உள்ளங்கையில் உலகம் அதில் உங்களுக்கு உபயோகமாய்...! - பாகம் ஒண்ணு

எல்லையில்லா உலகம் இண்டர் நெட் உலகம்!
வலையில்லா வாழ்க்கையாக மாறியிருக்கும் இன்றைய தினங்கள்!

தினமும் எவ்வளவோ இணையதளங்களை கடந்து செல்கிறோம் பல பிடித்திருக்கின்றன சில மனதை கவர்கின்றன. பார்த்து படித்து சென்றாலும் கூட நமக்கு அவ்வளவாக அப்டேட்களாக இருப்பதில்லை!

எழுதுவது கேட்பதனை விட படிப்பது மிக வசதியானது மட்டுமல்ல நிறைய விஷயங்களை தெரிந்துக்கொள்ளவும் முடிகிறது!நிறைய விஷயங்களை புரிந்துக்கொள்ளவும் முடிகிறது. தினத்தில் பார்க்கும் விஷயங்கள் பார்த்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே நிற்கிறது மனதில்...!

தாவிச்செல்லும் மனதில் தங்கும் விஷயங்கள்தான் தங்கமாக மாறி உங்களை ஜொலிக்கவைக்கும் இது உண்மைதானே....?

வலை உலகில் வாழ்பவர்களுக்கு இங்கு சில யோசனைகளாய்.....



  • நிறைய படியுங்கள்! - நிறைய வார்த்தை பிரயோகங்கள் உங்களுக்கு புதிதாய் கிடைக்கும் வார்த்தைகளும் கூட.!

  • படித்ததை நினைத்துப்பாருங்கள் - உங்களுக்குள்ளும் சில பல சிந்தனைகள் - இப்படியிருந்தால் என்ன? அப்படியிருந்தால் என்ன? என்று - தோன்றக்கூடும்!

  • படித்ததை விமர்சனம் செய்யுங்கள் - நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி - உங்கள் பார்வை விரிவடையக்கூடும்!

  • உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை தாராளமாக தவிர்க்கலாம் (உதாரணமாய் நான் சொல்ல வந்த விஷயத்தை சில பல தூரங்கள் வார்த்தைகளை தெளித்து உங்களை கூட்டி சென்றாலும் கூட நீங்கள் சரியான இடத்துக்கு வந்ததும் சென்ற கண்ட கண்ட இடங்களை வார்த்தைகளை நீக்கிக்கொள்ளுங்கள் தாராளமாய்....!)

  • செயல்படுத்திப்பாருங்கள் எந்தவொரு முக்கிய சம்பவங்களும் செயல்களும் நம் வாழ்வில் நிகழ்ந்திருந்தால், நம்மால் கண்டிப்பாக அதை மீட்டு நினைவுகளின் வழி எடுக்க இயலும்! அதைப்போலவே எந்தவொரு முக்கியமான விஷயங்களையும் நம்மால் செய்ய இயலும் என்ற பட்சத்தில் செய்து பாருங்கள் சிறப்பினை உணருங்கள்!

இதை படித்து பார்த்த பின் எதாவது விமர்சனங்கள் இருந்தால் மெயிலுங்கள் :))))
மற்ற விஷயங்கள் அப்புறம் சொல்லுறேன் ஒ.கே!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்படியே படித்துவிட்டு பின்னூட்டமும் போடவும்ன்னு சொல்லுங்கப்பு :))

said...

//தாவிச்செல்லும் மனதில் தங்கும் விஷயங்கள்தான் தங்கமாக மாறி உங்களை ஜொலிக்கவைக்கும் இது உண்மைதானே....?//


உண்மை.

said...

ஆயில்யன் என்ன பதிவிட்டிருப்பார் என்று கணினித்திரை விரியும் முன் யோசிக்கும் அளவிற்கு தினமும் நல்ல நல்ல பதிவுகளாக கொடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

said...

///நிறைய படியுங்கள்! - நிறைய வார்த்தை பிரயோகங்கள் உங்களுக்கு புதிதாய் கிடைக்கும் வார்த்தைகளும் கூட.! //
அப்ப தான் பி.நவீனத்துவ பதிவெல்லாம் போடலாம்....

said...

///உங்களுக்குள்ளும் சில பல சிந்தனைகள் - இப்படியிருந்தால் என்ன? அப்படியிருந்தால் என்ன? என்று - தோன்றக்கூடும்!
படித்ததை விமர்சனம் செய்யுங்கள் - ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட உதவும் குறிப்பு

said...

///மற்ற விஷயங்கள் அப்புறம் சொல்லுறேன் ஒ.கே! ///
வெயிட்டிங்ங்ங்ங்ங்ங்ங்ங

said...

//படித்ததை விமர்சனம் செய்யுங்கள் - //

அதாவது ரீப்பீட்டேய்ய்ய் போட சொல்றீங்க இல்லையா? :p

//நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி - உங்கள் பார்வை விரிவடையக்கூடும்!
//

ஆமா! ரீப்பீட்டேய்ய்ய் போட்டா பார்வைகள் ரொம்பவே விரிவடையும் தான். :))

said...

Good one, naanum ippadidhan pannindhen until work took over me.

said...

//ambi said...
//படித்ததை விமர்சனம் செய்யுங்கள் - //

அதாவது ரீப்பீட்டேய்ய்ய் போட சொல்றீங்க இல்லையா? :p

//நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி - உங்கள் பார்வை விரிவடையக்கூடும்!
//

ஆமா! ரீப்பீட்டேய்ய்ய் போட்டா பார்வைகள் ரொம்பவே விரிவடையும் தான். :))
//

பிடித்த கருத்தாக பலருக்கும் ஒரே விஷயம் தோன்றுகையில் ரிப்பீட்டினைவிட்டால் வேறு ஒன்றுமே இல்லை :))