மதியம் வெள்ளி, மே 28, 2010

உதயமாகும்...!

இயற்கையினை ரசித்தபடியே இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு கண்டிப்பாக சுதந்திரமான மனநிலையோ அல்லது தற்காலிகமானதொரு தோற்றம் கொண்ட சுதந்திரத்தினையோ ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகிறது.



விடுமுறை பொழுதுகள் முன்பெல்லாம், வெளிப்புறங்களுக்கு சென்று சுற்றி களைத்து வந்த காலமெல்லாம் போய், தற்போது உடை களையாமல் உறக்கம் கொள்ளும் பொழுதுகளாகியேவிட்டன !

அஸ்தமித்தலில் இருக்கும் அழகினை விட, ஆரம்பித்தலில் இருக்கும் அழகினை ரசிப்பதே அனைவருக்குமான ஆவலாக/ஆசையாக இருக்ககூடும் !



மிக விருப்பமாய்,உள்ளம் மகிழும் உணர்வோடு விவரிக்ககூடிய விசயங்கள் அதிகாலை சூரிய உதயத்தில்...

மெல்ல எட்டிப்பார்க்கும் அந்த அதிகாலை சூரியன் கண்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் கீழிருந்து மேல் நோக்கிபறக்க எத்தனிக்கும் அந்த காட்சி - வாழ்த்து அட்டைகளில் வர்ணங்களின் வசத்தில் அடைப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் - உயிர்ப்புடன் காண முடியும்

எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதை கண்டிப்பாய் உணர்த்தும் பழமொழிகளோ ஞானிகளின் பொன்மொழிகளோ படித்து படித்து அலுத்துப்போன தருணங்கள் நம்மால் இயலாது என்று முடிவு கண்ட தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது! எந்த எதிர்பார்ப்பினை தேடி, சூரியன் மென் தாக்குதல் தொடுக்கும் செங்கதிர்களினூடாக பறந்துகொண்டிருக்கின்றன அந்த பறவைகள்!?

19 பேர் கமெண்டிட்டாங்க:

Kumky said...

ஆமாமுங்க எசமான்...

நீங்க ஒரு ரசனைக்காரர்ருங்க.

அமுதா said...

அழகு...

VELU.G said...

நன்றாக இருக்கிறது உங்கள் எழத்து நடை

Thamira said...

ஃபோட்டோவில் எங்கையா பறவை பறக்குது? :-))

ஆயில்யன் said...

//போட்டோவில் எங்கையா பறவை பறக்குது? :-))/

போட்டோவில எப்படி ஐயா பறவை பறக்கும் ? :)))))

அது போச்சு பறந்தூஊஊஊஊஊ

Thamiz Priyan said...

\\\ஆதிமூலகிருஷ்ணன் said...

ஃபோட்டோவில் எங்கையா பறவை பறக்குது? :-))\\\

பாஸ்.. அது உங்க மானிட்டர் திரையில் இருக்கும் தூசியா இருக்கும்.. மானிட்டர் திரையை நல்லா அழுத்தி துடைங்க... ;-))

Thamiz Priyan said...

ஆமாமுங்க எசமான்...

நீங்க ஒரு ரசனைக்காரர்ருங்க.

நேசமித்ரன் said...

ரசனைய்யா ரசனை :)

பறவை....அதுதாங் எசமான் மதியம் சைட் டிஷ்ஷா சாப்டது

கானா பிரபா said...

இன்னொரு ஆனந்தாவை இந்த உலகம் தாங்குமாய்யா?

☼ வெயிலான் said...

படமெல்லாம் நல்லாருக்கு பாஸ்!

ILA (a) இளா said...

ஆமாமுங்க எசமான்...

நீங்க ஒரு ரசனைக்காரர்ருங்க//

இன்னமும் உலகம் நல்லா இருக்கா?

கோமதி அரசு said...

''அருணன்,இந்திரன் -திசை அணுகினன்;
இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ-எழ, நயனக்’’

ஆயில்யன்,உங்கள் படத்தைப் பார்த்ததும் திருப்பள்ளி எழுச்சி பாடல் நினைவுக்கு வந்த்தது.

ராமலக்ஷ்மி said...

அழகு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகா வரைஞ்சிருக்கீங்க...
உங்க வர்ணனையை!

goma said...

துவக்கமும் அழகு, முடிவும் அழகு, ...அது அந்த ஆதவனுக்கு மட்டுமே பொருந்தும்

goma said...

துவக்கமும் அழகு, முடிவும் அழகு, ...அது அந்த ஆதவனுக்கு மட்டுமே பொருந்தும்

Unknown said...

எப்போதும் போல போட்டோ அழகாக இருக்கிறது நண்பா..

goma said...

கவிதையும் படமும் இணைந்து போகின்றன.

Rathnavel Natarajan said...

Fantastic pictures