டிஸ்கி:- படிச்சப்பிறகு நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு உக்காந்திருக்ககூடாது சட்டுப்புட்டுனு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு வந்து கமெண்ட்ல ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்னு சொல்லிட்டு போகணும் ஒ.கேய்ய்!
எங்க ஊரு மக்களுக்கு நாளும் கிழமையும்ன்னா கண்டிப்பா காலையில வீட்ல இட்லிதான் போடுவாங்க திங்கிறதுக்கு!
நாளும் கிழமையும்ன்னா நல்ல நாட்கள், விசேஷ நாட்கள் மற்றப்படி கிருத்திகை,பெளர்ணமி அப்புறம் இன்ன பிற விரத நாட்கள் வெள்ளி ஞாயிறு இப்படியான நாட்கள்ன்னு வைச்சுக்கலாம்!
மத்த நாட்களில் எதாச்சும் டிபன் ஐட்டம்ன்னு சொல்ற தோசை,உப்புமா,பொங்கல் அல்லது வடக்கத்திய ஐட்டம்ங்கள் பூரி சப்பாத்தின்னு ஓடிக்கிட்டிருக்கும் ஆனா இந்த நாளும் கிழமையும்ன்னு சொன்னா ஒன்லி இட்லி ஐட்டம்தான் அதுக்கு சைடு கட்டி வைச்சு தட்டறதுக்கு சட்னி அல்லது சாம்பார் ஐட்டங்கள்!
இந்த சைடு ஐட்டங்கள் நார்மலா செய்யுறது,சில சமயங்கள் ட்யூ டூ அர்ஜென்சிக்கு (அம்மா பசிக்குதும்மா!) செய்யுற சைடு ஐட்டம்தான் நான் இங்க சொல்லி, நீங்க செஞ்சு திங்கப்போறது
சிவப்பு மிளகாய் பொடி - ஆக்சுவலா இப்படித்தான் நாங்க ஜொள்ளுவோம்! ஆனா இது துவையல் கேரக்டர்!
ரொம்ப சிம்பிளான செய்முறைதான் ஆனா திங்கிறப்பத்தான் சும்மா ஜிவ்வுன்னு காரம் தூக்கி கலக்கும் !
செய்யிறது எப்பிடின்னு நானே கூடச்சொல்லிடுவேனாக்கும்
நல்ல நாலு காஞ்ச மிளகாய் அப்புறம் கொஞ்சம் சின்ன வெங்காயம்,கொஞ்சம் உப்பு அம்புட்டுத்தேன்!
இந்த ஐட்டங்களை சேர்த்து,கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டு,அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்! ச்சும்மா வெண்ணெய் பதத்துக்கு அரைக்கணுமாக்கும்!
கடைசியா கொஞ்சம் கடுகு பொரிச்சு போடணும்!
அவ்ளோதான் புராடெக்ட் ரெடி!
இனி நல்லா சப்பணம் போட்டு உக்காந்துக்கிட்டு,சுடச்சுட இட்லியை டைரக்டா இட்லிபானையிலேர்ந்து அப்படியே தட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்ட்டு, அரைச்சு வைச்சா மிளகாய் பொடி/துவையலை ஒரங்கட்டி நடுவில குழிவிட்டு நல்லெண்ணை விட்டு கொஞ்சமா கலக்கி வைச்சுக்கிட்டு (ரொம்ப எண்ணெய் விட்டா நல்லா இருக்காதுப்பா!)
இட்லியை பிட்டு அதை சிவப்பு மிளகாய் பொடி/துவையல்ல தோய்த்து ச்சாப்ட்டா...!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)
டெவல்ப்மெண்ட் ஸ்டடீஸ்க்கு :-
1.சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும் ச்சூப்பரா இருக்கும்!.
2.இந்த ஐட்டங்களோட கொஞ்சம் பூண்டு சேர்த்து அரைச்சா அதுலயும் கொஞ்சம் டிபரெண்ட் டேஸ்ட் காமிக்கும்
3.சின்னவெங்காயத்துக்கு பதிலா பெரியவெங்காயமும் போடலாம் பட் பெரியவெங்காயத்தை கொஞ்ம் பொன்னிறமா வறுத்துப்போடா இன்னும் சூப்பரா இருக்கும்!
ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!
ஒ.கேய்ய்ய்ய் !
அப்பத்தான் நினைத்தாலே இனிக்கும்!
நினைத்தாலே உறைக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
60 பேர் கமெண்டிட்டாங்க:
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
காரமா இருக்கு ஆயிலு.. :((
இப்பமே சொல்லிட்டீங்க... இனி நாளு, கிழமை பார்த்தே வந்து கட்றோம்.... :))
அண்ணிக்கு ரொம்ப வேலை மிச்சமாகும் போல இருக்கு அண்ணே! யாருக்கு எங்க ஆயில் அண்ணன் கையால் சாப்பிடும் பாக்கியம் கொடுத்து வச்சு இருக்கோ தெரியல... ;)
///(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)///
நோம்மா. நோ.. நோ.. ஃபீல் பண்ணக் கூடாது... என்னோட அண்ணன் மார்க் கூட 10 எண்ணைய்க் கிணறு காணமப் போச்சுன்னு நேத்து சொன்னார்.. அதுக்கே நாங்க அழுகலை.. ;))
ஹிஹிஹிஹி கடைசியில் பார்த்தப்பா ஹிஹிஹி குளிர்ச்சியா இருக்கு ... நன்னி! நன்னி! நன்னி!
காரமெல்லாம் காணமப் போய்டுச்சு.. :))
:))))!
//ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்//
ம்ம்..சூப்பர்! இதைதான் நாங்க அடிக்கடி செய்வோமாக்கும்..(அதாவது நான் சமைச்சா)!!ஈசி..அண்ட்..டேஸ்டி!!
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
//ஹிஹிஹிஹி கடைசியில் பார்த்தப்பா ஹிஹிஹி குளிர்ச்சியா இருக்கு ... நன்னி! நன்னி! நன்னி!//
இதோ இப்பவே போன்கால் பண்ரேன்..வத்தலகுண்டு-க்கு!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... காரம் தான், ஆனாலும் இட்லியோட அதைச் சாப்பிட சூப்பரா இருக்கும்.
இம்புட்டுக் காரம் எனக்கு ஆகாது. கோபாலுக்கு வேணா செஞ்சு தரேன். அப்படியாவது ஒரு நாள் நிம்மதியா இருப்பேன்:-)
எங்க வீட்டுல பச்சைக்கலர் சட்னிதான்... எண்ணை ஊத்திக்கிட்டு த்தான் சாப்பிடுவோம்.. அரைக்கும் போதே கன்ணில் தண்ணிவரும்.. சூப்பரா இருக்கும் சட்னி..
:-))
/சந்தனமுல்லை said...
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
//
ரிப்பீட்டே....
படிக்கும் போதே ஜொள்ளு ஊத்துதே!
நாளைக்கு இது தான் எங்க வீட்டு மெனு
சரி சாப்பிடறதுக்கு முன்னாடி இன்சூர் பண்ணனுமா வேண்டாமா?
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! //
நானும் வழிமொழிகிறேன்.
இம்புட்டு காரம் வேணும்னா நீங்க கேரளாவை விட்டு ஆந்திரா பக்கம் வந்தாத்தான் உண்டு ஆயில்யன்.
:))))))))
படிக்கும்போதெ கண்ணுல தண்ணி...
படம் 1 கண்ணுல தண்ணி - எங்களுக்கு
படம் 2 வாயில தண்ணி (ஜொள்ளு)
உங்களுக்கு
என்னா லொள்ளு பய புள்ளைக்கு
செவப்பு மொளகாவாம், சுட சுட இட்லியாம், இப்படியெல்லாம் தின்னா, ஏன் தொப்பை வளராதுன்னேன்.
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
கடுமையா ரிப்பீட் பண்றேன்.
சந்தனமுல்லை said...
ம்ம்..சூப்பர்! இதைதான் நாங்க அடிக்கடி செய்வோமாக்கும்..(அதாவது நான் சமைச்சா)!!ஈசி..அண்ட்..டேஸ்டி!!
ஹே ஹே, ஆயில்ஸ் அண்ணன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே,
என்ன பாஸ், இன்னும் சும்மா இருந்தா எப்படி, ஏதாச்சும் சொல்லுங்க பாஸ், வெளிய வந்து.
துளசி கோபால் said...
இம்புட்டுக் காரம் எனக்கு ஆகாது. கோபாலுக்கு வேணா செஞ்சு தரேன். அப்படியாவது ஒரு நாள் நிம்மதியா இருப்பேன்:-)
மேடம், ஏன் இந்தக் கொலவெறி.
இப்ப தான் நீங்க என் ப்ரண்ட் :) [பின்னே செய்முறை போட ஆரம்பிச்சிட்டிங்களே!!] கிகிகி
சாரி.... சமையல் குறிப்புன்னு தெரியாம வந்துட்டேன்.. ;)))))
ஆனாலும் இவ்ளோ காரம் உடம்புக்கு ஆகாது.. டேக் கேர்.. :)
ஆயில்யன்,நம்மளுக்கு இட்லி எப்பாச்சும்தான் கிடைக்குது.நீங்க அலுத்துக்கிறீங்க.ம்ம்ம்...
திங்கிறதுக்குன்னு சொல்லக்கூடாது.
அழகா சாப்பிடுறதுக்குன்னு சொல்லுங்க.அப்புறம் நீங்க சொன்ன பொடியை மிளகாய் தொக்குன்னு எங்க வீட்ல செய்து தந்ததாக ஞாபகம்.கொஞ்சம் புளி,பூண்டு வைச்சும் அரைச்சீங்கன்ன இன்னும் ருசி கூடுதலா இருக்கும்.உறைப்புக் குறைவா இருக்கும்.சீனி(ஜீனி)வேணாம்.
அந்த அவங்க யாரு?அவங்களா அரைச்சுத் தந்தாங்க,இல்லாட்டி செய்முறை தந்தாங்களா?
ஹைய்யோ ஹைய்யோ..................
//ஸ்ரீமதி said...
சாரி.... சமையல் குறிப்புன்னு தெரியாம வந்துட்டேன்.. ;)))))//
same blood :-(
\\ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!\\
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே ;))
கடைசி போட்டோ சூப்பரு... :)
பாஸ் போட்டோவுக்கு மேலே ஏதோவெல்லாம் எழுதியிருக்கீங்களா? எனக்கு போட்டோ மட்டும் தான் தெரியுது
ஆல்ரவுண்டர் ஆயில்யன் பாஸ் வாழ்க! ;)
//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ
//
ஆமாம் தம்பி ஆமாம் நீதான் பர்ஸ்ட்டூ !
//தமிழ் பிரியன் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
காரமா இருக்கு ஆயிலு.. :((
//
ம்ஹுக்கும் அதான் ஜீனி தொட்டுக்க சொன்னேன்ல !
//தமிழ் பிரியன் said...
இப்பமே சொல்லிட்டீங்க... இனி நாளு, கிழமை பார்த்தே வந்து கட்றோம்.... :))
//
அட இந்த பார்முலா படி ஏற்கனவே பிளான் போட்டாச்சு தம்பி!
//தமிழ் பிரியன் said...
அண்ணிக்கு ரொம்ப வேலை மிச்சமாகும் போல இருக்கு அண்ணே! யாருக்கு எங்க ஆயில் அண்ணன் கையால் சாப்பிடும் பாக்கியம் கொடுத்து வச்சு இருக்கோ தெரியல... ;)
//
அடப்பாவி கூட இருந்துக்கிட்டே குழி பறிக்கிறதுன்னா இதானா???
//தமிழ் பிரியன் said...
///(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)///
நோம்மா. நோ.. நோ.. ஃபீல் பண்ணக் கூடாது... என்னோட அண்ணன் மார்க் கூட 10 எண்ணைய்க் கிணறு காணமப் போச்சுன்னு நேத்து சொன்னார்.. அதுக்கே நாங்க அழுகலை.. ;))
//
யாரு மார்க்கு உங்க அண்ணன் !
நல்லா இருங்கடே!
//தமிழ் பிரியன் said...
ஹிஹிஹிஹி கடைசியில் பார்த்தப்பா ஹிஹிஹி குளிர்ச்சியா இருக்கு ... நன்னி! நன்னி! நன்னி!
காரமெல்லாம் காணமப் போய்டுச்சு.. :))
//
ஆமாமாம் கொஞ்ச நாளைக்கித்தாண்டி ராசா அதுவரைக்கும் பயமெல்லாம் காணாமத்தான் இருக்கும்!
//ராமலக்ஷ்மி said...
:))))!
//ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்//
//
நன்றி அக்கா!
//சந்தனமுல்லை said...
ம்ம்..சூப்பர்! இதைதான் நாங்க அடிக்கடி செய்வோமாக்கும்..(அதாவது நான் சமைச்சா)!!ஈசி..அண்ட்..டேஸ்டி!!
///
அட சூப்பரூ! - என்னது நீங்க சமைச்சாத்தானா? அது சரி அப்ப எந்த வருசம் கடைசியா செஞ்சீங்க தங்கச்சி?
//சந்தனமுல்லை said...
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
//
நல்லவேளை சொன்னீங்க!
போட்டுட்டா போச்சு!
//சந்தனமுல்லை said...
//ஹிஹிஹிஹி கடைசியில் பார்த்தப்பா ஹிஹிஹி குளிர்ச்சியா இருக்கு ... நன்னி! நன்னி! நன்னி!//
இதோ இப்பவே போன்கால் பண்ரேன்..வத்தலகுண்டு-க்கு!!
//
தங்கச்சி சும்மா மிரட்டாதீங்க தம்பி சிங்கம்லே எவ்ளோ அடி வாங்குனாலும் சவுண்ட் வெளியில காட்டமாட்டாராக்கும்!
//அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்!//
இதுக்கு எங்க போறது?
ரொம்ப காரமா இருக்கு...ஸ்ஸ்ஸ்ஸ் :))
//துளசி கோபால் said...
இம்புட்டுக் காரம் எனக்கு ஆகாது. கோபாலுக்கு வேணா செஞ்சு தரேன். அப்படியாவது ஒரு நாள் நிம்மதியா இருப்பேன்:-)
//
ஆஹா தப்பு பண்ணிட்டேனோ!
சாரி கோபால் சார் :-(
_______________________________________
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எங்க வீட்டுல பச்சைக்கலர் சட்னிதான்... எண்ணை ஊத்திக்கிட்டு த்தான் சாப்பிடுவோம்.. அரைக்கும் போதே கன்ணில் தண்ணிவரும்.. சூப்பரா இருக்கும் சட்னி..
//
அட ஆமாம்க்கா ஆமாம்!
________________________________________
// சென்ஷி said...
:-))
/சந்தனமுல்லை said...
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
//
ரிப்பீட்டே....
//
நொம்ப்ப்ப சந்தோஷம்ல ஒ.கே ஒ.கே!
________________________________________
//வால்பையன் said...
படிக்கும் போதே ஜொள்ளு ஊத்துதே!
//
வாலு! படிக்குப்போதா இல்ல பார்க்கும்போதா....????
________________________________________
//வால்பையன் said...
நாளைக்கு இது தான் எங்க வீட்டு மெனு
//
கண்டிப்பா தின்னுட்டு சொல்லணும்
________________________________________
//வால்பையன் said...
சரி சாப்பிடறதுக்கு முன்னாடி இன்சூர் பண்ணனுமா வேண்டாமா?
//
அவ்வ்வ்வ்வ்!
________________________________________
//புதுகைத் தென்றல் said...
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! //
நானும் வழிமொழிகிறேன்.
இம்புட்டு காரம் வேணும்னா நீங்க கேரளாவை விட்டு ஆந்திரா பக்கம் வந்தாத்தான் உண்டு ஆயில்யன்.
:))))))))
//
ஆந்திராவா அவ்வ்வ்வ்வ்வ்
அது ஓவர் காரமாச்சே!
________________________________________
//Mahesh said...
படிக்கும்போதெ கண்ணுல தண்ணி...
///
சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டெரரா இருக்காது!
________________________________________
//அமிர்தவர்ஷினி அம்மா said...
படம் 1 கண்ணுல தண்ணி - எங்களுக்கு
படம் 2 வாயில தண்ணி (ஜொள்ளு)
உங்களுக்கு
என்னா லொள்ளு பய புள்ளைக்கு
செவப்பு மொளகாவாம், சுட சுட இட்லியாம், இப்படியெல்லாம் தின்னா, ஏன் தொப்பை வளராதுன்னேன்.
//
அய்யோ! அய்யோ!
அண்ணன் மானம் போகுது!
________________________________________
//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க பயோடேட்டாவில இதையெல்லாம் போட்டா எல்லாம் நீ நான்னு போட்டி போட்டுகிட்ட்டு வருவாங்க...கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! lol
கடுமையா ரிப்பீட் பண்றேன்.
//
ம்ஹுக்கும் !
________________________________________
///அமிர்தவர்ஷினி அம்மா said...
சந்தனமுல்லை said...
ம்ம்..சூப்பர்! இதைதான் நாங்க அடிக்கடி செய்வோமாக்கும்..(அதாவது நான் சமைச்சா)!!ஈசி..அண்ட்..டேஸ்டி!!
ஹே ஹே, ஆயில்ஸ் அண்ணன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே,
என்ன பாஸ், இன்னும் சும்மா இருந்தா எப்படி, ஏதாச்சும் சொல்லுங்க பாஸ், வெளிய வந்து.
//
ஆமாம் ! நீங்க பண்ணாத காமெடியா அந்த தங்கச்சி பண்ணுச்சு எல்லாம் சந்தோஷமா இருங்க !
________________________________________
//அமிர்தவர்ஷினி அம்மா said...
துளசி கோபால் said...
இம்புட்டுக் காரம் எனக்கு ஆகாது. கோபாலுக்கு வேணா செஞ்சு தரேன். அப்படியாவது ஒரு நாள் நிம்மதியா இருப்பேன்:-)
மேடம், ஏன் இந்தக் கொலவெறி.
//
டீச்சர் ச்சும்மா சொன்னாங்க!
________________________________________
// Thooya said...
இப்ப தான் நீங்க என் ப்ரண்ட் :) [பின்னே செய்முறை போட ஆரம்பிச்சிட்டிங்களே!!] கிகிகி
//
ஆஹா!
________________________________________
//ஸ்ரீமதி said...
சாரி.... சமையல் குறிப்புன்னு தெரியாம வந்துட்டேன்.. ;)))))
//
அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடணும்!
________________________________________
// ஸ்ரீமதி said...
ஆனாலும் இவ்ளோ காரம் உடம்புக்கு ஆகாது.. டேக் கேர்.. :)
//
ம்ஹுக்கும் அட்வைஸ்க்கும் ஒண்ணும் கொறைச்சல் இல்ல!
________________________________________
//ஹேமா said...
ஆயில்யன்,நம்மளுக்கு இட்லி எப்பாச்சும்தான் கிடைக்குது.நீங்க அலுத்துக்கிறீங்க.ம்ம்ம்...
திங்கிறதுக்குன்னு சொல்லக்கூடாது.
அழகா சாப்பிடுறதுக்குன்னு சொல்லுங்க.அப்புறம் நீங்க சொன்ன பொடியை மிளகாய் தொக்குன்னு எங்க வீட்ல செய்து தந்ததாக ஞாபகம்.கொஞ்சம் புளி,பூண்டு வைச்சும் அரைச்சீங்கன்ன இன்னும் ருசி கூடுதலா இருக்கும்.உறைப்புக் குறைவா இருக்கும்.சீனி(ஜீனி)வேணாம்.
அந்த அவங்க யாரு?அவங்களா அரைச்சுத் தந்தாங்க,இல்லாட்டி செய்முறை தந்தாங்களா?
//
யக்கோவ்
எனக்கும் கூட எப்பவாவதுதான் கிடைக்கிது :-(
சரி சாப்பிடறதுக்கு (ஒ.க்கேவா)
மிளகாய் தொக்குன்னு சொல்லுவாங்க்!
புளி பூண்டு - எஸ் எஸ் அதுவும் உண்டு (ஆஹா டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்ல இதெல்லாம் சேர்க்க மறந்துட்டேன்!)
வாய்ப்பு கிடைச்சா வீட்டுக்கு வந்து செய்முறை சொல்லி அரைச்சு தரேன்னு சொல்லியிருக்காங்க - கனவுல :)))))
________________________________________
//ரமேஷ் வைத்யா said...
ஹைய்யோ ஹைய்யோ..................
//
இது எதுக்கான ஹய்யோ பாஸ்?
________________________________________
// இனியவள் புனிதா said...
//ஸ்ரீமதி said...
சாரி.... சமையல் குறிப்புன்னு தெரியாம வந்துட்டேன்.. ;)))))//
same blood :-(
//
இருக்கட்டும் இருக்கட்டும்!
________________________________________
//கோபிநாத் said...
\\ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!\\
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே ;))
//
தம்பி நீ ஸ்வீட் இருந்தா மட்டும்தான் என் ப்ளாக் பக்கமே வர்ற தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமாஞ்சொல்லிப்புட்டேன்!
________________________________________
//இராம்/Raam said...
கடைசி போட்டோ சூப்பரு... :)
//
:))))
________________________________________
//கானா பிரபா said...
பாஸ் போட்டோவுக்கு மேலே ஏதோவெல்லாம் எழுதியிருக்கீங்களா? எனக்கு போட்டோ மட்டும் தான் தெரியுது
//
தெரியும் ராசா தெரியும்!
எனக்கு முன்னமே தெரியும்!
________________________________________
// கப்பி | Kappi said...
ஆல்ரவுண்டர் ஆயில்யன் பாஸ் வாழ்க! ;)
///
பாஸ்!
வேணாம்
பாஸ்!
வேணாம்!
// வால்பையன் said...
சரி சாப்பிடறதுக்கு முன்னாடி இன்சூர் பண்ணனுமா வேண்டாமா?
//
ரிப்பீட்டே....
அண்ணே ஒரு வருசத்தில 300 பதிவா?????வாழ்த்துக்கள் அண்ணே...:)
படம் பக்கா :)
ஹை இது என் பேவரைட் சட்னி ஆயில்யன். சில நேரங்கள்ல இது கூட கொஞ்சம் பருப்பு வெச்சு அரைப்பேன்.
இந்த சட்னி இருந்தா இட்லி கொஞ்சம் அதிகமாவே உள்ள போகும்.
Nice :) LOL.
வெறு இட்லியிலேயே அரை லிட்டர் இதயம் ஊத்தி சாப்பிடும் ஜோ உங்க சிகப்பு மிளகாய் பொடிக்கு எத்தனை பேரல் கொட்டப் போறாரோ.....
அந்த சட்னி எங்க ஊர் கறுப்புதோசைக்கு ஜோடி
சரியா சாப்பாட்டி நேரத்திலே இட்லி மொளக சட்னி. ரொம்ப பசிக்குதுப்பா.....
அந்த கறுப்பு தோசையின் ரெசிபி நானானியின் பதிவில் இருக்குமா பாருங்கள்'கருப்புதான் எனக்கு பிடிச்ச தோசை'ன்னு பதிவிட்டிருப்பார்கள்.இல்லையென்றால் இதோ சுருக்கமான செய்முறை.தோல் நீக்கப் படாத உளுந்து ,இட்லி அரிசி[+ஒரு டீஸ்பூன் வெந்தயம்] 1:4 என்று எடுத்துக் கொள்ளவும்,அரிசியை மட்டும் ஊறவைக்க வேண்டும்.உளுந்தை ஒரே ஒருமுறை தூசு தும்பு அகற்றுவதற்க்கு மட்டும் நன்றாகக் கழுவி வடித்த பின் அரைக்கத் தொடங்குங்கள் ஆரம்பத்தில் ஜல்லி மிக்ஸிஓசை கேட்டு பயந்துவிட வேண்டாம்,தண்ணீர் உற்றி அரைக்க அரைக்க பொங்கி பொங்கி வரும் பாருங்கள்.இந்த சின்ன பருப்புக்குள் இத்தனை நுரை எங்கிருந்து வந்தது என்று நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
அரிசியை அரைக்கவும்,உளுந்தமாவுடன் கலக்கவும் உப்பு கலந்து வைக்கவும்.
மறுநாள் தோசையாக்கவும் உங்கள் சிவந்தமிளகாய் சட்னியுடன் ஒரு பிடி பிடித்தால் ,"தோசை அம்மா தோசை"ன்னு ,அத்தனை தோசையும் ஓசைப் படாமல் உள்ளே போய்விடும்
சூப்பருங்க... இதைத் தான் நான் பெரும்பாலும் அலுவலக நாட்களில் செய்வேன்... கடுகு போட்டு தாளிக்கும் போது கொஞ்சம் பெருங்காயம் தூவினால் ஆகா... பிரமாதம்... சும்மா சுரீர்னு இருக்கும்ல :)ஆனா அரைச்சு மிக்ஸீலருந்து வழித்து எடுத்து எல்லாம் முடிந்த பின்பு கை எரியுமே... அது பரவால...
கோமா சொன்னதுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
சொந்த செலவுல ஆரத்தி எடுக்கக் கூடாது. அதா கோமா சொல்லீட்டாங்க.
இதையே நாங்க பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து ஒன்றிரண்டாக அடைத்து இட்லிக்கு தொட்டுக்குவோம். பேர் "ஒண்ணுரெண்டு சட்னி!"
உங்க பதிவு நல்லா காரமா இருக்கு ஃப்ரண்டு
சூப்பர் ஆயில்யன்...!
வீட்டில் அவசரமா கிளம்பும்போது
இதை செஞ்சு சாப்பிட்டு, எல்லாருக்கும்
ருசிக்கக்கொடுத்துட்டு...
ஹீரோவாகிட்டு...
இப்பதான் பின்னூட்டம் போடுறேன்..
கலக்குறீங்க!
(இவ்வளவு நாள் தெரியாம போச்சேப்பா...!)
ஷ்ஷ்ஷ்ல்ல்ஷல்ஷல்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...
நிஜமாவே நாக்குல எச்சில் ஊறிடிச்சு அண்ணன்...:)
நாக்கு செத்துப்போய் கிட்டத்தட்ட மூணு வருசமாகுதன்னாலும் யாரும் கேட்க மாட்டேங்கிறாய்ங்க இப்படி உசுப்பேத்துறதே வேலையாயிடுச்சு...
Post a Comment