புத்தூர் ஜெயராமன் கடை :-)


காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது - ரசமானது!

சிதம்பரம் - சீர்காழி இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு "கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடை'யில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் அங்கு சாப் பிட இடம் கிடைக்கும் என்றும் ஒரு நண்பர் சொன்னார்.

பசிக்க ஆரம்பிக்காத ஒரு நண்பகல் வேளையில் புத்தூரை நோக்கிப் பயணமானோம். புத்தூர் கடைவீதியில் இறங்கி வழி கேட்ட நமக்கு, உள்ளூர்க்காரர் சுட்டிக்காட்டிய இடம் சற்றே பெரிய கீற்றுக்கொட்டகை.

பெயர்ப் பலகைகூட இல்லை. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பந்தலில் வழியை மறித்து நிற்கிறது கூட்டம்.

""ஐயா, வரிசையில் மொதல்ல நிக்கிற நாலு பேரு உள்ள வாங்க.'' நமக்கு முன்னுள்ள வரிசை மெல்ல கரைய, பின்னுள்ள வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது. இதற்குள் கடைக்காரருக்கு நாம் தகவல் தெரிவிக்க, அவர் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார்.கூட்டம் கொலைவெறியுடன் நம்மைப் பார்க்கிறது.

உள்ளே ரொம்பவும் சாதாரணமான மர பெஞ்சுகள், முக்காலிகளில் அமர்ந்து வியர்க்கவிறுவிறுக்கக் கருமமே கண்ணாக கனஜோராய் மீன் வறுவல், இறால் வறுவல் சகிதமாய் சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது கூட்டம். ஏற்கெனவே கடைக்காரர்களால் உள்ளே அழைக்கப்பட்ட அந்த நால்வரைக் கவனிக்கிறோம். தயிர்போட்டு சாப்பிடுபவர்கள் முன் இடத்தைக் கைப்பற்ற தயாராக நின்றுகொண்டிருந்தார்கள்.

நாம் கடைக்குப் பின்புறம் செல்கிறோம். கல்யாணவீட்டின் கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருக்கும் சமையல் கொட்டகைபோல் இருக்கிறது அந்தக் கடையின் சமையலறை. இறால், கோழி, வஞ்சிரம் மீன் துண்டுகளை வண்டியிலிருந்து இறக்கி கழுவிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மசாலா போட்டு அவற்றைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழம்பு, வறுவல், பிரட்டல் என அதுஅது போய்சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் வேறு சிலர்.

""இறாலுக்கு மெனக்கெடு அதிகம் சார். இறால் உரிக்கிறதுக்காகவே 10 பேர் இருக்கோம்'' என்கிறார் அவர்களில் ஒருவர்.சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்கும் மீன் குழம்பு வாசனை நம் நாசியைத் துளைக்கும் அந்த நேரத்தில் - இறால் வறுவல் "வா மகனே வா' என்று அழைக்கும் அந்த நேரத்தில் - பசி நம் வயிற்றில் பூதாகரமாய் கிளம்புகிறது. கடைக்காரர் சலுகையில் நமக்கும் ஓர் இடம் கிடைக்கி றது. அமர்கிறோம்.எளிமையான உணவுப் பட்டியல்.



சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன்குழம்பு, இறால்குழம்பு, ரசம், கீரை, வெங்காயப்பச்சடி. அவ்வளவே. வறுவல் பிரட்டல் எல்லாம் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்; மிக முக்கிய மாக கெட்டித் தயிரை. கேட்கக்கேட்கப் போடுகிறார்கள். புளிப்பு ஏறாமல் புளித்த தயிர் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது! வரிசையாய் குழம்பு, ரசம் ஊற்றி சாப் பிட்ட பின்னர், பொன்னி அரிசி சாதத்தில் கெட்டித் தயிரை நிறைய ஊற்றி வழியவழிய பிசைந்து இறால் வருவலையோ மீன் வருவலையோ தொட்டுக் கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே..!

எத்தனையோ தொலைவிலிருந்து இந்த சின்ன கிராமத்துக் கடையைத் தேடி நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரகசியம் புரிகிறது.அருகில் அமர்ந்திருந்த கடை உரிமையாளர் பி. ஜெயராமனிடம் பேசினோம்.""அசைவச் சாப்பாடு சிறக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். மீனோ, கறியோ எதுவென்றாலும் உயிர்விட்டு நீண்ட நேரம் ஆகக்கூடாது. அதாவது கட்டு குலையக்கூடாது. சுத்தத்தில் பிசிறு கவுச்சி தங்கக்கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பாதி ருசி வந்துவிடும். எங்கள் கடையில் வீட்டுப் பக்குவத்தில் மசாலா அரைத்துப்போட்டு விறகு அடுப்பில் சமைக்கிறோம்.தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாக சுண்டக்காய்ச்சி உறை ஊற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை'' என்றார்.வயிற்றைத் தள்ளிக்கொண்டு நாம் எழுந்த அடுத்த நொடி அந்த இடத்தில் துண்டு ஒன்று பறந்துவந்து விழுகிறது.திடுக்கிட்டு பார்க்கும் நம்மைப் பார்த்து துண்டை வீசியவர் சொல்கிறார்.

""என்ன மொறைக்குற, பசி வயித்தைக் கிள்ளுதுல்ல; நகருய்யா!''

நன்றி தினமணி

18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நான் தான் பர்ஸ்ட்டு!

said...

நண்பா நாக்குல எச்சி ஊருது. ஊருக்கு போகும் போது சொல்லு நானும் வாரேன். ஆஹா நீ வேற சைவம் ஆச்சே? பரவா இல்ல தயிர் கூட அங்க நல்லா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

said...

///காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது.///


நண்பா உன்னோட பதிவ படிக்க கூட நான் தினம் காத்திருக்கிறேனே. அது கூட ஒரு சுகம் தான்:)

said...

///தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாக சுண்டக்காய்ச்சி உறை ஊற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை''///


அட இது தான் அந்த ரகசியமா? இது தெரியாமாத்தான் அபி அப்பா உடம்பு வீங்கி கிடக்குதாமே?

said...

அபி அப்பா இதை விட நன்றாக எழுதியதாக ஞாபகம். ஆனாலும் இதுவும் நல்லா தான் இருக்கு. :))

said...

ஜெயராமன் எம்புட்டு காசு வாங்குனாரு....அதச் சொல்லுங்க

said...

//நிஜமா நல்லவன் said...
நண்பா நாக்குல எச்சி ஊருது. ஊருக்கு போகும் போது சொல்லு நானும் வாரேன். ஆஹா நீ வேற சைவம் ஆச்சே? பரவா இல்ல தயிர் கூட அங்க நல்லா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
//

யாருப்பா அது என்னைபத்தி உங்ககிட்ட சொன்னது??????

said...

// நிஜமா நல்லவன் said...
///காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டியிருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது.///


நண்பா உன்னோட பதிவ படிக்க கூட நான் தினம் காத்திருக்கிறேனே. அது கூட ஒரு சுகம் தான்:)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((((((((((((

said...

//தமிழ் பிரியன் said...
அபி அப்பா இதை விட நன்றாக எழுதியதாக ஞாபகம். ஆனாலும் இதுவும் நல்லா தான் இருக்கு. :))
//

ஆமாம் அபி அப்பா இன்னொரு கடையை பத்தி சொன்னாருன்னு நினைக்கிறேன்

ஆனா நான் சுட்டுல்ல போட்டிருக்கேன்

நன்றி தினமணிக்கு :)))))))))))))

said...

//இரண்டாம் சொக்கன்...! said...
ஜெயராமன் எம்புட்டு காசு வாங்குனாரு....அதச் சொல்லுங்க
//
அவ்ளோ அதிகம் கிடையாதுன்னு கேள்வி சாரி பதில் :)

said...

/////ஆயில்யன். said...

//நிஜமா நல்லவன் said...
நண்பா நாக்குல எச்சி ஊருது. ஊருக்கு போகும் போது சொல்லு நானும் வாரேன். ஆஹா நீ வேற சைவம் ஆச்சே? பரவா இல்ல தயிர் கூட அங்க நல்லா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
//

யாருப்பா அது என்னைபத்தி உங்ககிட்ட சொன்னது??????////


யாரும் எதுவும் சொல்லலையே! ஏன் கேக்குறீங்க???????

said...

///ஆயில்யன். said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((((((((((((///


:))

said...

ஆயில்யா! ஆமாம் நான் எழுதினது மயிலாடுதுறை தட்டி மெஸ் பத்தி. எனக்கும் புத்தூர் ஜெயராமன் கடை பத்தி விலாவாரியா எழுத ஆசை. ஆமால் ஏற்கனவே மயிலாடுதுறை சிவா அழகா எழுதிட்டதால் நான் எழுதலை.

அது போல சீர்காழி "ஆயர்பாடி"மெஸ் கூட புத்தூர் ஜெயராமன் கடை மாதிரியே இருக்கும். எழுதுவோம் பின்ன!

said...

\\ தமிழ் பிரியன் said...
அபி அப்பா இதை விட நன்றாக எழுதியதாக ஞாபகம். ஆனாலும் இதுவும் நல்லா தான் இருக்கு. :))

\\

தமிழ்ப்பிரியா நீதான்யா நெசமா நல்லவன். என் மேல அம்புட்டு பாசமா:-))

said...

\\ ஆயில்யன். said...
//நிஜமா நல்லவன் said...
நண்பா நாக்குல எச்சி ஊருது. ஊருக்கு போகும் போது சொல்லு நானும் வாரேன். ஆஹா நீ வேற சைவம் ஆச்சே? பரவா இல்ல தயிர் கூட அங்க நல்லா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
//

யாருப்பா அது என்னைபத்தி உங்ககிட்ட சொன்னது??????
\\

நான் அவனில்லை. தவிர அந்த கோழி சமாச்சாரம் பத்திகூட நான் யாருக்கும் மூச்சு விடலை, நம்பு தம்பி நம்பு:-))

said...

நன்றிகள் மாம்ஸ் அருமையான விஷயத்தை பகிர்ந்துக்கிட்டதுற்க்கு:)

said...

ஆஹா! இப்படி ஆசை காட்டுறீகளே!

said...

///அபி அப்பா said...
நான் அவனில்லை. தவிர அந்த கோழி சமாச்சாரம் பத்திகூட நான் யாருக்கும் மூச்சு விடலை, நம்பு தம்பி நம்பு:-))///


ஆஹா இது வேறயா? போனில் சொல்லாமா இங்க வந்து சொல்லுறீங்களே?