2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !


நீங்கள் புகை பிடிக்காதவரா?

ஆம் எனில்,

நீங்களும் புகை பிடிப்பவர்தான்!

அட...! தம் அடிக்கறவங்க இழுத்து வெளியே விடற புகையை நீங்கள் இழுக்குறீங்க,
சுவாசிக்கிறீங்கள்ல அத தான் சொன்னேங்க!

நீங்களும் புகைபிடிப்பவர்கள் பிடித்து விடும் மிச்ச மீதி புகைகளை பிடிப்பவர்கள்தான்!

உண்மையாகவே நம்புங்கள் நாமும் இந்த புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்!

இதுக்கு மேலை நாடுகளில் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் - ரெண்டாவது வாட்டி இழுக்குறதுன்னு கூட சொல்லலாம் - என்றழைக்கிறார்கள் அதாகப்பட்டது ஒரு புகைபழக்கம் உள்ள நபர் தான் அனுபவித்து விடும் இன்பம் மெதுவாக காற்றில் கலக்கும் அதே சமயத்தில் இன்னொருவர் சுவாசித்து தனக்கு துன்பத்தை தேடிக்கொள்கிறார் அந்த நபர்தான் இந்த மாதிரியான செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்கள்!

இதனால் பெரும்பாலும் நுரையீரல் தொடர்பான நோய்கள்,காது மூக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்னு கண்டுபுடிச்சிருக்காங்களாம்!

என்ன ரொம்ப யோசனையா இருக்கா....???

நாம என்ன பண்ணமுடியும்?

முடியும்!

நிப்பாட்டணும் எல்லாரையும் நிப்பாட்டணும்

சிகரெட் புடிக்காதீங்கன்னு சொல்லி,

SMOKING INJURIOUS TO OTHERS HEALTH

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல பதிவு :)

said...

செகண் கேண்ட் ஸ்மோக்கிங்? அதை எங்க ஊரில் அதை ஒட்டு பீடின்னு சொல்லுவாங்க. நீங்க சொல்வது Passive Smoking னு நினைக்கிறேன்... :)
Passive Smiking

Passive Smoking BBC

said...

///நிப்பாட்டணும் எல்லாரையும் நிப்பாட்டணும்

சிகரெட் புடிக்காதீங்கன்னு சொல்லி,///
அவங்களை நிப்பாட்ட சொல்லுங்க!
;
நாங்க நிப்பாட்டுறோம்
;
தெரு தெருவா பெட்டிக் கடையில் சிகரெட் விக்கிறாங்களே!
அவங்களை நிப்பாட்ட சொல்லுங்க!
நாங்க நிப்பாட்டுறோம்!
;
அந்த பெட்டிக்கடைக்கு சப்ளை பண்றானே ITC க்காரன்!
அவங்களை நிப்பாட்ட சொல்லுங்க!
நாங்க நிப்பாட்டுறோம்!
;
டாக்ஸ் மேல டாக்ஸ் போட்டு ITC க்காரன்கிட்ட லஞ்சம் கேட்கிறானே அரசியல்வாதி!
அவங்களை நிப்பாட்ட சொல்லுங்க!
நாங்க நிப்பாட்டுறோம்!;;;;

அவ்வ்வ்வ்வ்வ் முடியலை...

said...

//நிப்பாட்டணும் எல்லாரையும் நிப்பாட்டணும்//

முதல்ல அவங்கள நிப்பட்டச் சொல்லு(ங்க), நாங்க நிப்பாட்டுறோம்.

சாலையில ஓடுற வாகனத்துல புகை வருதே அத நிப்பாட்டு

அடுப்புல புகை வருதே அத நிப்பாட்டு

நிலக்கரிய எரிச்சி புகை வருதே அத நிப்பாட்டு


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

said...

நல்ல பதிவு!

said...

நல்ல கருத்து

/பொது இடங்களில்
பகையே இல்லாமல்
அடுத்தவர் மீது தொடுக்கும்
வன்முறையே புகைப்பிடித்தல்/