நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்ப நீங்க...?

1990களை கடந்து வந்துக்கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக எங்காவது ஓரிடத்திலோ அல்லது ஒரு நாளிலோ கேட்ட வாசகமாகத்தான் - சாரி - பாடலாகத்தான் இருந்திருக்கும் இந்த தலைப்பில் மிளிரும் வரிகள்!

ஆம் மிளிருவதற்காக வந்த பொருளின் விளம்பர வரிகள்தான்!

நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்ப நீங்க...?

வான் ஒலிகளின் மூலமும் தொலைக்காட்சிகளின் மூலமும் மிகவும் அன்னியோன்யமாகிப்போன மேட்டராக மாறிப்போனது உஜாலா!

உஜாலான்னா வெண்மை !

வெண்மைன்னா உஜாலாதான்!

ஒரே விளம்பரம் தான் - இந்த விஷயத்தில ஜோதி லேபாரட்டரிஸ் கம்பெனிக்கே பெருமைதானாம் காலரை தூக்கிவிட்டுக்கிட்டு வலம் வருகிறார்கள்!

நாலு சொட்டுக்கு மேல போட்டா, பள்ளிக்கூடத்து யூனிபாரமான வெள்ளை சட்டையில நீலம் அப்பியெடுக்கும்னு தெரிந்தோ தெரியாமலோ - அல்லது பையன் அழகாயிடுவனோன்னு பயந்தோ என்னமோ!??- அப்பாவின் அருமையான சலவைத்திறனில், முக்கி முக்கி எடுத்த வெள்ளையாய் இருந்து பின் நீலமான சட்டையை போட்டு வெளியே வந்தாலோ தெரிந்துவிடும்!

அய்! டேய்...! இவன் உஜாலாவுக்கு மாறிட்டடாண்டா? டைப்பு கமெண்டுகள் பசங்க போட்ட பொறுத்துக்கலாம் ஒ.கே! ஆனா பாருங்க அந்த பிள்ளையார் கோவில் எதிர் வீட்டு பொண்ணு நக்கல் பண்ணுனதுதான் என்னால தாங்க முடியலை! சரி இதவிட்டு தள்ளுங்க! (இந்த வரிகள் தேவையில்லதான் இருந்தாலும்ஃபீல் பண்ணிடேனா அதான்!)

சின்ன சின்ன பாட்டில்களாகவும் கால் லிட்டர் வரைக்கும் கடைகளில் எப்போதுமே நிறைந்திருக்கும் ஐட்டம்!

லிட்டருக்கு நாலு சொட்டுன்னு விளம்பரம் வந்தாலும் நம்மளுங்க அந்த பாட்டில பாதியா கவுத்தே பழக்கப்பட்டவங்க,அப்படிப்பட்ட தோற்றமும் கூட!

நீங்களும் யூஸ் பண்ணி பார்த்ததுண்டுதானே....????

(இந்த மாதிரி மேட்டர்களை தான் கொசுவத்தி சுத்தறதுன்னு சொல்லுவாங்களா...???
இப்படிக்கு புதிய விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆவலில், அப்பாவி ஆயில்யன்!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

2இந்த விளம்பரம் இப்பவும் வருதுன்னு நினைக்கிறேன்... நல்ல கொசுவர்த்தி.. ஆனா நமக்கும் இந்த சொட்டு நீலத்துக்கும் ஏழாம் பொருத்தம்.... நீலம் போட்ட சட்டை அணிவதில்லை :)

said...

///ஆனா பாருங்க அந்த பிள்ளையார் கோவில் எதிர் வீட்டு பொண்ணு நக்கல் பண்ணுனதுதான் என்னால தாங்க முடியலை!///

அப்பாவிய பார்த்து அப்படி என்னதான் நக்கல் பண்ணுச்சு?

said...

///உஜாலான்னா வெண்மை !///

உஜாலா சொட்டு நீலம் தானே? அப்புறம் எப்படி வெண்மை?????