தீனி பண்டாரங்களாய்...?!?




எங்கயாவது பசங்க வெளியூருக்கோ அல்லது பல நாட்கள் வெளியிலோ சென்று வந்தால் கண்டிப்பாக அன்றைய முதல் உணவுப்பொழுதில், இந்த வார்த்தைகளை கேட்ககூடும் உப்பு சப்பில்லாத சாப்பாட சாப்பிட்டிருப்பான்! ராசா உனக்கு இந்தாடான்னு ஆசை ஆசையா வகை வகையா பரிமாறும் பாட்டிகளிலிருந்து அம்மாக்கள் வரை அனைவரிடமிருந்தும் இந்த சொல் வெளிப்பட்டிருக்கும்:)

இன்றைய நாளில் இதெல்லாம் சர்வ சாதரணமாக மறந்துப்போய், பணமிருப்பவர்கள் மனமின்றி வாங்கி தின்னும் பழக்கத்தோடு பொருட்களின் வகைகள் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான கவலைக்குரிய விஷயம் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் வாரிசுகள்தான் இளையதலைமுறைகளுக்கு,என்னமாய் கற்று தந்திருக்கிறார்கள் அழகாக சாக்லேட்டுகள் சாப்பிடவும்,இன்னபிற பெயர் வாயில் நுழையா பொருள் வாயினுள் நுழைத்து,இளம் வயதிலேயே நோயினை வரவழைத்துக்கொண்டு படாத பாடு படுவதை பலரும் நேரில் காணலாம்!

நொறுக்கு தீனிகள் என்றழைக்கப்படும் இவ்வகையான உணவுப்பொருட்கள் அந்த நேரத்தில் மட்டுமே நல்ல சுவையாக தோன்றினாலும் அதனால் உடலுக்கு ஒரு பலனும் இல்லை! இது போன்ற உணவுகளும் நல்ல அழகிய வண்ணங்களில் பலரையும் கவரும் வகையில் விற்பனைக்கு பயன்படுத்தப்ப்டுகின்றன அது மட்டுமல்லாமல் அதை வாங்கி தின்றால்தான் தங்களது கெளரவம் வெளியுலகுக்கு தெரியும் என்கிற ரீதியில் கூட மக்கள் மனதை மாற்றி வைத்துள்ளனர் விற்பனையாளர்கள்!

வரும் நோய்களை பற்றியும் சற்று தெரிந்துக்கொள்வோம் அதிக அளவு நொறுக்கு தீனிகள் அதே அளவு கொழுப்பினையும் கொண்டுவரும் கூடவே...!அதிக கொழுப்பு கல்லீரலினை காயப்படுத்தலாம், டயாபடிக் சார்ந்த நோய்கள்,நரம்பு தளர்ச்சி,சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே அடங்கியுள்ளது இது போன்ற நொறுக்கு தீனிகளுள்!

நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நொறுக்குத் தீனியை நொறுக்குவதா? கஷ்டமான வேலை ஆச்சே? நமக்கு சாப்பாடே அதுதான.... இருந்தாலும் குறைக்கலாம்... நல்லா இருக்கு :))

said...

:))

//நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில்யன் :))

said...

வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))

said...

//அபி அப்பா said...

வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))
//

எங்க

அய்யா!

எங்க...???

said...

////ஆயில்யன். said...
//அபி அப்பா said...

வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))
//
.............
...................
எங்க

அய்யா!

எங்க...???
............
.....................

அட இது கூட நல்ல கவிதையா இருக்கு ஆயில்யன்:))

said...

///நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!///


நல்லா சொல்லி இருக்கீங்கப்பு.

said...

////அபி அப்பா said...
வர வர நல்லா கவிதை எழுதரீங்க ஆயில் சார்!:-))///



அபி அப்பா நீங்க எழுதாத கவிதையா ஆயில் சார் எழுதிட்டார்?

said...

நல்லா சொல்லியிருக்கீங்க ஆயில்யன்.

இத்தகைய பண்டங்களை வாங்குவதன் மூலம், நவீனமாக இருப்பதாக நினைத்துக்கொள்வது, கௌரவம் தருவதாக நினைப்பது, பிள்ளைகள் பிடுங்குவதை (?) தவிர்க்க இதை வாங்கி கையில் அடைப்பது போன்றவை மட்டுமன்றி, டிப்ரெஷன் (மூட் சரியில்லை என்று கொறிப்பது), ஒரு பிடித்தமான பொழுதுபோக்கை உண்டாக்கிk கொள்ளாதது, எஞ் ஜாய் பண்ணுவதாக கற்பனை செய்து கொள்வது, தான் பிசினாரி இல்லை என்று காட்டிக்கொள்ள வாங்குவது, இன்னும் பல காரணங்களையும் கற்பிதங்களையும் உண்டு பண்ணுவது, இதெல்லாம் செய்து செய்து, பிள்ளைகளும் இப்படித்தான் போலிருக்கு என்று நினைப்பது , இவையும் இன்னும் பல வித கேடுகளையும் விலை கொடுத்து வாங்குவோம் போலிருக்கு.

said...

more dangerously, aginomoto is the chemical being added in house foods.

//What are the Health Concerns?: Many experts blame MSG for "Chinese Restaurant Syndrome" - the headaches, dizziness, and chest pains some people experience after dining at a Chinese restaurant. There is a debate among the scientific community over whether MSG is the culprit//


even after this, they add it because, kids like the taste. It is becoming like a addict.

Who cares, as long as I can show off?

said...

/
நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!
/

நல்லா சொல்லிருக்கப்பா!

said...

நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

ரிப்பீட்டே!