முதல்வர் கருணாநிதியின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட அறிவிப்பு அரசியல் சந்தர்ப்பவாதமா - விஜயகாந்த் கேள்வி?

மக்கள் எழுச்சி என்பது மின்சார சுவிட்ச் போட்டால் எரியும் விளக்கு போலவும், பின்னர் வேண்டாம் என்றால் அதை நிறுத்தி விடலாம் என்றும் கருதுகிறார் போலும்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சில தீயசக் திகள் தொடர்ந்து தமிழகத்துக்கு இழைத்து வரும் கொடுமையின் உச்ச கட்டமாக தமிழக மக்கள் தாங்களே முன்வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகும். தமிழகம், கர்நாடகத்துக்கு இடையே நல்லுறவு, இந்திய ஒரு மைப்பாடு, இறையாண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள், நல்லவைகளாக இருக்கட்டும் என்கிறார்.

எத்தகைய நல்லுறவும் நீதியையும், நியாயத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். கற்பழித்த காமுகனுக்கும், கன்னிகைக்கும் எப்படி ஒற்றுமை ஏற்படுத்த முடியும்? ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குடி நீர்த் திட்டத்தை ஏற்க மறுத்து தமிழ் மக்களின் உயிர்களையும், உடமைகளையும் கன்னட வெறியர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை கூட கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக கடுமையான நிலையை எடுத்து, மத்திய அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்றார். இன்றும் தமிழ்த் திரைப்படங்களை காட்டத் தடையுள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகத்தில் வெறி தாண்டவமாடுகிறது.

தமிழ்நாட்டில் பல கட்சிகள் களம் இறங்கியும், தமிழ்த் திரையுலகம் உண்ணாவிரதம் நடத்தியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் தமிழ் மக்களின் நியாய உணர்வுக்கு வடிவம் கொடுத்துள்ளன.

இவ்வளவுக்குப் பிறகு இன்றைக்கு முதல்வர் கருணாநிதி போராட்டங்களைக் கைவிடுங்கள் என்றால் என்ன பொருள்?

கருணாநிதி முடிவு எடுக்கும் முன் மக்களின் உணர்வை மதித்திருக்க வேண்டாமா? அழைத்துப் பேசி இருக்க வேண்டாமா?

உள்ளூர் பிரச்னைகளுக்கெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் போடும் முதல்வர், இத்தகைய முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன் அனைத்துக் கட்சித் தலைவர்கள், உண்ணாவிரதம் இருந்த கலைத்துறையினர், வழக்கறி ஞர்கள் போன்றோரை கலந்து பேசி யிருக்க வேண்டாமா?

தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற அரசியல் சந்தர்ப்பவாதமா? அல்லது மத்திய அரசால் அவருக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியா?

தமிழ்நாட்டில் உள்ள தனது கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளுகிற தந்திரமா?
எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பேசியதால் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் தோற்குமானால் தன் மீது பழிவந்து விடும் என்று அச்சத்தாலா?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை 1998-ம் ஆண்டிலேயே தொடங்கியிருக்கலாம். அதை விட்டு விட்டு இன்றைக்கும் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட முயற்சிக்கிறார்.

காவிரிப் பிரச்னையில் 1972-ல் செய்த வரலாற்று தவறை மீண்டும் கருணாநிதி செய்கிறாரா என்பதே என் கேள்வி.

சில நோய்கள் மருந்தால் குணமாகலாம். ஆனால் சில நோய்களுக்கு அறுவைச்சிகிச்சை தேவை. இந்திய ஒற்றுமை என்ற உடம்பில் கன்னடர்களின் வெறியாட்டம் என்ற அநீதி, கட்டியாக உள்ளது. நீதியை நிலைநிறுத்த அறுவைச்சிகிச்சைக்காக தமிழ் நாட்டு மக்கள் எழுச்சி என்ற கத்தி எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதி கத்தியை கீழே போடச் சொல்வது நோயாளிக்கும் ஆபத்து; நோயும் என்றும் தீராது. .

நன்றி - தினமணி

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆளாளுக்கு கொழப்புறாங்கப்பா. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். சொட்டு தண்ணி கிடைக்கபோறதில்லை.

said...

1. பாலாறு பிரச்சனை x ஆந்திர அரசு
2. தேக்கடி நீர்தேக்கம் x கேரள அரசு
3. குடிநீர் திட்டம்x கர்நாடக அரசு
4. ???????????? x ??????.....
வாழ்க பாரதம்
எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள்
"விட்டுகொடுத்தவன் கெட்டுப் போவதில்லை "
எனும் தமிழ்மொழியின் பழமொழியை உண்மையாக்க முயலுகிறோமா !!!

said...

கடகம் அய்யா,

கேப்டன் சொல்வது சரி.கழக(குடும்ப)வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு பேரம் பேசும் மஞ்ச துண்டு அய்யாவின் இந்த பல்டியையும்,உடன் பிறந்த குஞ்சுகள் ஜாலியா ஜம்ப் அடித்து "ஆஹா என்ன ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று கை தட்டுவது நல்ல காமெடி.

பாலா