன்முறையற்ற நாளாக கடைப்பிடித்தாலும் கூட இன்னும் நம் இந்திய திருநாட்டில் ஏனோ காந்திய சிந்தனைகளின் மீது ஈர்ப்பு இல்லை என்ற நிர்மலா தேஷ்பாண்டேவின் மனக்குறையும் தீர்க்கும் நாளையும்...

இரண்டாம் உலக போரினை அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து பெற்ற வெற்றியினை தொடர்ந்து அந்த நாடுகள் இணைந்து அமைத்தஐரோப்பிய யூனியனை போன்று தெற்கு ஆசியாவிலும், அக்கம்பக்கத்து நாடுகளில் அமைதி நிலவ, பாதுகாப்பான சமுதாயமாக இளைய சமுதாயம் வளர நம் அண்டை நாடுகள் இணைந்த தெற்கு ஆசிய யூனியனை உருவாக்கவேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவுபெறும் நாளையும், எதிர்நோக்கி....!.

0 பேர் கமெண்டிட்டாங்க: