காற்றாய்த்தான் போனது - இரவல் கவிதைகள்

பருத்தி பூ
பரவிக்கிடக்கும்
கரிசல் காட்டில்
கிழக்குச் சூரியனின்
பிறப்பின் ரகசியம்...
தங்க வரிகளாய்
புழுதி பூமியில்
வெளிச்ச வெப்பங்கள்..

பறவைகளின்
பல மொழிகள்...
செவிகளுக்குள்
செல்லமாய்
முத்தங்கள்...
பாதங்களின் உரசலில்
பாட்டிசைக்கும்
கொலுசுக்கொஞ்சல்கள்...

மாடுகளின் கழுத்தசைவு
மணி யோசனையின் மது ஒலிகள்...

கிராமத்து பதுமைகளின்
இடுப்பு குடத்தை
வளைத்திருக்கும்
வளையல் கைககள்...
ஒரவிழி
மவுனப்பார்வைகள்
கிண்டல் சிரிப்பில்
வெட்க வெளிச்சங்கள்...
விழிப்பார்வையில்
உரசும் உறவுகள்...

நடைபயிலும் பெண்கள் இடுப்பு சிவப்பில் சிதறி
மினு,மினுக்கும் தண்ணீர் துளிகள்...
கடந்துபோன
காதல் தினசரிகள்...
பளிச்சிடும் பல் வரிசைக்குள்
பரவிக்கிடக்கும்
வார்த்தை ஜாலங்கள்...

நகமும் சதையுமாய்
நீலவானமும் நிலவுமாய்
மூச்சும் காற்றுமாய்
நேசத்தின் உறவுகளோடு
காதல் முகவரி எழுதிய
காலங்கள்...

ஆம்... காற்றாய்த்தான்
கடந்துப்போனது!

இதோ - இந்த
கிராமத்து பதுமைகளில்
என்னவளும் ஒருத்தி
பிறை போன்ற நெற்றியில்
புதிதாய் குங்குமம்
விரல்களில் - புது
விலாசம் பேசும்
மெட்டிகள்
வெப்ப மூச்சில்
பயணிக்கும்
மார்பின் உரசலில்
புதிதாய் - ஒரு
மஞ்சள் கயிறு

காதல் தேசம்
பொய்யானது...
'துரோகம்' கிராமத்துக்கும்
சொந்தமானதுதான்

தினமலர் -வாரமலரிலிருந்து

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல கவிதை. கடைசி ரெண்டு பத்தியை விட்டுட்டீங்க! படத்தைக் 'கிளிக்'கிட்டு படித்துக் கொண்டேன். அதையும் சேர்த்துப் போட்டால் நல்லாயிருக்கும். அப்பதான் கவிதையின் அர்த்தமும் முழுமை பெறும்.

said...

நல்லா இருக்குங்க இரவல் கவிதை.

said...

கவிதை இரவல் என்றாலும் காதலும் பிரிவின் வலியும் நிஜந்தானே.

said...

கவிதை நல்லாயிருக்குதுங்க :)